Archive for May, 2014
உமா மகேஸ்வரி

சங்கமம் 2014 தெருக்கூத்து நிகழ்சியின் அணிகலன்கள் வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான திருமதி உமாமகேஸ்வரி அவர்களை மின் அஞ்சல் மூலமாக ஒரு பேட்டி கண்டோம்.அவர் வடிவமைத்திருந்த அணிகலன்கள் மற்றும் ஒபனைகள், நிகழ்சியை கண்டுகளித்த அனைவரது பாராட்டையும் பெற்றது. 1. உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்? என் பெயர் உமாமகேஸ்வரி . எனது ஊர் மதுரை. எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மகன் (13 வயது) […]
மினசோட்டாவில் ஆன்மீகம்

வரலாறு தெரிந்தவரை மனிதன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவனாகவே இருந்திருக்கிறான். உலக நாடுகளில் மக்கள் பல்வேறு கடவுளரை வழிப்பட்டுத் தங்களது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அடிப்படையாக நமக்கு மேலே ஒருவன் நம்மைக் காப்பாற்றுகிறான் எனும் நம்பிக்கை பெரும்பாலான மக்களிடையே உண்டு. வானத்தில் பறந்து வாடிகன் (Vatican) போனாலும் , கால் வலிக்க நடந்து கைலாயம் சென்றாலும் இறைவனை வணங்கும்பொழுது இருகண்கள் மூடி பார்வை உள்நோக்கி இருகரம் கூப்பி வழிபடுவதில் உள்ள ஒற்றுமை விந்தை தான். மனிதனுக்கு வலி பிறக்கையில் […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 2)

ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 12

அத்தியாயம் 11 செல்ல இங்கே சொடுக்கவும் “லாந்து” என்ற வார்த்தையின் பொருள் உலவுதல். ஒரு செயல் நடந்த இடத்தை அந்த செயலோடு தொடர்பு படுத்திச் சொல்வது நம் தமிழ் மரபு. உதாரணமாக போர் நடந்த இடங்களைப் போரூர் என்றும், மன்னர்கள் அல்லது பெரும் வீரர்கள் போர்களில் வீரமரணம் அடைந்த ஊர்களின் பெயரில் “பட்டு”(பட்டுப் போகுதல்) என்ற சொல் இணைந்திருப்பதையும் காணலாம். தாய்லாந்து மக்கள் சுதந்திரமாய் உலவிய இடம் தான் தாய்லாந்து எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். […]
அம்பேத்கர்

வரலாற்றை உற்று நோக்கினால், நாட்டுக்காகத் தன்னலமற்று பணியாற்றிய எத்தனையோ தலைவர்கள், வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டனர். பரந்த சமுதாயப் பார்வையும், மனிதநேயமும், ஆழமான அறிவாற்றலும் கொண்டிருந்த அம்பேத்கரின் நிலையும் அதுதான். இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படும் அம்பேத்கரின் பன்முகத் திறன் வியக்கத்தக்கது. மத்தியப்பிரதேச மாநிலம் அம்பாவாதே எனும் ஊரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ராம்ஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு பதினாலாவது பிள்ளையாகப் […]
அமுதூட்டிய அம்மா

மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .
வேற்றுமையில் ஒற்றுமை

திருக்குறளின்வழியே “வேற்றுமையில்ஒற்றுமை” “பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா செய்தொழில்வேற்றுமையான்” ( குறள் 972) திருக்குறள் முன்னுரை: “தித்திக்கும் தெள்ளமுதாய், திகட்டாததேன்கனியாய், எத்திக்கும்நிறைந்திருக்கும் செந்தமிழ் மாங்கனியின் சுவையினைத் தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றைப்போல வள்ளுவன் உரைத்த இரண்டடித் திருக்குறளின் சிறப்பினைப்பற்றிச் சிறிது காண்போம். பெருமை: “யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழி போல்இனிதாவதுஎங்கும்காணோம்.” -பாரதியார் – தமிழ்மொழியின் சிறப்பினைப் பற்றிக் கூறிட வார்த்தைகள் போதாது, வாழ்ந்து பார்த்தால் தான் உணர்ந்திட முடியும். அத்தகைய வாழ்வினை சிறப்பாக வாழ்ந்திடவும், வாழ்வின் பொருளுணர்ந்து செயல்படவும் வள்ளுவன் தனது நூலில் இயற்றிய குறள் […]
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம். நீங்கள் அனைவரும் எங்களின் அடுத்த வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாத இதழை வெளியிடுகிறோம். இந்த மாதம் முதல் எங்களின் வெளியீட்டுத் திகதிகளைச் சற்று மாற்றி அமைக்கலாமெனத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை ஒவ்வொரு மாதமும் – நாங்கள் தொடங்கிய திகதியான – இருபத்தி ஒன்றாம் திகதி அன்று வெளியிட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழ் முதல், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மத்தியத் திட்ட நேரப்படி (Central Standard Time) இரவு நேரத்தில் […]
நெஞ்சு பொறுக்குதில்லையே

“நான் கொஞ்சம் கீழே வரைக்கும் போய்ட்டு நடந்துட்டு வரேன்” என்று கிளம்பினார் அம்புஜம். “தினம் இப்படி போய் நடக்க வேண்டியது அப்புறம் ராத்திரி முழுக்க மூட்டு வலின்னு முனக வேண்டியது. இதே வேலை உனக்கு” என்று சொல்லியபடி உள்ளே இருந்து வந்தார் சதாசிவம். “மூட்டு வலி ஒண்ணும் நடக்கறதால இல்ல. வயசாச்சு. இந்த மாசி வந்தா 63 வயசு ஆச்சு. மூட்டு வலி வராம என்ன?.. “ஆமாம் பாட்டி ஆகி ஆறு வருஷம் ஆச்சு. “கீழே போனா […]
இன்றைய தகவல் உலகில் நேற்றைய தகவல் முக்கியமா?

காலவரை என்னும் சொல் இயக்கத்தில் முடிவிலியான இன்றைய மின்னியல் நூற்றாண்டிலே ஒரு கேள்விக்குறியே. நேற்று, இன்று என்ற குணாதிசயங்கள் தகவல் அறிவியலில் தொடர்ந்தும் முக்கியத்துவம் வகிக்கின்றனவா என்று நாம் எடுத்துப்பார்க்கலாம். தொடர்ந்து இக்கட்டுரையில் மின்னியல் மற்றும் இலத்திரனியல் நூற்றாண்டு என்ற சொற்கள் ஒரே கருத்தைத்தான் குறிக்கும். அசலும் அதன் இலத்திரனியல் நிழல்களும் காலவரையானது படைக்க பட்ட அசல் பொருட்களைப் பெரும்பாலும் கொண்டு அமைந்த ஒரு சிந்தனை. ஒரு பொருளின் அசல் தன்மையானது அது உற்பத்தி செய்யப்பட்ட நாளில் […]