Archive for June, 2014
அறிந்ததும் அறியாததும் – கூகிள் காகிள்ஸ்

“என்ன மாப்ளே.. அடுத்த மாசம் இந்தியா வரப் போறியாமே ..கேள்விப்பட்டேன்” நான்காண்டுகளுக்கு பிறகு, தொலைபேசியில் கல்லூரி நண்பன் பாலா.. “ஆமாடா மாப்ளே… எப்ட்றா தெரிஞ்சிது?” “அதாண்டா ப்ரெண்ட்ஷிப்… நீ அமெரிக்கா போய்ட்டா மறந்திடுவோமா என்ன?” “ரொம்ப சந்தோஷமா இருக்குடா மாப்ளே .. நீங்கல்லாம் என்னிய மறக்காம இருக்கிறது..” “எதுக்கு மச்சி இதுக்கெல்லாம் ஃபீலாவுற .. எந்த ஃப்ளைட்லே வர்ற” “ஏர் இந்தியாவுல தான் வரேண்டா .. “நம்ப செட்டு பசங்க எப்படி இருக்காங்க .. லொட்டை பாஸ்கர் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 5

முன்கதைச் சுருக்கம்: (பகுதி 4) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் […]
தந்தையர் தினம்

ஜேசன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். பள்ளிப் பேருந்து தெரு முனையில் நின்றது. “பேருந்தை விட்டு இறங்க மனமில்லையா?” எனக் கிண்டலாகக் கேட்டார் பேருந்து ஓட்டுனர் மைக். “சாரி .. மிஸ்டர். மைக்..” சொல்லிக் கொண்டே இறங்கினான் ஜேசன். பேருந்தின் முன் பக்கமாகத் தெருவைக் கடந்து வீடு நோக்கி நடக்க துவங்கினான். ஜேசனுக்கு மிசஸ். வீலர் மீது கோபமாக வந்தது. பிராண்டன் மெமோரியல் எலிமெண்டரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிப்பவன் ஜேசன். மிசஸ். வீலர் அவனது […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-7

(பகுதி-6) தாய்நாடு பற்றிய ஏக்கம் புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் ஆங்காங்கே தாய்நாடு பற்றிய ஏக்கவுணர்வு பிரதிபலிப்பதனைக் காணலாம். தனது வீடு, தனது ஊர், தனது நகரம், தனது தேசம் பற்றிய பிரதிபலிப்புக்களை மிகவும் அற்புதமான முறையில் கவிதைகளில் அமைத்தனர். “கனவு உன்னதமான எனதும் உனதுமான கனவு. ஆலமரங்களுக்கும் அஸ்க்க மரங்களுக்குமிடையிலான ஊஞ்சல் கட்டும் கனவு. பனைக்கும் கிறான் மரத்துமிடையே பாலமிடும் கனவு”18 எமது ஆழ்மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகளும் கற்பனைகளும் கனவுகளாக மேலெழுகின்றன. நீண்ட காலமாக ஊரைப் பிரிந்த […]
எசப்பாட்டு – வயல்வெளி

வெள்ளி யோடைச் சரிகை சீண்ட
பச்சைப் பட்டுச் சேலை பூண்டு
வெட்கி நாணிய கதிரைக் கண்டு
இச்சை நானும் கொண்ட துண்டு
சுவரோவியமாகி தொங்கிய வயல்வெளி மீது!
சுகம்

பறவைகளின் கீச்.. கீச்..
இதமான காலை வெயில்
கதிரவனைக் கண்டு உருகும் பனித்துளி
கோப்பையில் தேநீர்
”அம்மா” வென்று துயில் எழும் மகன்
தாவியணைக்கும் மகள்
உறங்கியபடியே பள்ளிக்குச் செல்லும் மகன்
ஆர்வத்துடன் செல்லும் மகள்
பிரியா விடையளிக்கும் தாய்
காலை நேரம் – சுகமோ சுகம்!
பொறுமை

கோடைக்காலம். அந்தப் பத்து வயது சிறுவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது கடைக்குச் சென்று வாங்கியே தீர வேண்டும். வெயில் கொளுத்துகிறது, சைக்கிளை எடுத்துச் செல்லலாமா? தங்கையோ தானும் வர வேண்டுமென்று துடிக்கிறாள். அவளுக்கும் சைக்கிளில் வர ஆசை. ஆனால் மிகவும் மெதுவாகத்தான் வருவாள். வேலையிலிருந்து அம்மா வரும்வரைக் காத்திருக்க முடியுமா? கண்களில் ஆர்வம், அப்பாவிடம் கேட்கத் தயக்கம். அவரோ கைபேசியை வைப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு அவருடைய வேலை. சரி தாத்தா பாட்டியிடம் கேட்கலாமென்றால் அவர்களுடைய குறட்டை வீட்டுக்குள் […]
எனது இலட்சியம்

அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒரு நாள் தங்களின் விருப்பத்தை மனம் விட்டு பகிர்ந்து கொண்டன. முதல் மரம் சொன்னது…”தங்கம், வைரம் போன்ற செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப் பெட்டியாக நான் ஆகவேண்டும்!”.. “அதிகாரம் நிறைந்த மாமன்னனை சுமந்து செல்லும் கப்பலாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்” என்றது இரண்டாவது மரம். “நான் விண்ணிலே இருக்கும் கடவைள தொடும் அளவுக்கு உயரமாக வளரவேண்டும். கடவுள் என்மீது இளைப்பாற வேண்டும். […]
புதுப்பிறவி!

‘நான் பட்டதெல்லாம் போதும், திரும்ப கணவனோட போனா அது எனக்கு வாழ்வா இருக்காது. நரகமாதான் இருக்கும், தயவு செய்து அந்த ஆளு கூட சேர்த்து வச்சு என்ன நரகத்தில தள்ளிடாதீங்க. காதலனோடு நிம்மதியா வாழ விடுங்க…’ பஞ்சாயத்தார், கூடி நின்ற ஊரார் முன்னிலையில் அழுதுப் புலம்பி மணிகண்டனோடு செர்ந்து வாழ முடியாது என்று ஆணித் தரமாகக் கூறிவிட்டாள் காஞ்சனா. குடும்ப மானத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு வேற்றானுடன் ஓடிவந்து, கற்பிழந்த நிலையிலும், தான் செய்த தப்பை எல்லாம் உணர்ந்து, […]
தமிழே அமுதம்

மலைகடைந்த மலையமுதம் அருவி தன்னில்
மனங்குளிர மாந்திநின்று குளித்துப் பார்த்தேன்
மலைமுகட்டில் கொம்புத்தேன் அமுதம் மொத்தம்
மலையளவு நான்பருகி சுவைத்து உண்டேன்