\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for January, 2015

ஐ பட விமர்சனம்

ஐ பட விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் உருவான, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ஐ படத்தை திரையில் பார்த்த எனது அனுபவத்தை இங்கு பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். “யானை வரும் பின்னே ;மணியோசை கேட்கும் முன்னே” என்பதற்கிணங்க, சங்கரின் திரைப்படமாகிய ஐ வெளிவருவதற்கு முன்பே பரபரப்புகளும் பேட்டிகளும் படக்காட்சிகளும் இணையத்தளத்தில், வலம் வர தொடங்கி விட்டன. இது மேலும் எனது ஆவலைப் பெருமளவில் தூண்டிவிட்டது என்னமோ உண்மைதான். திரைப்படம் வெளிவரும் நாளும், தமிழர் தைப்பொங்கல் நாளும் ஒன்றாக அமைந்துவிட நாட்களை எண்ணத் […]

Continue Reading »

பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்

Filed in கட்டுரை by on January 22, 2015 0 Comments
பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்

முன்குறிப்பு – இந்தக்கட்டுரை  பயம், பூச்சாண்டி காட்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக பெற்றோர்களைச் சற்றுத் தட்டியெழுப்பி  சிந்திக்க வைக்கவே எழுதப்பட்டுள்ளது. கண் இமைக்கவே காட்டாறு மாதிரி ஓடும் மின்தகவல் நூற்றாண்டில் பிள்ளைகளின் கைத்தொடர்பு சாதனங்களைத் தவிர்ப்பதா? மட்டுப்படுத்துவதா? இது நடைமுறைக்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றும் நினைப்போம் நாம். ஆயினும் வளரும் மூளைக்கும் அதி மின்தகவல் நுகர்தலுக்கும் இடையே பிரதி விளைவுள்ள தொடர்புகள் உள்ளன என்கின்றன பத்து வருடங்களிற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள். இதற்கான காரணங்களை மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் […]

Continue Reading »

போண்டா தயாரிக்கும் முறை

Filed in சமையல் by on January 22, 2015 0 Comments
போண்டா தயாரிக்கும் முறை

1 lb உருளைக்கிழங்கு 1 இருவிரல் பிடியளவு மஞ்சள்தூள் (pinch) ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் ½ தேக்கரண்டி உப்பு ½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel) 1 தேக்கரண்டி கடுகு   போண்டாவின் உள்ளிருக்கும் கலவைக்கு   1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் 10 நறுக்கிய பச்சை மிளகாய் 1/4 கோப்பையளவு சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் 1 சின்னவிரல் அளவு நறுக்கிய இஞ்சி 1 சிறு கறிவேப்பிலைக் கொத்து   போண்டா பொரிக்கத் தோய்த்து எடுக்கும் போண்டா […]

Continue Reading »

பணயம்

Filed in இலக்கியம், கதை by on January 21, 2015 1 Comment
பணயம்

பார்க்கிங்கிற்குள் நுழையும் போது ஏழு இருபத்தி நான்காகிவிட்டிருந்தது. போச்சு. இன்று சரியான நேரத்தில் ட்ரெயினைப் பிடிக்க முடியாதெனத் தோன்றியது சாரிக்கு. வழக்கமாக பிடிக்கும் ட்ரெயினைப் பிடித்தாலே நார்த் ஸ்பிரிங்கிலிருந்து ஏர்போர்ட் போய்ச் சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஏழு இருபத்தியாறை விட்டால் அடுத்த வண்டி ஏழு முப்பத்தி எட்டுக்குத் தான். எல்லாம் அந்த வால்வோ சண்டாளனால் வந்தது.   வீட்டை விட்டு சரியான நேரத்துக்குத் தான் கிளம்பினான் சாரி. இத்தனைக்கும் வைஷூ ஸ்கூல் பஸ்ஸுக்கு லேட்டாகி […]

Continue Reading »

நிதர்சனம்

Filed in இலக்கியம், கவிதை by on January 21, 2015 0 Comments
நிதர்சனம்

சரமென பொழிந்த நீர்த்துளி ஓடையில்
சுகித்து மகிழ்ந்து நீராடி ஓய்கையில்
சிப்பியென் இதழோரம் தங்கிய ஓர்துளியை
சிதறாது துடைத்திட ஓர் பணிப்பெண்!

Continue Reading »

குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்

Filed in மொழியியல் by on January 21, 2015 0 Comments
குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்

  22 பயிர்களுக்கு இடையே விளையும் தேவையில்லாத செடிகள் (2) உழவுத் தொழில் புதிர் (Americana)  இடமிருந்து வலம் 1. நெற்பயிர் வளர விதைக்கப்படுவது (4) 2. சக்கரை தரும் பொங்கல் பண்டிகையின் அடையாளம் (4) 3. விளை நிலங்களுக்கு இடையேயுள்ள, நடந்து செல்லக்கூடிய மண் தடுப்புகள் (4) 4. விதைத்து, வளர்த்து, அறுப்பதைக் குறிக்கும் சொல் ; மொத்த உழவுத்தொழிலின் குறிக்கோள் (4) 5. மங்கலகரமான நிகழ்ச்சிகளுக்கு முன் நிற்கும் கிழங்கு (4) 7. காளை […]

Continue Reading »

மனையடி மரபுகள்

மனையடி மரபுகள்

தமிழர்  பண்டைய பிறப்பிடங்களில் குடிமனை கட்டுவதற்கு சான்றோர் பல  வரையறைகளைத் தந்துள்ளனர். இவை மக்களின் அடிப்படை நடைமுறைகளை வைத்து அமைந்திருப்பினும் ஒருகாலத்தில் கடவுளர் வழிப்பாட்டைக் கொண்டு அமைந்தது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் மனையடி மரபுகள் யாவை, முடிந்தளவு அவற்றிற்கான விளக்கங்கள்   என்னவென்று பார்ப்போம். தமிழர் வாழ்ந்த இடங்கள் இடைவெப்பப் பிரதேசங்கள், வட அமெரிக்க வாழ்மக்கள் குளிர் பிரதேங்களில் வாழுகின்றனர். எனவே சில வரையறுப்புகளை நேரடியாக உபயோகிக்க முடியாமலும் போகலாம். எனினும் அவற்றின் பொதுவான […]

Continue Reading »

பொங்கக் காசு

Filed in இலக்கியம், கதை by on January 21, 2015 0 Comments
பொங்கக் காசு

பொங்கலோ பொங்க… பொங்கலோ பொங்க… ஊரு செழிக்க, ஊத்த, மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… தனது கர்ண கொடூரக் குரலுடன் சத்தமாய்ப் பாடிக் கொண்டே, கையிலிருந்த தட்டு ஒன்றில் சிறு குச்சியால் தட்டிக் கொண்டே வீட்டு முற்றத்தில் பொங்கி வழியும் பொங்கல் பானையைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றார் ராமச்சந்திர அம்பலம். அவரைப் பின்பற்றி அவரின் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் முதல் மருமகள், […]

Continue Reading »

புதுமைப் பதுமை

Filed in இலக்கியம், கவிதை by on January 21, 2015 0 Comments
புதுமைப் பதுமை

வழிமீது விழிவைத்துக் காத்திருந்தாள், கன்னல்
மொழிபேசி மனங் கவரும் ஏந்திழையாள்
களிபாடிச் சேர்ந்திருக்கப் பார்த்திருக்கும், சிற்பி
உளிபேசும் சிறப்பான கற்சிலையாய்…

Continue Reading »

பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை

பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை

மினசோட்டா மாநிலத்தில் பிள்ளைகளும், ஆர்வமிக்க பெற்றோரும் சேர்ந்து மகிழ இயங்கும் மாதிரி உருவகப் புகையிரத நுதனசாலை ஒன்று உண்டு. இவ்விடத்தில் மூன்று தலைமுறைகள் வந்து போவது சகசமான விடயம். பாட்டன், பாட்டி தொட்டு, அப்பா, அம்மா குழந்தைகள் குழுவினர் பலரை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இது செயின்பால் (St Paul) நகரில் உள்ள 1880களில் கட்டப் பட்டு மீண்டும் பழமை பேணி மீள் சீரமைக்கப்பட்ட பண்டானா சதுக்கத்தில் (Bandana Square) இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. இந்த நூதனச் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad