Archive for January, 2015
நீ இங்கு நிஜமானால்…

ஒத்தயில நிக்கும் புள்ள
ஒளிவிளக்கில் ஒளிரும் முல்ல
சித்தமெல்லாம் கலங்கிப் போக – என்
சிந்தையிலே வந்தாய் பெண்ணே
டுவின் சிட்டீஸ் தமிழர் திருவிழா

சனவரி மாதம் 17ம் திகதி சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலைவரை டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் Twin Cities Tamil Association (TCTA) தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை தமிழன்பர்களுடன் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி ரிச் ஃபீல்ட் நடுநிலைப் பள்ளியில் Rich Field Middle School நடைபெற்றது. தமிழர் திருவிழாவில் பள்ளி செல்லும் பாலகர்களிலிருந்து துள்ளி விளையாடும் சிறுவர் சிறுமியர் தொட்டு பெரியவர்கள் வரை யாவரும் மேடையிலும் அவையிலும் பங்குபெற்று சிறப்பு சேர்த்தனர். தமிழர் திருவிழாவானது தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னர் திரு […]
சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்)

சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்) குளிரும் இருள் சாரலும் அதிகமாகும் மார்கழிப்பனியிலே யாவரையும் குழந்தைகளாக்கி மனதார அனுபவிக்க வைக்கும் ஒளி மயமான கோலாகலமே மினசோட்டா மாநில மேசிஸ் அலங்காரம். இம்முறை சாண்டாவின் உதவியாளர்களாகிய எல்வ்ஸ் எனும் கற்பனை மனிதர்களின் வாழ்க்கை அடிப்படையில் அலங்காரக் கண்காட்சி அமைக்கபெற்றது. இதற்காக சாண்டா, அவரது பாரியார், மேலும் 76 எல்வ்ஸ்களின் அசையும் உருவகங்கள் அமைக்கப்பட்டதாம். மினியோப்பொலிஸ் நகரி்ல் 52 வருடங்களாக டெயிட்டன் மார்ஷல் ஃபீல்ட் தாபனங்கள் (தற்போதைய மேஸிஸ் நிறுவனம்) […]
என் காதலி

தூரிகையில் தோன்றிய தேவதையே!
சிலர் காதலிக்க கவிதை எழுதுவர்!
சிலர் காதலித்து கவிதை எழுதுவர்!
நான் கவிதை எழுத உனைக் காதலித்தேன்!!!
யோகியின் சித்ததில் உதித்து
கணினியில் வளர்ந்தவளே!
கனை எடுத்து உனை வெல்லேன்!
என் கவி கொண்டு உனைக் கொள்வேன்!!!
உறைபனியில் மீன் பிடித்தல்

அமெரிக்காவிலுள்ள மினசோட்டா மாகாணம், மற்றும் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணங்களில் வாழும் மக்கள் பனிக்காலத்தில் பல்லாயிரம் ஏரிகள், ஆறுகளில் இந்நாட்டு மக்கள் பலர் உல்லாசமாகப் பனிக் கொட்டில் (icehouse/tent) கட்டி மீன் பிடிப்பதைப் பார்த்திருப்போம். உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து வந்த மக்களாகிய எமக்கு உறைபனியில் குளத்திற்கு நடுவில் போவது பாதுகாப்பானதா என்றும் தோன்றும். ஆயினும் வடஅமெரிக்க மாநிலங்கள், மாகாணங்கள் உறைபனியை அதிகம் பெறுவதால் இவ்விடம் வாழும் மக்கள் நீர் உறையும் தட்ப வெப்பங்களை அறிந்து, உறைபனிப் பருமனையும், மற்றைய […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10

விசாச் சிக்கல் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் தாம் சென்று குடியேறிய நாடுகளில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதிப் பத்திரம் (எளைய) இன்றியே பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் அந்தந்த நாட்டிற்குரிய சட்டங்களின்படி புலம்பெயர்ந்து சென்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். வேறு சிலர் சிறை வைக்கப்பட்டனர். பலர் அபராதத் தொகையுடன் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் பலர் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தாம் எண்ணி வந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போக, புலம்பெயர்ந்த நாடுகளிலும் இவர்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட தமது எதிர்காலக் […]
வாசகர்களுக்கு வணக்கம்

வாசகர்களுக்கு வணக்கம் மற்றும் 2015 ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் !! உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி முடித்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில், வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். என்ற பொய்யாமொழிப் புலவனின் கூற்றுக்கொப்ப, விவசாயமே எல்லாச் சமூகங்களின் முதுமெலும்பான துறையாக இருந்து வந்துள்ளது. கடவுள் என்னும் முதலாளி நேரடியாகக் கண்டெடுத்த தொழிலாளி விவசாயி மட்டுமே […]