\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for February, 2015

சங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும்

சங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும்

‘சங்கமம்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? ரஹ்மான் ‘சிந்ததசைசரில்’ நாட்டுப்புற மெட்டில் இசையமைத்த படம் நினைவுக்கு வருகிறதோ அல்லது, அந்தப் படத்தை ஒரே மாதத்தில் டி.வி.யில் போட்டது நினைவுக்கு வருகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் மினசோட்டாத் தமிழர்களுக்கு இனி நினைவுக்கு வருவது – இங்குள்ள தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் ‘சங்கமம்’ நிகழ்வாகத்தான் இருக்கும். மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மினசோட்டா வாழ் தமிழர்கள் கூடிக் கொண்டாடும் திருவிழா தான் […]

Continue Reading »

வித்தியாசம் என்ன?

வித்தியாசம் என்ன?

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

சங்கீதமே என் பிராண வாயு – திருமதி. நிர்மலா ராஜசேகர் பேட்டி

சங்கீதமே என் பிராண வாயு  – திருமதி. நிர்மலா ராஜசேகர் பேட்டி

கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் திரு. பால முரளி கிருஷ்ணாவின் கையால் சங்கீத விபன்ஷி என்ற விருது பெற்றவர். எம். எஸ். சுப்புலக்‌ஷ்மி அம்மாவின் கையால் தொடங்கி வைக்கப்பட்ட, கல்லூரிக் கால கர்நாடக சங்கீத அமைப்பு ஒன்றின் தொடக்க கால உறுப்பினர், திரையிசை மற்றும் கர்நாடக இசையில் இன்றும் கொடிகட்டிப் பறக்கும் பல சங்கீத மாமேதைகளுடன் நட்புக் கொண்டுள்ள இனிய தோழி, திருமதி. கற்பகம் சுவாமிநாதன், திரு. டி.ஆர். சுப்பிரமணியம், வீணை காயத்ரியின் தாயார் திருமதி. கமலா […]

Continue Reading »

அமெரிக்க இருதய மாதம்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
அமெரிக்க இருதய மாதம்

நான் விசேட விரைவோட்டப் போட்டிக்காரனும் இல்லை, விளையாட்டு வீரனும் இல்லை எனக்கேன் இருதய நாடிக்கணக்கு? என்று நாம் கேட்டுக் கொள்ளலாம். இதன் காரணம் காலாகாலத்தில் வயது ஏறுதல் மற்றும் இளமுதிர்வு காலத்தை (40 – 55 வயதுகள்) அடைதல் போன்றனவாகும். இந்தக் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய இருதயப் பிரச்சினைகளை முடிந்த அளவு முன்கூட்டியே தெரிந்து கொள்ளுவது என்பது தான் விவரம் தெரிந்த மருத்துவ நிபுணர்கள் தரும் பதில். எமது இருதய அடிப்பு அல்லது நாடித்துடிப்பு என்பது எத்தனை தரமுடன் […]

Continue Reading »

எசப்பாட்டு – உலகக் கோப்பை

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2015 0 Comments
எசப்பாட்டு – உலகக் கோப்பை

  உலகக் கோப்பையென உலாவரும் ஆட்டம் உழைப்பவன் படைப்பவன் அனைவரின் நாட்டம் உண்மையில் பார்க்கையில் உழன்றிடும் தேட்டம் உயர்வறுத்து பந்தயமே பெரிதாக்கும் கூட்டம் !!   திறமைமிக்க அணியே தேர்ந்து வென்றிடுமென திடமாய்ச் சொல்லிடவியலா திறனற்ற அவலம் திக்கெட்டும் புகழ்மணந்த தீர்க்கமான ஆட்டமது திசைதவறிப் போனதோவெனத் திகைத்தழியும் தருணம் !!!   ஆடுபவன் அனைவருமே அறிவில்லா மடையனாகும் ஆட்டத்தைக் களித்திடும் அண்டமெலாம் மூடர்களாம் ஆங்காரமாய்ச் சொல்லிட்ட அறிவாளி சரியெனவே ஆக்கியது இவர்களின் அளவற்ற பணத்தாசை !!!   […]

Continue Reading »

நிலையாமை

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2015 0 Comments
நிலையாமை

  இடுப்பு வலியால் இல்லாள் துடிக்க இங்கும் அங்கும் இவன்நடை பயில இருக்கும் அனைத்து இதந்தரு மனிதரும் இதமாய் வருடி இவர்கட்கு உதவிட இரவு முழுவதும் இடையறாத் துடிப்புடன் இழுத்துப் பிடித்த இவளின் உறுதியும் இறைவன் அருளும் இணைந்து செயல்பட இவ்வுலகு தோன்றிய இணையிலாப் பிறப்பு இனிய குழந்தை இன்னல் துரத்தி இன்பம் கொடுத்து இமைக்கும் முன்னரே இரத்தம் கொதித்து இளமை எய்திட இரவு பகலென இருபொழுதிலும் உழைத்து இரந்து பிழைத்திடும் இழிநிலை ஒதுக்கி இகத்தில் அனைத்தும் […]

Continue Reading »

இராமரின் இரு முகங்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 2 Comments
இராமரின் இரு முகங்கள்

இறைவன் பூமியில் தினம் தினம் பல அவதாரங்களாக தோன்றி வாழ்த்திக்கொண்டு இருக்கிறார். தந்தையும் தாயும் நமக்கு முன்னறி தெய்வமன்றோ? விஷ்ணு பகவானும் இப்பூவுலகில் பல அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் சிறந்ததாகப் பத்து அவதாரத்தைச் சொல்லுவர். அந்தப் பத்து அவதாரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது இராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள். இவ்விரு அவதாரங்களைப் பூரண அவதாரம் என்று சொல்லுவர். மற்ற அவதாரங்களைப் போல் இல்லாமல், தாயின் வயிற்றில் தோன்றி, பிள்ளைப் பருவம் தொடங்கி இறப்பு வரை இருந்தபடியால் அவ்வாறு […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]

Continue Reading »

மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2015 0 Comments
மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

இலங்கை யாழ்ப்பாணத்தில் கறி வாழைக்காய் அல்லது சமைக்கும் வாழைக்காய், சாம்பல் மொந்தன் எனும் வகை வாழைக்காய்களைப் பல வகையான சம்பல் மற்றும் பச்சடிகளிற்கும் பாவிப்பர். இதனை  இந்தோனேசிய மற்றும் மத்திய ஆப்பிரிக்க மக்களும் சமையலில் உபயோகிப்பர். வாழைக்காயானது உருளைக்கிழங்கு, கோதுமை போன்றவற்றை விடக் குறைந்த சக்கரையைக் (low glycemic index) கொண்டது. ஆயினும் அதன் உயிர்ச் சத்து (vitamin C) உயர்ந்ததாகவே காணப்படும். மொந்தன் வாழைக் காய்ச் சம்பல் மதிய  உணவுடன் சேர்த்துக் கொள்ளச் சிறந்த பக்க […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad