Archive for February, 2015
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாதம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். பல செழிப்பு மிக்க மொழிகள் அதிகார பலம் பொருந்திய சில மொழிகளால் தொடர்ந்து வழக்கொழிக்கப்பட்டு வருவதை உணர்ந்த நல்லவர்கள் சிலரின் முயற்சியால் யுனெஸ்கோ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தினம் தான் இந்த உலகத்தாய் மொழி தினம். ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதம் 21ஆம் திகதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலங்காட்டியில் ஒரு திகதியை எடுத்துக் கொண்டு அதனை ஒரு குறிப்பிட்ட தினமாக […]
மஞ்சள் ஹாஃப் சாரி

சுவாரசியமாகக் கல்லூரி நண்பன் ஒருவன் வாட்ஸப்பில் அனுப்பியிருந்த வீடியோவை பாத்ரூமில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சேகர். ‘ஏங்க.. யாரோ தொத்தாவாம் .. இந்தியாலேருந்து கூப்பிடறாங்க’ கதவைத் தட்டினாள் மகா. ‘இந்தியாவிலிருந்தா? திரும்பக் கூப்பிடறேன்னு சொல்லி நம்பர் வாங்கி வெச்சுக்கோ’ கண்ணை செல் ஃபோனிலிருந்து எடுக்காமல் சொன்னான் சேகர். ‘சீக்கிரமா வாங்க.. உள்ளே போய் அரை மணி நேரமாவுது’ வீடியோ முடிந்த பாடில்லை .. பாவ்லாவுக்காக ஃப்ளஷ் பண்ணிவிட்டு வெளியே வந்தான் சேகர். மகா கொடுத்த நம்பரைப் பார்த்தால் […]
லெமுரியா

லெமுரியா பற்றி ஏற்கனவே பல விடயங்களைப் பனிப்பூக்கள் இதழ்களில் பார்த்திருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லெமுரியா என்ற கண்டம் பற்றிய மூல வரலாற்றைப் பார்க்கலாம். சுமார் 19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்குத் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் என்ற தீவில் லெமுர் என்ற விலங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விலங்கு மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான ஒரு மூலமாக இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்களால் நம்பப்பட்டது. இந்த வகை விலங்குகள் பார்ப்பதற்கு 50% குரங்கு, 25% மனிதன், 10% பூனை, 15% அணில் […]
எம். கே. தியாகராஜ பாகவதர்

“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை” சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகள் இவை! பதினான்கு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து தமிழ்த் திரையுலகில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவரின் இறுதிக் கால வார்த்தைகள் இவை! பளபளக்கும் சரீரம், கருகருத்த நீண்ட கேசம், பட்டுச் சட்டை, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, ஜவ்வாதுப் பொட்டு, வைரக் கடுக்கன், பத்து விரல்களிலும் மோதிரம், கணீரென்ற குரல் இவற்றின் மொத்த உருவமாக, ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்துடன் […]
ஊட்டச்சத்தும் ஊகங்களும்

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது, நமக்கு மட்டுமல்லாது நமது பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டுதலுக்கும் உதவும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு விழிப்புணர்வு நோக்கில் எழுதப்பட்டதே தவிர பரிந்துரை அல்ல. மார்ச் மாதம் ஊட்டச்சத்தினை வலியுறுத்தும் மாதம் ( National Nutrition month). ஊட்டச்சத்து எனும் சொற்பிரயோகம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் மட்டுமே தொடர்புடையது என்று பலரும் நினைக்கிறோம். நம் அனைவருக்கும் உடல் முக்கியமானதொரு சொத்து. சுவர் இருந்தால் தான் சித்திரம் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10) பண்பாட்டுச் சிக்கல் உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் தனித்துவமான மொழி, பண்பாடு என்பன இன்றியமையாதனவாக அமையப் பெற்றிருக்கும். எதை விட்டுக் கொடுத்தாலும் தமது தனித்துவத்தின் அடையாளங்களான இவற்றை விட்டுக்கொடுக்க இலகுவில் யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இவை சவால் நிறைந்ததாக மாறியிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற பலர் தாம் வாழ்கின்ற நாடுகளில் தமது பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றனர். கலாசார விழாக்களை வருடந்தோறும் […]
மாற்றமே உலக நியதி

அதிகாலை மணி நான்கு. திடீரென்று யாரோ உசுப்பியது போல எழுந்தார் சதானந்தன். ஒரு விநாடியில் முழுவதுமாக விழித்தும் விட்டார். இனம் புரியாத ஒரு சங்கடம் அவர் மனதில் உருவானது. அது என்னவென்று புரியவில்லை. சிறிது நேரம் கண் மூடி உறக்கம் செய்ய முயற்சித்தார். பலன் இல்லை. அருகில் வித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் அவளைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருந்தார். உடல், மனம் இரண்டும் உறங்க மறுத்தது. இன்று அவர் வாழ்வின் முக்கியமான நாள். அவரது […]
பெண்ணின் பெருந்தக்க யாவுள

யாரோ தன் அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு ,தூக்கம் கலைந்து , கண்களை மெல்லியதாய்த் திறந்தாள் காவ்யா. வார்டு பாய் வந்து பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றான். மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து ,தாங்கித் தாங்கி நடந்து சென்று முகம் கழுவி மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தாள் . இரவு நன்றாக மழை பெய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரியின் மெல்லிய திரைச்சீலைகள் விலகி, கொஞ்சம் குளிர்ந்த காற்றைத் தந்தது. சூடான பாலைக் குடித்தபடியே திரைச் சீலைகளை ஒதுக்கியபடி […]
பொய்க்கால் குதிரை ஆட்டம்

கடந்த வருடம் அலுவலகப் பணி காரணமாக தமிழகத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது. அமெரிக்காவிலிருக்கும் எங்கள் கணிப்பொறிக் குழுவின் தலைவரிடம் பேசிப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய, மல்லிகைக்குப் பெயர் பெற்ற, தூங்கா நகர் என்று புகழ் பெற்ற, தமிழிற்குச் சங்கம் வைத்து வளர்த்த, நான் பிறந்த (இது முக்கியம்) பெருமைமிகு ஊரான மதுரையில் இருந்து பணி செய்யும் ஒரு வாய்ப்பினைப் பெற்றேன். தினமும் கிடைத்த காலை நேர வேளையில் ஏதேனும் ஒரு தமிழர் கலையை நமது ஊரிலேயே பயின்றால் […]
என்னை அறிந்தால்

மாசி 2015 இல் வெளிவந்து, இன்றுவரை உலகெங்கிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் “என்னை அறிந்தால்” திரைப்படத்தை திரையில் பார்த்து இரசித்த எனது சுய அனுபவத்தை, இங்கு பரிமாறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். வழமைபோல இங்கும் திரையின் கதையை விவரிக்காமல் அதே நேரத்தில் திரைப்படத்தில் உள்ள குறை நிறைகளை எந்தவித பாரபட்சம் இல்லாமல் எனது சுய கருத்தை, குறிப்பாக இரசித்த காட்சிகளை, இங்கே சுருக்கமாக கூற விரும்புகிறேன். பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையில் பங்கு பெறும் […]