Archive for October, 2015
ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்

ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை. ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம். ஒரு பவுண்ட் ஆப்பிள் – வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா – வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு […]
அந்தமும் ஆதியும்

இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம், சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். உலகிலுள்ள அத்தனைக் கலைச் செல்வங்களையும் நம் நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கச் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்பதே அவரின் அறிவுரை. தமிழர் எட்டுத் திக்கல்ல பதினாறு திக்குகள் என்று கூடச் சொல்லலாம். பல செல்வங்களைச் சேர்த்தோம். கலைச் செல்வங்கள் என்று குறிப்பாகக் கூறமுடியாது. ஆனால் பிறந்த தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளோம் என்றே குறிப்பிட வேண்டும். அதுபோன்ற சாதாரணப் […]
தீபாவளித் திருநாள்

ஹிந்துக்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் மிகப் பிரசத்தி பெற்றது தீபாவளிப் பண்டிகையாகும். கொண்டாடப்படும் எல்லாப் பண்டிகைகளுக்கும் ஒர் அர்த்தம் உண்டு. அதைப் புரிந்து கொண்டாடுவதே நலம். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள் வாழையடி வாழையாகத் தலைமுறை தலைமுறையாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இன்றைய காலக்கட்டதில் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்று வருவதால், கற்றுக் கொடுக்க நேரம் கிடைப்பதில்லை. இந்தப் பண்டிகையின் சிறப்பை ஒரு கட்டுரையில் கூற முடியாவிட்டாலும், அதன் விளக்கத்தை மேலெழுந்த அளவில் தொடங்கி வைப்போம். ஒரே […]
சித்த மருத்துவம்

உலகின் மூத்தமொழியான நம் தமிழ்மொழியில் இருக்கும் பலகலைகளில், நம் மக்களோடு ஒன்றிணைந்து, நம் வாழ்வியலோடு இணைந்திருக்கும் மிகமுக்கிய கலை சித்த மருத்துவ கலையாகும். சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடந்த 22 ஆண்டுகளாக மக்களுக்குச் சிறப்பாக மருத்துவ தொண்டாற்றிவரும் , சித்த மருத்துவர் ப.செல்வ சண்முகம் எம்.டி (சித்தா), பி.எச்.டி அவர்கள் , நம் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் , 09/27/15 அன்று, ரிட்ஜ்டேல் நூலகத்தில் “சித்த மருத்துவ அடிப்படையும்,வாழ்வியல் முறைகளும்” […]
தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்

அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம். காது வலி – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும். குமட்டல் (Feeling to vomit )– […]
எசப்பாட்டு

மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1

Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது. Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க […]
பகுத்தறிவு – 1

இன்றைய நிலையில், தமிழ் பேசும் பலரும் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என்ற முடிவுக்கே வந்து விட்டனர். கோயிலில் இருக்கும் சிலை கல்லென்றும், அதனைப் பூஜிப்பது மூட நம்பிக்கையென்றும் பறை சாற்றும் ஒரு கூட்டம் தெருமுனைப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கற்சிலைகளைச் செருப்பாலடிப்பது எப்படி புத்திசாலித்தனமென்று நம் சிற்றறிவிற்கு எட்டவில்லை. கல்லைக் கடவுளாய் நினைத்துப் பூஜிப்பது முட்டாள் தனமென்றால், கல்லை எதிரியாய் நினைத்துச் செருப்பாலடிப்பதும் முட்டாள் தனந்தானே? அண்ணாசாலையில் இருக்கும் தலைவர்களின் சிலை மட்டும் எவ்வாறு […]