Archive for March, 2016
கண்டுபிடி மிஸ்டர் ஸ்லையை!!

ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிபடுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடிச் சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்துக் கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள். சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்திச் செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் […]
தனிமை தரும் சமூகவலயமா?

சமூகவலயம் தனிமை தருமா? இந்தக் கட்டுரையின் தலைப்பே சரியாகப் படவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். வாருங்கள் இதைப் பற்றி மேற்கொண்டு அலசுவோம். சுமார் பத்து வருடங்களின் முன்னர் நியுயார்க் நகரத்திற்கு அருகாமையில் கனக்டிக்கட் மாநிலத்தின் கீரீன்விச் எனப்படும் ஒரு நகரத்தில் நடந்த சம்பவம். கீரீன்விச் அமெரிக்காவிலேயே மிகவும் வசதி மிகுந்த மத்திய அத்திலாந்திக் சமுத்திரக் கடற்கரையோர நகர் எனவும் கூறிக்கொள்ளலாம். இந்த நகரில் ஒரு சம்பவம் யாவரையும் பேச வைத்தது. பாரிய சொத்துடைய செல்வந்தப் பெண்மணி ஒருவர் […]
கவித்துளிகள்

பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !
வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !
தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி
உலகத் தாய்மொழி தினம் – 2016

அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் […]
திருவிவிலியக் கதைகள்: அழிவையல்ல…. மனமாற்றத்தையே…..!

(திருவிவிலியக் கதைகள்) கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை, எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார் பொல்லாதவர் என்று அவர் வேறுபாடு பார்ப்பதில்லை. அவரது அறிவுறுத்தும் வார்த்தையைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்புத் தருகிறார். அடித்தலை விட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார். முன்பொரு காலத்தில் அதாவது கி.மு. 600 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆஸ்ரியா என்ற ஒரு பேரரசு இருந்தது. அதனுடைய தலைநகரம் நினிவே என்ற அழகான […]
குமரிக்கண்டம் எதிர்கோணம்

குமரிக்கண்டத்தின் எதிர்கோணம் என்றவுடன் குமரிமுனைக்குத் தெற்கேயும் இன்றைய ஈழம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதாகவும், அதற்கும் தெற்கே இன்னும் பெரும் நிலப்பரப்புடன் இருந்ததாக அறியப்பட்ட லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தை இந்தியாவிற்கு வடக்கே இருந்ததாக சொல்லப் போகின்றாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் அது இந்தியாவிற்கு வடமேற்குத் திசையில் இருந்ததாக இந்த கட்டுரையில் சொல்லப் போகிறேன். லெமூரியா என்பது தமிழ் இலக்கியங்களின் சான்றுப்படியும், சில அறிஞர்களின் கூற்றுப் படியும் சுமார் 3000 மைல் அடங்கிய ஒரு மாபெரும் கண்டமாகத் […]
முதுமையும் மழலையே

அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான். “பத்ரி எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு, “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]
நாப்பதுக்கு மேலே…

ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

2016, மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் பல திருப்பங்களைத் தந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவையும் அரசியல் சலசலப்புகள் விட்டு வைக்கவில்லை. பல மாநிலங்களில் பிரைமரி மற்றும் காகஸ் நடந்து முடிந்துள்ளன. இரண்டு கட்சிகளிலும் யார் அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகத்துக்கு இதுவரை, எந்தத் தெளிவுமில்லாத நிலை நீடிக்கிறது. நாம் முன்னர் பார்த்தபடி ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிகளைக் […]
ஆணவம் கொ(ல்)ள்வோம்

உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !
காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !