Archive for November, 2017
மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

உடல், பொருள், நாடி, நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]
ஹாலோவீன்

ஆதவன் சற்றே இளைப்பாற அந்திமம் சற்றே பவனி வர விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடி உலாவரும் குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே இன்முகத்தை முகமூடிக்குள் மறைத்தே இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே விந்தைபல காட்டி வியக்கச் செய்தே இனிப்புகளை அள்ளிச் சென்ற ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே சாகசமாய் எண்ணி மகிழ்வித்த ஹாலோவீனே இல்லாத ஆவியையும் பிசாசையும் இன்பமாய் கொண்டாடி மகிழவே காண்பவருக்கு பயத்தினையும் அணிபவருக்கு இன்பத்தையும் […]
இரவல் சொர்க்கம்

‘ஓர் உயிரைக் காப்பாற்ற இன்னோர் உயிரைப் பறித்தது முறைதானா?’ ‘பிள்ளையைக் காக்க கணவருக்கு முடிவளித்தது சரியா?’ ‘வாழ்வில் இனி எனக்கு நிம்மதி கிட்டுமா?’ கத்தியின்றி இரத்தமின்றி கேள்விகளாலேயே ரணமாக்கும் வல்லமைகொண்ட வக்கீலான மனசாட்சியிடமிருந்து தப்ப முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் ஆதிரை. கேள்விகள்…. கேள்விகள்…. விடாது துரத்தும் கேள்விகள்… எங்கே ஓடுவாள் ஆதிரை? ஓடத்தான் முடியுமா? கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக ஓடி ஓடியே உருத்தெரியாது போய்விட்டாளே! இனியும் ஓடுவதில் அர்த்தமில்லை எனும் நிலையில் சுருண்டு விழுந்தவளுக்கு, அந்த ஆயாசம்கூட […]