Archive for November, 2017
“லக்ஷ்மி” குறும்படம்

அண்மையில் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ள குறும்படம் – லக்ஷ்மி. முழுநீளத் திரைப்படங்கள் பலவும் கவனிக்கப்படாமல் போய்விடும் காலக்கட்டத்தில் குறும்படம் ஒன்று மக்களைச் சென்றடைந்துள்ளது மகிழ்வளிக்கிறது. இதற்கு படத்தில் கையாளப்பட்டுள்ள கருத்தும் காரணமாயிருக்கலாம். மிகச் சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மி எனும் பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவம் பற்றியது தான் கதை. கணவன், ஒரு பிள்ளை என்ற சிறிய வட்டத்துக்குள் இயந்திரமாக வாழும் லக்ஷ்மி, ஒரு சந்தர்ப்பத்தில் அந்நியன் ஒருவனின் அன்பில் […]
மறு பிறவி

சிவந்த மண்ணில் புதைந்தேன். தளிர் விட்டு முளைத்தேன். தண்ணீர் குடித்து வளர்ந்தேன். உரம் உண்டு செழித்தேன். கிளைகள் பல விட்டேன். நிழலைப் பலருக்குக் கொடுத்தேன். பூக்கள் பலர் கவரப் பூத்தேன். தேனீக்களைத் தேடி வரச் செய்தேன். சுவையான கனியானேன். சிறார்களிடம் கல்லெறி பட்டேன். அணில்கள் சுவைக்கும் பழமானேன் ரசித்து உண்ண பழம் கொடுத்தேன் இறைவனுக்கு என்னை அற்பணித்தேன் புயலில் நான் சரிந்தேன் கேட்பார் அற்று கிடந்தேன் என் முடிவை நெருங்கினேன் அடுப்புக்கு காய்ந்த விறகானேன் சுவைத்து […]
குடிமகனின் மகன்

1966 ஆண்டில் நான் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றபின், சிறீ லங்கா தொலை தொடர்பு திணைக் களத்தில் சிரேஷ்ட பொறியியலாராக உத்தியோகம் கிடைத்து வேலை செய்த காலகட்டத்தில், எனக்கு அறிமுகமான பல இன நண்பர்கள் அதிகம். அதற்குக் காரணம் நான் தமிழ் ஆங்கிலம், சிங்கள மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதோடு எல்லோருடனும் அன்பாகப் பழகும் குணம் உள்ளவன். அப்போது திருமணமாகாத நான் தங்கியிருந்தது கொழும்புக்கு அருகேயுள்ள வெள்ளவத்தையில், சம்மரி என்று அழைக்கப்படும மூன்று அறைகளைக் கொண்ட வாடகைவீட்டில். […]
சொற்சதுக்கம் 6 – விடைகள்

விடைகள் பரி பசி வரி ரசி வசி தரி சிரி தவம் சிரம் படம் வடம் பதம் வதம் ரதம் தடம் வரம் தனம் வனம் பம்பரம் வதனம் பரதம் தரிசி டம்பம் ரம்பம் சிதம்பரம் – ரவிக்குமார்
சொற்சதுக்கம் 6

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்துக்கள் கொண்டவையாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்டவையாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்குத் தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்
மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம்

மின்னியாபொலிஸ் நகரில் உள்ள மிகப்பெரிய மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைப்பெற்றது. -சரவணகுமரன்
வீடற்ற மனிதர்கள் யாம்

வீடற்ற மனிதர்கள் யாம் வீணாகிப் போனோமே வீடேறும் காலம் வரை வீதியிலே வாழ்வோமே விதியாலே நொருங்கி நின்றோம் வித்தையெல்லாம் மறந்து நொந்தோம் வீராப்பு, விறல் எல்லாம் விரைவாக களைந்து நின்றோம் விலங்கு போலே நடத்திடுவார் விரைந்து எம்மை கடந்திடுவார் விரல் பட யோசிப்பார் விலக்கி வைக்க முயன்றிடுவார் வீடற்ற மனிதர்கள் யாம் வீணாகி போனோமே வீடேறும் காலம் வரை வீதியிலே வாழ்வோமே வினா ஒன்று கேட்கின்றேன் விளக்கிடுவீர் விடை தெரிந்தால் […]
மரம்கொத்திப் பறவை

கொத்திக் கொத்தி நீ யெழுப்பு மோசைகூட புத்திக்கு இதமாய் இசையாய் யமைந்ததுவோ சங்கேத ஒலியிலுன் சகாக்களுடன் நீகுலவும் சங்கீதக் காதல் மொழிக்கொரு சான்றாகுமாம் கூரிய மூக்கால் முட்டி மரப்பட்டை யுரிக்கும்போது வீறியெழும் வேகமுடன் குத்தியெழும் ஒலிதான் இசைவடிவம் தருகின்ற எதிரொலியா யெங்கும் விசையுடன் வெளியே வெகுவாய்க் கேட்குமாம் இலைகளும் பூக்களுமுன் இன்னிசை கேட்டு இசைந்தினிதே ஆடும் – மரமெல்லாம் தாளமிடும் மரமீதில் அமர்ந்தாடித் தலையசைத் தாடுமழகேயது மாபாரதத்தின் பெருமை சொல்லும் பரதமாகும் மரங்களை […]