\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for August, 2018

மாங்குளம் வன்னியின் சுவை உணவகம்

மாங்குளம் வன்னியின் சுவை உணவகம்

வன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]

Continue Reading »

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018

இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. சுமார் இரண்டு […]

Continue Reading »

பௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா

பௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா

பூர்வீக மக்கள் மிதேவாகட்டன் சூ சமூக வசிப்பி 2018 Mdewakanton Sioux Community Wacipi உங்கள் அனைவரையும் நல்லிதயத்துடனும், இதமான  கை குழுக்களுடனும் வரவேற்கிறோம் என்றது மினசோட்டா மாநில சாக்கோப்பி நகர  மிதேவாகட்டன் பூர்விகத்தினர் சமூகம். இது வருடா வருடம் கோடை முடிவில் ஆகஸ்ட் மாத நடுவில் வரும் வார இறுதி மூன்று நாட்கள் நடைபெறும் நடன உற்சவம் ஆகும். இம்முறை ஆகஸ்ட் 17, 18, 19 ஆம் தேதிகளில் இந்நிகழ்வு நடை பெற்றது. வசிப்பி என்றால் […]

Continue Reading »

கமலின் விஸ்வரூபம்

கமலின் விஸ்வரூபம்

பலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]

Continue Reading »

ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

“ஜனா..” “ம்ம்.. சொல்லு ..” “அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம். “.. எப்போ…”.. “இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..” “அம்மா எப்படியிருக்காங்க..” “அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..” … “ஹலோ.. ஜனா? ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..” “சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “ “அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் […]

Continue Reading »

தலைவன் இருக்கின்றான்!

தலைவன் இருக்கின்றான்!

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை! காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர்! வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி! ஓய்வறியாச் சூரியனாகத் திகழ்ந்த கலைஞர் அவர்களை உலகெங்கும் […]

Continue Reading »

வேலை தேடுங்க !!!

வேலை தேடுங்க !!!

அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருட் செல்வமாகும். ஆசைகளைப் பெருமளவு அடக்கி, எளிமையான வாழ்வு நடத்துபவருக்கும் பொருள் என்பது இன்றியமையாததே. முற்றும் துறந்த ஞானியர் தவிர மற்ற அனைவரும், பொருளீட்டும் முயற்சியில் முழுவதும் ஈடுபடுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுபோன்ற பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஒப்ப ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிவதும் உலக வழக்குகளில் ஒன்றே. அவ்வாறு […]

Continue Reading »

நட்புக்கான நந்நாள்

நட்புக்கான நந்நாள்

பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார்  அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]

Continue Reading »

ஆர் யு ஹங்ரி 2018 ஆம் ஆண்டு 5 / 10 மைல் ஓட்டம்

ஆர் யு ஹங்ரி  2018 ஆம் ஆண்டு   5 / 10 மைல் ஓட்டம்

ஆகஸ்ட்  5ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து மைல்  ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள புர்கடோரி க்ரீக் பூங்காவில்  (Purgatory Creek Park) நடைபெற்றது. இப்போட்டியை “ஆர் யு ஹங்ரி” நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போட்டியில்  வெற்றி பெற்றவர்கள் 5 மைல் ஓட்டம் முதல் இடம் ஜாக் லார்சன் (JACK LARSON) இரண்டாவது இடம் […]

Continue Reading »

ஐந்தாம் தூண்

ஐந்தாம் தூண்

  மரபுசார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற அச்சு, காட்சி ஊடகங்களை அரசாங்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள் நடத்தும் சுய தணிக்கைகளை மீறி அரசாங்கம் மறு தணிக்கை செய்த ‘அவசர நிலை கால’ கட்டுப்பாடுகளைக் கண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிள்களில் காணாமல் போய்விடும். அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு என்று தொடுத்து, பத்திரிக்கையாளர்களை அச்சத்தில் உறைய வைக்கும் யுக்தியையும் அரசாங்கம் கடைப்பிடித்ததுண்டு. வெளிப்படையாகக் கைது செய்ய […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad