Archive for March, 2019
2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, ஃபிப்ரவரி 23ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் வெஸ்ட் ஜூனியர் பள்ளி வளாகத்தில் இளையோருக்கான பேச்சுப் போட்டியை மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி நடத்தியது. இந்தப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் அழகாகப் பேசினார்கள். ஒவ்வொரு வருடமும் இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதில் ஆங்கிலக் கலப்பு பெருமளவு குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் இறுதியில் அறிவிக்கப்பட்டனர். கூடவே, இதற்கு […]
துணுக்குத் தொகுப்பு

ஜப்பான் உலகின் பல நாடுகள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் புதிய தினத்தினை அறிவிக்கும் வகையில் புலர்ந்திடும் கதிரவனை முதலில் கண்டு எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதன் காரணமாகவே மேற்கத்தியர்களால் இந்நாடு ‘உதய சூரியன் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படுகிறது. மற்ற நாடுகளால் ஜப்பான் என்று அறியப்பட்டாலும், ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை ‘நிப்பான்’ அல்லது ‘நிஹோன்’ என்றே குறிப்பிடுகிறார்கள். சீனர்கள், சூரியன் (‘நிச்சி’ ) பிறக்குமிடம் (‘ஹோன்’ ) என்பதைக் குறிக்க ‘நிஹோன்’ […]
காவியக் காதல் – பகுதி 2

பகுதி 1: சோஃபாவில் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் சித்தார்த். மயங்கி விழுந்த அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஹாலில் உட்கார்த்தி வைத்திருந்தாள். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து குடிக்கச் செய்து, ஆசுவாசப்படுத்தினாள். “ஏன்னா, என்ன ஆச்சு? என்ன பண்றது? தல சுத்தறதா? ஜூஸ் பண்ணித் தரவா?….” பதறிப் போய்விட்டாள் அமுதா.. “நேக்கு ஒண்ணுமில்லடி… ஒரு பெரிய கனவு… எப்டிச் சொல்றதுன்னுகூடப் புரியல… அப்டியே தத்ரூபமா இருந்துதுடி… அந்தக் கனவுல நானே இருந்தேன்… நீ காமிச்சியே அந்த ஆன்க்ளெட் அத……. […]