Archive for October, 2019
மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா, வன்முறை இல்லாத தினமாக அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினசோட்டா வரலாற்று அமைப்புக் (Minnesota History society) கட்டிடத்தில் சென்ற மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி, மதியம் மூன்று மணிக்கு, கட்டிடத்தில் உள்ள 3 எம் (3M) அரங்கத்தில் ஆரம்பித்தது. ராம் கடா (Ram Gada) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மினசோட்டாவில் புகழ் பெற்ற நிர்மலா ராஜசேகர் (Nirmala Rajasekar), Dr.பூஜா கோஸ்வாமி (Dr. Pooja Goswami), வி. […]
அசுரன்

“சாதிச் சச்சரவுகளைத் தாண்டிச் செல்ல, கல்வியே சரியான வழி” ‘மெட்ராஸ்’ படத்தில் இயக்குனர் ரஞ்சித் சொன்னதையும், ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சொன்னதையும், அசுரன் படத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். கூடவே “அப்படிக் கல்வியால் பெற்ற பதவியில் உட்கார்ந்து அவர்கள் நமக்குச் செய்ததை, நாம் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று சொல்லி நம்மை மேலும் கவருகிறார் வெற்றி மாறன். கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், […]