Archive for December, 2019
தன்னகங்காரம் Narcissism

தமிழர் பண்டைய இதிகாசங்களிலிருந்து இன்று வரை முருகன் கோவில் வழிபாடுகளில் தன்னகங்காரம் (தன் அகங்காரம்) அழித்தல் என்பது முக்கியமானதொன்றாகும். ஆயினும் நடைமுறையில் நமது சமூகம், இதர அமெரிக்க, உலக சமூகங்கள் போன்று சுய நலத்தன்மை, தற்பெருமை போன்ற மாசுக்களால் மனநிலை மாறி நிற்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் அவதானிக்க முடிகிறது. இன்றைய பல நவீன அன்றாட விடயங்களிற்கு விடையாக அமைவது எமது சான்றோர் எமக்குத் தெளிவாக வகுத்து தந்த கலாச்சாரம் எனலாம். குறிப்பாக முருகன் […]
காதல் தோல்வி

காலையில் எழுந்ததும்.. கன்னியின் நினைவு.. காலம்பல கடந்தும் கருமையின் அதிர்வு கால்கள் அனிச்சையாய்க் கழிவறை அடைந்ததும் காத்து வைத்திருந்த, கசங்கிய புகைப்படம் ரகசியமாய் எடுத்து ஒருமுறை ரசித்ததும் ரதியவளின் சிரிப்பு கசங்கலின் மத்தியில் ரணங்களைக் குணமாக்கும் வெண்ணிறப் பற்கள் ரகமான வரிசையில் ரசனையுடன் நடமாடியது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒருத்திக்காகவே உயிர் வாழ்ந்த உண்மை ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு உணர்வும் ஒருத்தியோடு இணைந்து உயர்ந்த பெருமை! மிதிவண்டி ஏறி மின்னலெனப் பறப்பவன் […]
அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா

நவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், […]