Archive for February, 2021
மாறா – திரைப்பார்வை

மார்ட்டின் பிரகத் இயக்கிய மலையாளப் படமான ‘சார்லி ‘ யின் ரீமேக் தான் “மாறா’. ஒரு கதைசொல்லியாய், தன்னைத் திறந்து கொள்ளுகிற ஓவியம் , காட்சிக்குக்காட்சி புதுமைகொள்கிறது. பார்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் மறுசீரமைப்புப் பணிக்காக ஒரு ஊருக்குச் செல்லும்போது , சிறு வயதில் அவளைப் பாதித்த ஒரு கதை, உருவம் பெற்று ஓவியமாய் அவள் முன் நிற்கிறது. அந்த ஓவியத்தை நெருங்கும் போது அது பல ஓவியமாய் விரித்துக்கொண்டு பல கதைகளைக் காட்சிப்படுத்துகிறது. […]
காவல்துறை உங்கள் நண்பன் – திரைப்பார்வை

நடுத்தர வர்க்கத்தின் ஒட்டு மொத்தச் சாயலும் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலெனப் பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது தெரிந்து போகிறது. இருவர் கொண்ட அழகான குடும்பம், ரவீனா ரவி உதிர்க்கும் காதலில் மேலும் அழகுடன் காட்டப்பட்டுள்ளது. எப்போதும் போல காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் . காதலியின் தோள்களில் துயில் கொள்வதற்காகவே களைப்பின் சுமையை இரவில் களைந்துவிட்டு […]
பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்

குளிர்காலத்தில் அகலடுப்பு (Oven) மூலம் பார்க்கப் பொலிவாகவும், சற்று ஏளிதாகவும் செய்யக்கூடியது உரொட்டி தயாரிப்பது போன்ற, வெலிங்டன் வகை வாட்டி வேகவைக்கும் சமையல். பிரித்தானியர் பீஃப் எனும் மாட்டு இறைச்சியைப் பாவிப்பதை விரும்பினும், இதனைக் கோழி, ஏன் உருளைக்கிழங்கு மசாலாவுடனும் இலகுவாகத் தயாரிக்க முடியும். உரொட்டியில் மூடப்பட்ட மாமிசம் (filet de bœuf en croûte – fillet of beef in pastry) என்ற பிரெஞ்சு சமையலை பிரித்தானியர் பின்பற்றி சமைக்க, காலப்போக்கில் அது பீஃப் […]