\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for September, 2021

சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

“என் புத்தகங்களில் இடம் பெற்றது போன்ற மாய மந்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை” என்பார் ஜே.கே ரௌலிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர்.   அமெரிக்காவில், முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் மதிப்பிற்குரிய முனைவர் தி. […]

Continue Reading »

175 தமிழ்ப்  புத்தகங்கள் வெளியீட்டு விழா –  அட்லாண்டாவில்  இளம் எழுத்தாளர்கள் சாதனை!

175 தமிழ்ப்  புத்தகங்கள் வெளியீட்டு விழா –  அட்லாண்டாவில்  இளம் எழுத்தாளர்கள் சாதனை!

வட அமெரிக்க வரலாற்றிலேயே, எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் தம் வாழ்த்துரையில் கூறியது போல் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப் பள்ளியும், Tamilezhudhapadi.org உம் இணைந்து, செப்டம்பர் 12. 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பயணம், “நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை […]

Continue Reading »

பண்ணையில் ஒருநாள்

பண்ணையில் ஒருநாள்

”மாடு கண்ணு மேய்க்க, மேயிறதப் பாக்க மந்தைவெளி இங்கு இல்லையே”   என ‘சொர்க்கமே என்றாலும்’ பாடலைப் பாடியபடி அங்கலாய்த்துக்கொள்பவர்கள் சொல்லும் ஒரு விஷயம் – நம்மூரைப் போல ஆடு, மாடு போன்றவற்றை இங்கே அமெரிக்காவில் காண முடிகிறதா, தடவிக்கொடுக்க முடிகிறதா என்று தான். ஏன் முடியாது என்று சொல்லத்தான் இந்தப் பதிவு. அமெரிக்காவிலும் நகர்புறங்களைத் தாண்டு வெளியே சென்றோமானால், பெரும்பாலும் விவசாய நிலங்களைத் தான் காண முடியும். ஆடு, மாடு, குதிரை மேய்வதைப் பார்க்க முடியும். […]

Continue Reading »

அருவியில் கண்ணாமூச்சி

அருவியில் கண்ணாமூச்சி

ஆசியோலா என்ற சிற்றூரின் வெளிப்புறத்தில் ரயில் பயணத்தை முடித்துவிட்டு, ஊருக்குள் நுழைந்தால், ஒரு அமெரிக்கப் பூர்வக்குடி வீரனின் சிலையைக் காண முடியும். கம்பீரமாக நிற்கும் அந்த வீரனின் பக்கத்தில் கேஸ்கட் அருவி (Cascade falls) என்றொரு பலகையும் அதன் பக்கத்தில் கீழ் நோக்கி செல்லும் படிக்கட்டுகளுக்கான வழியும் இருக்கும். கீழே இறங்குவதற்கு முன்பு, அந்த வீரனைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆசியோலா என்றழைக்கப்பட்ட அந்த வீரனின் இயற்பெயர் பில்லி பாவல் (Billy Powell). 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து […]

Continue Reading »

மினசோட்டா ரயில் சுற்றுலா

மினசோட்டா ரயில் சுற்றுலா

உள்ளூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ரயிலில் பயணம் என்பது அமெரிக்காவில் அரிதான விஷயம். கிட்டத்தட்ட அதே அளவு கட்டணத்திலோ, அல்லது சிறிது அதிகம் கொடுத்தாலோ, விமானப்பயணத்தில் விரைவாக எந்த இடத்திற்குச் சென்றுவிடலாம் என்பதால் வெளியூர் பயணங்களுக்குப் பொதுவாக ரயிலில் செல்ல பொதுமக்கள் விருப்பப்பட மாட்டார்கள். ரயிலில் செல்ல வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தாலொழிய, ரயிலில் செல்வது என்பது நமது திட்டத்தில் இடம் பெறாது. இதனால் அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு ரயில் பயணம் என்பது பரிச்சயமாயிருக்காது. அவ்வப்போது […]

Continue Reading »

இதெல்லாம் சாதாரணமப்பா!

இதெல்லாம் சாதாரணமப்பா!

மகேஷ் தனது பல்சர் பைக்கை கல்யாண மண்டபத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அவன் ஒரு பைக் பைத்தியம். மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னரே, கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திற்கு  முன்பதிவு செய்து,  9 விகித  வட்டிக்கு வாங்கிய புதிய மாடல் பல்சர் பைக் அது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்க்கிறான்.     ““என்ன தம்பி, புது மாடல் போல! பல்சர் பைக் ஹெட் லைட்டே  அழகுப்பா!    கருப்பு கலர்ல ராஜா […]

Continue Reading »

கலைஞன்

கலைஞன்

“கண்களுக்குள் கசிகின்ற கண்ணீரை இமைகளுக்குள் வாழ்க்கையாக ஒளித்துக் கொண்ட இருக்கிறான் – கலைஞன்” “என் வயிற்றுக்குள் எலிக்குட்டி அளவான பயம் ஒன்று கத்திக் கொண்ட இருக்கிறது. இன்னும் இரு நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். நீ ஓடவில்லை என்றால், மூன்றாவது நிமிடத்தில் நான் பூனை ஒன்றை வளர்க்கப் போகிறேன்.” பல வருடங்களுக்கு முன் எனக்குள் நான் எழுதி ஒளித்த நகைச்சுவை ஒன்று இன்று ஞாபகம் வருகிறது. ஏனென்றால், நான் வாழ்க்கையில் முதற் தடவையாக பறக்கப் போகிறேன். அம்மா என்னை […]

Continue Reading »

பனி விழும் மலர்வனம்

பனி விழும் மலர்வனம்

வாரத்தில் 6 நாள் உழைத்து களைத்து சனிக்கிழமை முன்னிரவில் சனி நீராடும் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் நான். சும்மா ரெண்டு பீர். அவ்வளவுதான். தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் எனக்கு இதுதான் வசதி. மற்றபடி நான் நல்ல பையன் தான்.நம்புங்கள். அழைப்பு மணி ஒலித்தது. சைடு டிஷ்ஷும், வறுத்த அரிசியும் அதான் ப்ரைடு ரைஸும் சொல்லியிருந்தேன் ஸோமோட்டோ-வில். அவனாகத்தான் இருக்கவேண்டும். கதவைத்திறந்தேன். சிலீர் என்று பனிப்புயல் என்னை தாக்கியது. அங்கே மெர்லின் நின்று கொண்டிருந்தாள். “இவள் ஏன் இங்கு […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad