admin
admin's Latest Posts
எனக்கு ஒரு மகன் பிறந்தான்
நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூடப் பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் […]
காற்றில் உலாவும் கீதங்கள் – டாப் சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017)
இந்த ஆண்டு 2017இல் இதுவரை வெளியாகிய பாடல்களில், நம் மனம் கவர்ந்த பாடல்களில் சில உங்கள் பார்வைக்கு: பைரவா – வர்லாம் வர்லாம் வா சந்தோஷ் நாராயணனுக்கு அமைந்த முதல் கமர்ஷியல் மசாலாப் படம். விஜய் காம்பினேஷன் வேறு. பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும், முதலுக்கு மோசமில்லை ரகம். இண்ட்ரோ சாங் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார் அருண்ராஜா காமராஜ். வெறியூட்டும் குரலில் தெறி, கபாலி படங்களைத் தொடர்ந்து இதிலும் முதல் பாட்டு இவருக்குத் தான். மில் சைரன், பைக் ரேஸிங் […]
காளான் குழம்பு
காளான் சைவமா அல்லது அசைவமா என்று ஒரு குழப்பம் பெரும்பாலோர்க்கு உண்டு. அது என்னவாக இருந்தாலும், சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். நம் உடலுக்கு தேவையான இரும்பு, விட்டமின் பி & டி, செலினியம் போன்றவற்றை அளிப்பதால், நம் தினசரி உணவில் காளானைச் சேர்க்க, எந்த தயக்கமும் கொள்ள தேவையில்லை. காளான் வைத்து பெரும்பாலும் மஷ்ரூம் மசாலா, மஞ்சுரியன், பிரியாணி போன்றவற்றைச் செய்வார்கள். நம்மூர் குழம்பு வகையிலும், காளான் அருமையான சுவையை அளிக்கும். […]
ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்
அரசியல்வாதிகள் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் காலரைத் தூக்கி விட வைப்பது இஸ்ரோ (ISRO) வின் வழக்கம். ஃபிப்ரவரி 15ஆம் தேதி அன்றும் இந்தியர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இஸ்ரோவின் இந்திய விஞ்ஞானிகள். அன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 9.28 க்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய பிஎஸ்எல்வி விண்கலம், அடுத்த அரை மணி நேரத்திற்குள், ஏற்றிச் சென்ற 104 செயற்கைக்கோள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் […]
நிலவும் வசப்படும்
ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ! ……. ……… அடி கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…? உனது புன்னகை போதுமடி ! ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர் ரகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலைப் பளு […]
வினா வினா ஒரே வினா
இட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், […]
சிதம்பரம் – பாகம் 2
(பாகம் 1) அமலா கண் இமைப்பதைக் கூட மறந்து, நீலவேணி சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டாள். நீலவேணி சொல்லியதாவது: “முப்பது வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதைக் கண்ட மக்கள் சிலர் அவரைத் துரத்தினர். அவரும் சிதம்பரநாதர் சந்நிதியில் ஒளிந்து கொண்டார். மக்கள் தேடிக் களைத்துச் சென்ற பின்னர், இருட்டில் எங்கு செல்கிறோம் என்று கூடத் தெரியாமல் சிதம்பர ரகசியம் என்று போற்றப்படும் குகைக்குள் நுழைந்தார். அங்கு மின்னிக் கொண்டிருந்த […]
சிங்கம் 3
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் போல நம்மூருக்கு அமைந்து விட்டது, சிங்கம் சீரிஸ் படங்கள். தொடர்ந்து ஹரி – சூர்யா கூட்டணியில் சிங்கம் 3ஆம் பாகமும் பரபரவென அமைந்து மசாலாப் பட ரசிகர்களிடையே வெற்றி பெற்று விட்டது எனலாம். கூடவே, கண் வலி மற்றும் காது வலி அபாயத்தையும் கொண்டுள்ளது என்பதைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. சிங்கம் 3ம் ஹரியின் வழக்கமான ரோலர் கோஸ்டர் படமே. முதல் பாகத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று, பின்பு ஆந்திரா நெல்லூரில் […]
யாரடியோ?
கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !
வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!
மேரி டைலர் மோர் (Mary Tyler Moore)
அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் முன்னோடிப் புதுமைப் பெண்ணாக 1970 களில் இருந்து பிரபல்யமானவர்தான் அண்மையில் மறைந்த நடிகை மேரி டைலர் மோர் அம்மையார் அவர்கள். இவர் எமி (Emmy) டோனி (Tony) அமெரிக்கத் திரை விருதுகளைத் திரைப்பட நடிப்பு, தொலைக்காட்சி நடிப்பு மற்றும் படத் தயாரிப்புக்களுக்காகப் பெற்றவர். அமெரிக்கக் குடும்பங்களைக் கவர்ந்த சிறந்த நகைச்சுவை நடிகை. இவர் பிரபல்ய தொலைக்காட்சி முற்போக்கு மனைவியார் லாரா பெற்றி (Laura Petrie) எனும் கதாபாத்திரத்தை The Dick Van Dyke Show […]







