admin
admin's Latest Posts
காதலர் தினத் திண்டாட்டம்
கல்லூரி தினங்களில் ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் வந்து விட்டாலே, ஒரு குறுகுறுப்பான பரபரப்பு மாணவர்களிடையே தொற்றிக் கொள்ளும். காதலிக்கிறோமோ, இல்லையோ, காதலிக்கும் ஐடியா இருக்கிறதோ, இல்லையோ, எந்தக் கலர் சட்டை அணிவது என்பதில் கவனம் குவிந்து விடும். அதில் நம்மைப் பற்றி அடுத்தவர் நினைக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். அப்படி ஏதும் நினைத்து விடக் கூடாது என்ற பதைபதைப்பும் இருக்கும். ஆனா, லவ்வச் சொல்ல நினைக்கிறவனுக்கும், லவ் பண்றவனுக்கும் எந்நாளும் வேலண்டைன்ஸ் டே தான். இப்படி […]
பக்குவக் காதல்
சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் […]
தைப் பொங்கல்
தைப் பொங்கல் தைப் பொங்கல் தமிழரின் திருநாள். இது தமிழ் நன்றி நவிலல் நாள். அறுவடை தந்த சூரியனிற்காகப் பொங்கப்படும் தைப் பொங்கல் ஆனது தை மாதம் முதலாம் திகதியில் கொண்டாடப்படும். அக்கா முற்றத்தில் கோலம் போடுவார். அண்ணா தலை வாழையிலை விரிப்பார் அப்பா நிறைகுடம் வைப்பார். தேங்காய், மா இலைகள், பூக்கள் உடன் அமைந்த நிறைகுடம் கும்பம் எனப்படும் அம்மா குத்து விளக்கை ஏற்றுவார். அண்ணா தோரணம் கட்டுவார் அக்கா வெற்றிலை, பாக்கு, கரும்பு, பழங்களைப் […]
பைரவா
விஜய்யிடம் இருக்கும் ஒரு பாராட்டுக்குரிய விஷயம், ஜெயிக்கும் கதை என்று தான் நம்புவதை, எக்ஸ்ப்பிரியன்ஸ், சென்டிமெண்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த விஷயத்தில் எத்தனை முறை பல்ப் வாங்கினாலும் இதை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து செய்து வரணும். இந்த நல்ல பழக்கத்தைத் தான், இப்படத்தில் தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கமாக பஞ்ச் வசனத்தில் சொல்லி வருகிறார். படத்தின் இயக்குனரான பரதனுக்கு என்ன வாக்குக் கொடுத்தாரோ தெரியவில்லை. விஜய் காப்பாற்றி விட்டார். பரதன் […]
பெண்களை அடிமைப்படுத்தாதே !
பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே! கேட்பதற்கு நாதியில்லாஇனமாகிப் போனதே பெண்ணினம்! கேட்பதற்கு நாதியில்லா இனமாகிப் போனதே பெண்ணினம்! வயது ஐந்து கொண்ட சின்ன வண்ணக்குயில் கூட உன் கண்ணிற்குப் பதினெட்டாய்த் தெரிவதேன்? பதினெட்டாய்த் தெரிவதேன்? மன்னன் அந்தப்புர மகளிராய் அடிமைப்படுத்தப்பட்டோம் இன்று வரை அடிமை ஆனோம் இன்று வரை அடிமை ஆனோம்! அரசியல் மேடை ஏறி வென்றால் உன் காமப் பார்வையை பாய்ச்சுகின்றாய் பள்ளியிலும் இதுதான் செல்லும் வீதியிலும் இதுதான் எங்கும் இதுதான் உன்னைப் பெற்றவளும் பெண்தானே […]
கொல்லத் துடித்தான்…..! திருவிவிலிய கதைகள்.
மாசில்லாத மழலை உள்ள வீடு மகிழ்வு நிறைந்த சொர்க்கம் போன்றது. ஒரு இல்லத்திற்கு அர்த்தமுள்ள நிறைவு… குழந்தை. “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பார்கள். காரணம் குழந்தை ஒரு வரம். அந்தக் குழந்தையாக தெய்வமே புவியில் தோன்றும்போது…..ஆகா.. அப்படித்தாங்க இந்த உலகத்தில அன்பின் அடையாளமாக இயேசு பாலன் பிறந்தார். இது நம்ப எல்லாருக்குமே தெரிந்த விடயம். அந்தக் குழந்தையைக் காண வெவ்வேறு திசையிலிருந்த முன்று ஞானிகள் வந்தார்கள். குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இயற்கை அவர்களுக்கு வால் நட்சத்திர […]
வீட்டுக்கொரு ஜீனோ
எழுத்தாளர் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகிய கதைகளின் ரசிகர் என்றால், இன்னமும் ஜீனோ என்ற பொம்மை நாய்க்குட்டியை மறந்திருக்க மாட்டீர்கள். நாயகியுடன் எப்போதும் இருக்கும் நாய்க்குட்டி, புத்தகங்களை வாசித்துக் கொண்டு நாயகிக்குப் பல தகவல்களையும், அறிவுரைகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வரும். வரும் நாட்களில், நம் வீட்டிலும் இது போன்ற ஒரு ஜீனோ வரலாம். முன்பெல்லாம் ராஜா, ரவி, ரமேஷ் என்ற பெயரில் வீட்டுக்கு ஒருவர் இருப்பார். வருங்காலத்தில், இதே போல் வீட்டுக்கு […]
மார்கழியும் தையும்
எழுந்தீரோ எம்பாவாய் ! மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே … ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும் முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே… பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே … பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே …. தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே … உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே ! உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே … […]







