admin
admin's Latest Posts
தூங்கா நகரம்
சிலருக்கு தூக்கம் பலருக்கு துக்கம் ! தூக்கத்தை சிலர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் பணத்திற்காக …. சிலர் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் வாழ்வதற்காக ! தூக்கத்தை மறந்து பலருக்குப் புத்துணர்வூட்ட டீ போடும் டீக்கடைக்காரர் ! மொட்டு மலருவதற்குள் விற்றுவிடத் துடிக்கும் பூக்காரி ! பசியோடு வருவோரைப் பாங்குடன் பசியமர்த்தும் இட்லிக்கடைகள் ! நடுநிசியிலும் நிலவை வம்புக்கு இழுக்கும் காதல் கிறுக்கன் ! ஒலிப் பெருக்கிகளுக்கு இடையிலும் தூங்கும் தெருவோர வாசிகள் ! பேருந்தில் பயணிப்போரைப் பத்திரமாகக் கொண்டு […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி (NATYA MANJARI DANCE COMPETITION 2016)
சென்ற ஆண்டைப் போல்இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஸ்ரீ நாட்டிய மஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று. இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டியம் (classical Dance) தனி நபர் மற்றும் குழுவினர்களுக்கான போட்டிகளாகத் தனித்தனியாய் நடத்தப்பட்டது. அதேபோல் பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்களும் Non classical (Semi classical / Folk […]
பாரிய இழப்பின் பின்னர் பிள்ளைகள் கதி (Survival)?
வடஅமெரிக்காவில் வாழும் வங்கக் கடலோரப் பிரதேசங்களில் பிறந்த விடமாகக் கொண்ட எங்களில் பலரும் கோடை விடுமுறை காலங்களில் இந்தியா,இலங்கை,மலேசியாவென்று சென்று வருகிறோம். அவ்வப்போது பொருளாதாரத் தாழ்மையுடன் அவ்விடம் வீதியோரம் பிச்சையெடுத்தும், தண்ணீர்ப் பாக்கெட், சிற்றுண்டி விற்றும், பசியினால் சிறுதிருட்டுக்களில் ஈடுபட்டும், குப்பை வாளிகளிலும் குப்பை மேடுகளிலும் தேடியெடுத்து உண்டும், உயிர்வாழும் பல வீதிப் பிள்ளைகளையும் கண்டிருப்போம். அபாயங்களில் கடுமையாக அவஸ்தைப்படுபவர் பிள்ளைகளே இந்த அருகதைச் சிறுவர், சிறுமிகளில் பலரும் விபச்சாரத்திற்கும், அடிமைக் கூலி வேலைகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் […]
மழைப்போல நான்
ஈரம் சுமந்த
மேகத்தாய் ஈன்றெடுக்கிறாள்
ஒரு நொடியில்
பல கோடி
நீர்த் திவலைகளை..
அதை
மழை என்றீர்கள்.
வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !
விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ ஐயா! வணக்கம். என் பெயர் தூங்கத் தேவர். எனத் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை ஐயா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னீங்களாம்” என்றபடி நின்றார். தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் […]
நிஜம் நிழலாகும்
“பெட்டி எல்லாம் எடுத்து வெச்சாச்சா ? கேள்வி கேட்டபடி நடந்து வந்தான் ராஜு . சந்த்யா ஆமோதிக்கும் விதம் தலையை அசைத்தாள் . அவனுடைய அடுத்த கேள்வி என்ன என்று அவளுக்குத் தெரியும். கேட்காமல் இருந்தால் நல்லது என்று மனதிற்குள் நினைத்தாள். “கேமரா எடுத்து வெச்சாச்சா?. சார்ஜ் போட்டாச்சா? “ பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்தாள் சந்த்யா . ஆனால் அவள் மௌனமே ராஜுவிற்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. “கேமரா எடுத்து வெச்சாச்சா? புதிசா வாங்கின DSLR […]
நீங்களும் பிஎம்பி (PMP) ஆகலாம்!!
முதலில், தலைப்பின் நடு வார்த்தையை விவரித்து விடலாம். பிஎம்பி (PMP) என்பதன் விரிவாக்கம் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் ப்ரொஃபஷனல் (Project Management Professional) என்பதாகும். எந்தத் துறையிலும் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்கள், தங்கள் தகுதியை நிரூபித்துக் கொள்வதற்கான தேர்வைப் பற்றிய கட்டுரை இது. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்டிட்யுட் – பிஎம்ஐ (PMI), இதை நிர்வகிக்கிறது. ”மேனேஜராக வேலை பார்க்க ஏதாவது கத்துக்க வேணுமா” என்று நக்கல் அடிப்பவரா? நீங்களும் இதை வாசிக்கலாம். சரி, நிரூபிப்பது இருக்கட்டும். ப்ராஜக்ட் மேனேஜராக […]
மூன்றெழுத்து
மூன்றெழுத்துச் சொல் அந்தச் சொல் காட்டிய நல்ல பாதையிலே நம்மவர் வாழ்க்கையே ஓடிக் கொண்டேயிருக்கிறது ! முழுநிலவின் ஒளியில் புத்துயிர் புத்துணர்வு பெறுவது போல. ஆடும் மயில்கள் பாடும் குயில்கள் பரவசம் அடைவதுபோல் ! அந்தச் சொல்லில்தான் அகிலமும் சுழல்கிறது இயற்கையும் செயற்கையும் கைகோர்த்துச் செல்கிறது ! இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி வேளையில் அந்தச் சொல்லை நாமும் உணரமுடியும்! மதங்களும் சாதிகளும் அந்தச் சொல்லைத் தாங்கிக் கொண்டுதான் ஒற்றுமையாக இருக்கின்றன ! அந்தச் சொல் […]
எருக்குக் காத்து ஏமாந்த மஞ்சள் குருவி
அழகிய மஞ்சள் வாப்ளர் குருவி எருக்குச் செடிகளின் அருகே உள்ள குளத்துப் புல்லின் மத்தியில் குடியிருந்தது. இளவேனில் காலத்தில் ஒரு நாள் புதிய துளிர்களில் கட்டுக்கட்டான அரும்புகளை அவதானித்தது. அதன்மீது அழகான வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் மொய்ப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தது. ஆகா, இவ்வரும்புகள் மலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகினால் அதை நான் உண்பேன் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. எனவே மஞ்சள் பறவை காலையும் மாலையும் அவற்றைப் பார்த்து வாயூறிய வண்ணம் காத்திருந்தது. ஒரு நாள் […]







