admin
admin's Latest Posts
மொரார்ஜி தேசாய்
பொதுவாக, நாட்டுக்காக உழைத்த, எளிமையாக வாழ்ந்த, தன்னலமற்ற பல தியாகிகளையும், தலைவர்களையும் வரலாறு கண்டு கொள்வதில்லை. அதிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சிறப்பு நாளான ஃபிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்து இந்திய நாட்டுக்கு அரும்பணியாற்றிய மொரார்ஜி தேசாயை அனைவரும் மறந்தே விட்டார்கள். மொரார்ஜி தேசாய் – 1896-ம் ஆண்டு ஃபிப்ரவரி 29-ஆம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் பிறந்தவர் . இவரது தந்தை ரங்கோட்ஜி […]
அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்
2014ஆம் ஆண்டு மின்னசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் இருந்த நிகழ்ச்சி தெருக்கூத்து. ஒரு மணிநேரம் நடந்த இந்தக் கூத்து நிகழ்ச்சி பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோரையும் கவர்ந்ததாக அமைந்திருந்தது. மின்னசோட்டாவிலுள்ள வளங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாத்தியப்படாத ஒன்றை சாத்தியப்படுத்திய உயர்திரு சச்சிதானந்தன் அவர்களுடன் ஒரு நேர்முக பேட்டி நடத்தினோம். கேள்வி : வணக்கம் சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன், உங்களைப் பற்றியும் நீங்க வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 10
அத்தியாயம் 9 செல்ல இங்கே சொடுக்கவும் மலாய் மொழி ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி. இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூனே, சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. Dr. ரொலண்ட் பிராடெல்,முனைவர் சத்தியானந்தா, மற்றும் ஆய்வாளர் சஞ்சிவி ஆகிய மூவருமே மலாயாவிற்கு நாகரிகத்தை அளித்தவர்கள் தென்னாட்டுத் தமிழர்களே எனக் கருதுகின்றனர். மலாயா என்னும் பெயரிலே தமிழ் மணங்கமழ்வதை போன்றே சிங்கப்பூர் என்ற பெயரிலும் தமிழ் மணம் […]
தெருக்கூத்து
மின்னசோட்டா மாநிலத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் நான் மகிழ்ந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்தி கொள்ள இச்சிறு கட்டுரையில் முனைகின்றேன். ஐம்பெறும் காப்பியங்களின் முதன்மைக் காப்பியமானது சிலப்பதிகாரம். இதன் மற்றொறு சிறப்பு மூவேந்தரும் இதில் கதை மாந்தர்கள். இந்த மூவேந்தர் கதை சொல்ல புதிதாய் முளைத்திருக்கும் மூவேந்தர் கலைக் குழாமின் தெருக்கூத்து மிக மிக அருமை. மிக நேர்த்தியான காட்சி அமைப்புகள். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசித்த நிகழ்ச்சி. என்றால் அது […]
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்
ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தினம் வழக்கமாக உதிக்கும் ஞாயிறுடன் ஃபிப்ரவரி 7, 1902 அன்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் உதித்தார். நெடிய நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழன்னை அன்று பெரிதும் மகிழ்ந்திருப்பாள். அவள் பெறுமை உலகறியச் செய்ய அரிமா ஒன்று பிறந்ததென்று. மெத்தப் படித்தோர் நிறைந்த நெல்லைச் சீமையில் ஞானமுத்து, பரிபூரணம் தம்பதியினருக்குப் பாவாணர் பத்தாவது மகவாகப் பிறந்தார். தேவநேசன் என்பது இவர் இயர் பெயர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளுடன் இலத்தீனம், […]
சத்யா நாதெல்லா
ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4
உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.
காதலியே …
காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?
என் காதலே
காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்







