admin
admin's Latest Posts
தலையங்கம்
சரியாக நூற்றி நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலகின் மொத்த நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் வழி நடத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளி ஒன்று பிறந்தது. அதன் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அஹிம்சையின் பலம் என்னவென்பதை உலகம் முழுதும் உணர்த்திய மகா சக்தி அது.
நயாக்கிரா பெருங்குகை
அமெரிக்காவின் பெருங்குகைகளில் ஒன்றான நயாக்கிரா எமது மாநிலத்தில் அமெரிக்க நாட்டின் பிரபலமான பத்துக் குகைகளில் ஒன்று, இரட்டை நகரங்களிலிருந்து மூன்று மணி நேரக் கார் பயணத் தொலைவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இயற்கையில் குகைகள் என்பது உயர்ந்த மலைகளிலும், மலை அத்திவாரத்திலும், மேலும் நிலத்திலே துளையாக உள்ள பாதாளம் போன்றும் பலவகைப்பட்டது. பொதுவாக எல்லாக் குகைகளும் இவற்றின் ப்ரதான அம்சமான ஒன்றில் வகைப்படுத்தப்படும். ஆயினும் மினசோட்டா மாநிலத்தின் நயாக்கிரா குகையோ பல்வேறு குணாதிசயங்களையும் உட்கொண்டது. அமெரிக்கக் கண்டங்களில் […]
பயற்றம் பணியாரம்
துருவிய தேங்காய்ப்பூவை பொன்னிறமாக வாணலியில் வறுத்து, மாவாக இடித்துக்கொள்ளவும். பின்னர் பயிற்றமாவில், சிறிது தேங்காய், சர்க்கரை, சீனி, சேர்த்து இடித்துக் கலந்து கொள்ளவும். பின்னர் பொடித்த ஏலக்காய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது கொதிநீரில் குழைத்து சிறிய உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.
இசையுலக இழப்புகள்
இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை. எம்.கே. ஆத்மநாதன் தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள். உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்) தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்) இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்) […]
கோடைக்கால காய்கறி விருந்து
கோடைக்காலத்தில் உழவர் சந்தைகள் மினியாப்பொலிஸ்-செயிண்ட் பால் மாநகரங்களிலும் பல்வேறு சுற்றுப்புற நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன. கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் புதிதாய் மலர்ந்த பூக்கள், புதிய காய்கறிகள், பழங்கள், துளிர் கீரைவகைகள், விதவிதமான கிழங்குங்கள், பூசனிகள் , பால், வெண்ணெய், முட்டை, தேன் போன்றவை இந்த சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்திலிருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் காய்கறிகளிலும் மற்றைய பொருட்களிலும் இரசாயனக் கலவை பூசப்படுவதில்லை. பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை நீண்ட நாள் […]
லோரா ஏங்கள் வைல்டர் நூதனசாலை, வால்நட் க்ரோவ், மினசோட்டா.
ஐரோப்பிய மக்கள் அமெரிக்காவில் வந்து குடியேறிய காலகட்டத்தில் இந்த வட கண்டத்தில் வெவ்வேறு பாகங்களிலே பலவாறான காலச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையமைத்து கொள்ள வேண்டியிருந்தது . மினசோட்டா மாநிலத்தைப் பொறுத்தளவில் நோர்வே நாட்டவர் வந்து குடியேறியதையும் அப்போது நடந்த உண்மை சம்பவங்களைப் பற்றியும் வெகு எளிமையான முறையில் சொல்லப்பட்ட கதை லோரா ஏங்கள் வைல்டர் அம்மையாரின் Little House On the Prairie ஆகும். இந்தப்புத்தகம் 1970களில் தொலைகாட்சி தொடராக தயாரிக்கப்பட்டு சிறுவர், சிறுமியர் தொட்டு தாய், […]
ஓய்வு
”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்” தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, என்றைக்கும் போல் அன்றைக்கும் அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் இறைத்து கிணற்றடியைக் கழுவி விட்டுக் கொண்டே குளித்து முடித்தார் கோவிந்த ராஜய்யர். பாதிக் குளியலில் துவங்கிய மந்திர உச்சாடனங்கள் பூஜை அறையைச் சுத்தப் படுத்தும்பொழுதும் தொடர்ந்து, சாமிப் படங்களிலிருந்த நேற்றைய பூமாலைகளை அகற்றுகையில் உடன்வந்து, தீபம் ஏற்றுகையில், ஊதுபத்திக் […]
வாலி
வில்லாடி வெல்ல முடியாததை ஒளித்து மறைந்தாடி வதைத்தாய் வாலியை அன்று! சொல்லாடி வெல்ல இயலாததை நினைத்து நோயாடிக் கொண்டாயோ வாலியை இன்று? விண்ணுலகில் வாழ்த்திசைக்க இசை வித்தகரை வரிந்து வாரங்களாகவில்லை! விளைந்த சோகம் விலகுமுன், அவர்உனை வாழ்த்தும் பாடலுக்கு வரியெழுத விரைந்தழைத்தாயோ எங்கள் வரகவியை? தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதந்தான்! மனம்போன போக்கிலே மனிதனவனும் போனான்! அளவோடு ரசித்து அளவின்றிக் கொடுத்தான்! ஊனக்கண்ணால் பார்த்து யாவும் குற்றமென்றாயே! மெய்யென்று மேனியை யார் சொன்னது? மூன்றெழுத்து மூச்சு முடிந்தாலும் […]
கனவு மெய்ப்பட வேண்டாம்
பிரீமியர் டைட்டில் கம்பெனியில், கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டு முடித்தான் தினேஷ். “எக்ஸ்செல்லன்ட … யூ ஆர் டன் வித் ஆல் சைனிங்க்ஸ் .. யுவர் ஹவுஸ் இஸ் சோல்ட் அண்ட் க்ளோஸ்ட் நவ் .. ஹியர் இஸ் யுவர் செக் ..” எனச் செக்கைக் கொடுத்தாள் லிண்டா. செக்கை வாங்கிப் பார்த்தான். “யூ கேன் கிவ் த கீஸ் டு ஹிம்” எனச் சொல்லிக்கொண்டே அனைத்துக் காகிதங்களையும் ஒரு நீளமான கோப்பில் போட்டு, தினேஷிடம் கொடுத்துவிட்டுக் […]







