admin
admin's Latest Posts
தேர்த் திருவிழா
தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் நகரில் திருக்காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான திருத்தலமாகும். இங்கு,மார்ச் எட்டாம் தேதி அன்று மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. பத்து தினங்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை ஃபிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு சமுதாயம் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் கடவுளர்களும்,அம்மனும் வீதி உலா வர,திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த […]
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…
வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன். ”என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்” என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும். ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு […]
இப்போது வேண்டுவதெல்லாம்
பனி விலகி வசந்த காலம் வந்தது தொட்டுவிடும் தூரத்தில் கோடை எட்டிப் பார்க்கிறது! காட்டாற்றின் கரையதனில் கதையளந்த காலம் போய் கையறு நிலையில்மனிதர்கள் நாம் சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும் மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய் கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில் பல்லாயிரம் உயிர் தின்றும் அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய் இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது இந்தக் கொடூர கொரோனா!! உலக மீட்பர்கள் தாங்கள் என்று தமக்குத் தாமே […]
கோவிட்-19 பரிசோதனைகளும் மருந்துகளும்
கோவிட்-19 மருந்து கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நேரமாகிறது? தற்சமயம் பாதிக்கப்பட்டோருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்படுகின்றன? அவற்றின் பலன் எப்படி உள்ளது? மினசோட்டாவில் எடுக்கப்போகும் தினசரி 20 ஆயிரம் பேர்களுக்கான பரிசோதனையின் சிறப்பம்சம் என்ன? இது போன்ற கேள்விகள் குறித்து, யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திரு. அமுதா முத்துசாமி அவர்களுடன் பேசினோம். அந்த உரையாடலை இங்கு நீங்கள் கேட்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து, இத்தகவல்கள் பலரையும் சென்று சேர உதவலாம். உரையாடியவர் – சரவணகுமரன்.
உழைப்பாளர் தின உரையாடல் – திரு. மதுசூதனன்
உலகமெங்கும் உழைப்பாளர் தினம் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்படுவது ஏன்? உலகமெங்கும் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும், இதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவில் ஏன் மே 1 அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது இல்லை? அமெரிக்காவில் மே தினத்திற்கு வேறு அர்த்தம். என்ன அது? வாருங்கள்.. கேட்போம்.. அறிவோம்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
ஜெயகாந்தன் நினைவு உரையாடல் – திரு. மதுசூதனன்
திரு. மதுசூதனன் உடனான எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய நினைவு உரையாடல். உரையாடியவர் – திரு. சரவணகுமரன்.
அடி முதல்
“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது. உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன். “மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென […]
தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு
இன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]
வளரும் வணிகங்கள்
உலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் […]







