admin
admin's Latest Posts
சொர்க்கம் நேரிலே!
செல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச் சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம் உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை உணர்தலே ஆரோக்கிய ரகசியம் இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம் இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே! செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய சிந்தனையில் உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள்! ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம் உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான். உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – […]
அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்
தேசப்பிதா, அண்ணல் காந்தி அடிகளிடம் பற்றுக் கொண்டவர்கள் கொல்லாமையை நேசிப்பவர்கள்,எளிமையை விரும்புவோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா (wardha)வின் அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் உள்ள காந்தி அடிகளின் ஆசிரமம் தான்.வாருங்கள், இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.12 மார்ச் 1930ல் உப்புச் சத்தியாக்ருஹத்திற்காகத் தன் 78 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தி அடிகள் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும் போது,முழு வெற்றி கிடைத்தால்தான் இங்கு திரும்பி வருவேன் என்று முடிவெடுத்தார். 6 ஏப்ரல் […]
எது?
அன்பேஇல்லாததால் ஆனந்தமேஇல்லாமற்போனது! இன்பமேஇல்லாததால் ஈகையேஇல்லாமற்போனது! உழைப்பேஇல்லாததால் ஊக்கமேஇல்லாமற்போனது! எழுச்சியேஇல்லாததால் ஏற்றமேஇல்லாமற்போனது! ஐக்கியமேஇல்லாததால் ஒற்றுமையேஇல்லாமற்போனது! ஓதுவதேஇல்லாததால் ஒளடதமேஇல்லாமற்போனது! அஃதேஇன்றையவாழ்வானது!!! – முனைவர்சு. சத்தியா
இராசி பலன்
இராமுவுக்கு ஒரு பெருத்த சந்தேகம்… தனக்குள்ளேயே பேசிக்கிட்டான்… தினமும் காலங்காத்தால டிவியில வர்ற இராசிபலன்கள்ல அப்படி என்னதான் இருக்குமோ தெரியல… ஏன், அம்மா அத மட்டும் மறக்காம பாக்கணும்? நான் பொதுவா இந்த மாதிரி ராசி பலன்கள் பத்தி கவலைப்படறதில்ல… ஆனா என் ராசி வரும்போது மட்டும் கொஞ்சம் கவனமா கேக்க முயற்சி பண்ணுவேன்… ஆனா 12ராசிகளையும் விடாம பாக்கறாளே…எதுக்குன்னு பல தடவை யோசிப்பேன்…. அதேபோல கோவிலுக்குப் போனா அர்ச்சனைத் தட்டு வாங்கி கொறஞ்சது ஒரு 10 […]
என் புன்னகைக்குப் பின்னால்
என் புன்னகைக்குப் பின்னால் பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்! என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]
கடவுளைக் காண்பீர்!
பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]
தல வருஷப் பொறப்புங்கோ!
அது என்ன தல வருஷப் பொறப்புன்னு கேக்கறவங்களுக்கு – கல்யாணத்திற்கு அப்புறம் வரும் முதல் வருஷப் பிறப்பைத் தல வருஷப் பொறப்புன்னு சொல்றது நம்ம பக்கத்திலே வழக்கம், தலை தீபாவளி மாதிரி தல வருஷப் பிறப்பு. எங்க திருமணம் நவம்பரில் நடந்திருந்தாலும் எனக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து நாங்கள் சென்னையில குடித்தனம் வைக்க வந்தது கிட்டதட்ட ஃபிப்ரவரி போல் ஆகி விட்டது. (ஏனென்றால் என் காதல் கணவர் முதலிலேயே மாற்றல் வாங்கிண்டு சென்னை வந்துவிட்டார்ன்னு என் டைபிங்க் […]
அன்னையர்க்கு அர்ப்பணம்
கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!! மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!! உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!! சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]
கனடா குடியேற்றம்
கனடா அரசும், அந்நாட்டு மக்களும் பிற நாட்டு மக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தை, அமெரிக்காவை ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது? குடியேற்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து CANext எப்படி மாறுபடுகிறது? .. கனடாவில் CANext immigration நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு. ஸ்ரீராம் அவர்களுடன் ஒரு தகவல் பொதிந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.







