admin
admin's Latest Posts
அழகிய ஐரோப்பா – 10
(அழகிய ஐரோப்பா – 6/திருவிழா) அழகிய ஐரோப்பா – ஃபெரி தக்காளி சாதம் சாப்பிட்டு பசிக்களை போனதும் அடுத்த பயணத்துக்கான அடுக்குகளுடன் எல்லோரும் வேனில் ஏறி டோவர் நோக்கி விரைந்தோம். டோவரை நெருங்க நெருங்க வீதியின் இரு புறமும் இராட்சத கோட்டைகளும் அரண்களும் என வீதியின் இருபுறமும் வரிசைக் கட்டி நின்றன. இரண்டாம் உலக யுத்த காலத்தில் அயல் நாடுகளைக் கண்காணிக்க உயர்ந்த மலை உச்சிகளில் அமைக்கப்பட்ட அரண்களெல்லாம் இன்றும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. […]
ஐராவதம் மகாதேவன்
கல்வெட்டியியல், தொல்லியல், பத்திரிக்கையாசிரியர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை பெற்றிருந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் மாதம், 26ஆம் நாள் மூப்பு காரணமாக காலமானார். தமிழின் தொன்மை, எழுத்தியல் வளர்ச்சி குறித்து சிந்திக்கும் எவராலும் தவிர்க்க முடியாத பெயர் ஐராவதம் மகாதேவன். தனது விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மூலம் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும், திராவிட மொழிக் குடும்பத்துக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி சிந்து சமவெளி கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவி தமிழ் […]
நன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018
மினசோட்டா மாநிலத்தின் மேபிள் குரோவ் நகரத்தில் உள்ள இந்து கோவில் சார்பில், நன்றி நவிலல் நாளான நவம்பர் 22ம் தேதியன்று, 7வது ஆண்டாக, பிரதிக்ஷனா ஐந்து கிலோமீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கோயில் நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் பலர் துணையுடன் சேர்ந்து நடத்தினர். சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 50 பேர் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்குப் பரிசும், பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில […]
ஆச்சர்யக்குறிகள்
கேள்விக்குறிகளான மெய்யை ஆச்சர்யக் குறிகளாக்கும் மாற்றுத்திறனாளிகளே! திறமைகளின் குவியலே! தன்னம்பிக்கையின் உருவமே! விழிகள் செயலிழந்தவர்களே! உங்கள் வாழ்க்கை விழி திறந்து படிக்கப்பட வேண்டிய பாடம்! கைகள் இழந்தவர்களே! தன்னம்பிக்கை தந்திடும் உங்களின் போராட்ட வாழ்க்கை! செவித்திறன் இழந்தவர்களே! உலகம் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் தொடர் வெற்றிகளை! மனவளர்ச்சி இல்லாதவராம் நீங்கள்! உங்கள் உதட்டினில் தானே தவழ்கிறது தூய புன்னகை! உலகின் கோணப்பார்வைக்குத் தானே குறை பிறை! நிலவுக்கு ஏது? திரும்பியிருக்கும் அரை உலகிற்கே இருட்டு! விழிகள் மூடுவதில்லை என்றும் […]
2.0
நடப்பதைக் காணும் போது ரஜினியின் மவுசு குறைந்து விட்டது போல் தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் படமான எந்திரனின் தொடர்ச்சி, பெரும் பொருட்செலவு, VFX என பரபரப்பைக் கிளப்ப ஏகப்பட்ட சங்கதிகள் 2.0 க்கு இருந்தாலும், படத்தின் ரிலீஸ் அந்தளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை. அதாவது ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் என இத்தனை பெரும் தலைகள் இருக்கும் போது, அதற்கேற்ற பெரிய ஓப்பனிங் இல்லை. படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது […]
துணுக்குத் தொகுப்பு-2
புலன் புறத்தெரிவு (Extra Sensory Perception) பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகளைத் தாண்டி மன உணர்வு எனும் ஆறாம் புலன் மனிதனை மற்ற உயிரினங்களிலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனித மனங்களில் இயற்கையாக நடைபெறும் இந்தத் தொடர் நிகழ்ச்சி, சிந்தித்து முடிவெடுத்து செயல்படும் திறனை அளிக்கிறது. இவ்வகை சிந்தனைகள் பெரும்பாலும் அறிவு (கற்றல், கேட்டல் போன்றவை மூலம் பெறுவது) அல்லது அனுபவ அடிப்படையில் அமைகிறது. சில சமயங்களில் அறிவு, அனுபவம் இவற்றைக் கடந்த உள்ளுணர்வு […]
அழகிய ஐரோப்பா – 9
(அழகிய ஐரோப்பா – 6/சிங்கார நதி) திருவிழா லண்டனில் காலை ஏழு மணிக்கே வெயில் போட்டு வாங்கத் தொடங்கியிருந்தது. இரவு முழுவதும் வீசிய குளிர் காற்று சற்றுத் தணிந்து வெளியில் ஒருவகையான உஷ்ணம் தெரிந்தது லண்டனில் இருந்து ஏனைய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவென ஒன்பது சீட் உள்ள வேன் ஒன்றை ஒரு வார வாடகைக்கு எடுத்திருந்தோம். லண்டனில் இருக்கப் போகும் கடைசி நாளான அந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும், லண்டனில் மிகவும் பிரசித்தமான […]
அழகிய ஐரோப்பா – 8
(அழகிய ஐரோப்பா – 6/அழகோ அழகு) சிங்கார நதி மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகியிருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளங் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மின்ஸ்டர் பிரிட்ஜ் என்ற இந்தப் பாலம். லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான […]
அழகிய ஐரோப்பா – 7
(அழகிய ஐரோப்பா – 6/பயணங்கள் முடிவதில்லை) அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. சிறு நடைப்பயணத்துக்குப் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்குப் பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை […]
சர்க்கார்
உண்மையில் ஜெயிக்க இதுதான் சக்சஸ் பார்முலா என்று ஒன்று இல்லாவிட்டாலும், அப்படி ஒன்று இருப்பதாக எண்ணிக் கொண்டு தமிழ்த் திரையுலகினர் ஒரு வரைமுறையில் படம் எடுப்பார்கள். அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, இரண்டு செண்டிமெண்ட் சீன், நடுநடுவே காமெடி என்று போகும் அவர்களது ஃபார்முலா. தற்போது அதில் சேர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள். ஒரு பிரிவினரைக் காயப்படுத்துவது, ஒரு கட்சியினைத் தாக்குவது, கதைத் திருட்டு வழக்கு என்ற சர்ச்சைகளும் தற்போது படத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. […]







