admin
admin's Latest Posts
அழகே..
குளுகுளு காற்று அழுவது கேட்டேன் உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம் சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன் உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம் பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன் உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம் பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன் உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம் வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன் உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம் தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன் உன் சிலைவடிவைக் […]
காளிங்க மர்த்தனம்!!
கண்களுக்கு இனியவனாம் கண்ணன் காட்சிக்கு இனியதுவாம் கடவுள் கண்களால் ரசிப்பதுவோ கண்ணன் – அகக் காட்சியாய்த் தொழுதிடவோ கடவுள் ஆயர்பாடி மாளிகையில் அயர்ந்திருந்த கண்ணனவன் வாயதனில் மண்ணுண்டு தேயத்தைக் காட்டியவன் மாயங்கள் பலசெய்து நியாயத்தை நாட்டியவன் தாயங்கள் ஒழித்தழித்த தர்மங்கள் மீட்டவனவன்!! காளிங்கன் என்றொரு கடும்விஷப் பாம்பு கலக்கிய விஷமது யமுனை வியாபித்து காகம் குருவிமுதல் கருடன் போன்றவையும் கடல்வாழ் உயிரினமும் கருக்கிச் சரித்தது!! இன்னுயிர் அனைத்தும் இன்னலைத் தழுவ மன்னுயிர் பலவும் மாண்டொழிதல் மாற தன்னுயிர் […]
மழை இரவு !
மழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா ! மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு ! மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு ! மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]
இனவாதமே பிணமாகு
கண் எட்டும் தூரம் கரையுமில்லை! கரையைத் தேடவே துடுப்புமில்லை! நீந்தி ஓடத்தான் மீனுமில்லை! மீனாய் வாழவே வழியுமில்லை! தன்னந் தனியே தத்தளிக்கிறான் – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே! கறுப்பு வெள்ளைத் தோணியிலே! இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே! எமனின் மனமாகும் இனவாதமே பிணமாகு! குயில் ஓசை இங்கே புயல் பாசை பேசுதுவே! மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே! எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்! அறிஞரின் […]
கலைஞர் எனும் பிரமிப்பு
அண்மையில் காலமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, அரசியல், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் தவிர்க்க முடியாத தலைவராக, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய குறிப்புகள் இங்கே குறுக்கெழுத்துப் புதிர் வடிவில் தரப்பட்டுள்ளன. விடுவித்து மகிழுங்கள்! இடமிருந்து வலம் கருணாநிதியின் தாயார் பெயர் (5) சாதி வேறுபாடற்ற சமூகம்,, சுமூகமாக வாழ்ந்திட கருணாநிதி முன்னெடுத்த அரசுக் குடியிருப்புத் திட்டம் (8) தனது பதினெட்டாம் வயதில், […]
மாங்குளம் வன்னியின் சுவை உணவகம்
வன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]
மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. சுமார் இரண்டு […]
பௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா
பூர்வீக மக்கள் மிதேவாகட்டன் சூ சமூக வசிப்பி 2018 Mdewakanton Sioux Community Wacipi உங்கள் அனைவரையும் நல்லிதயத்துடனும், இதமான கை குழுக்களுடனும் வரவேற்கிறோம் என்றது மினசோட்டா மாநில சாக்கோப்பி நகர மிதேவாகட்டன் பூர்விகத்தினர் சமூகம். இது வருடா வருடம் கோடை முடிவில் ஆகஸ்ட் மாத நடுவில் வரும் வார இறுதி மூன்று நாட்கள் நடைபெறும் நடன உற்சவம் ஆகும். இம்முறை ஆகஸ்ட் 17, 18, 19 ஆம் தேதிகளில் இந்நிகழ்வு நடை பெற்றது. வசிப்பி என்றால் […]
கமலின் விஸ்வரூபம்
பலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]







