வார வெளியீடு
செம்மாணிக்க சிறு கழுத்து தேன் குருவி (Ruby-throated hummingbird (Archilochus colubris))
எமது மாநிலத்தில் மே மாதம் என்றால் தாவரங்கள் துளிர்த்துப் பூத்துக் குலுங்க, தேனீக்கள் ரீங்காரம், பாடும் பரவசப் பட்சிகள் கேட்க, விதம் விதமாகக் கூடு கட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் வெளிவரும் காலம் எனலாம். இதன் போது வெளியில் பொடிநடை போட்டு அயல் அருவிக் காடுகள், பூங்காக்கள், ஏன் உங்கள் வீட்டுப் பின் பகுதியில் பறவைகள் பலவற்றைப் பார்த்து அனுபவிக்கலாம். ஆம் இது இளவேனில் கால இன்பமயம். அமெரிக்கக் கண்ட வெப்ப வலயத்தில் பலநூறு தேன் குருவிக் […]
2021 ஆஸ்கார் விருதுகள்
உலககெங்கிலும் இருக்கும் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு, கவனிக்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான விழா, கடந்த வாரயிறுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸில், யூனியன் ஸ்டேசன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த 93 ஆம் ஆண்டிற்கான இந்த விழா, கோவிட் காரணமாக ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான படங்கள் மட்டுமின்றி, கடந்தாண்டும், இந்தாண்டும் கோவிட் காரணமாகத் திரையரங்கில் வெளியாகாமல், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் இந்தாண்டு ஆஸ்கார் தேர்வில் […]
சுருதி பாலமுரளியின் இசை பயணம்
கனடாவை சேர்ந்த பன்முக இளம் இசை கலைஞரான சுருதி பாலமுரளி அவர்களுடனான இசை அனுபவங்கள் குறித்த உரையாடலை இந்தக் காணொலியில் காணலாம். உரையாடியவர் – லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் இயக்கம் – சரவணகுமரன் தயாரிப்பு – பனிப்பூக்கள்
போடுங்கம்மா ஓட்டு!!
தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..
தேர்தல் கூத்து 2021
தமிழ்நாட்டில் கொரோனாவை மிஞ்சியபடி தேர்தல் ஜூரம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் 16வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி கூட நடத்தி இருக்கலாம். அவ்வளவு வெளிப்படையாக இருக்கக் கூடாது என்பதற்காக 6ஆம் தேதி வைத்து இருப்பார்களோ, என்னமோ!!. அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலைப் பற்றிக் கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இந்திய இறையாண்மை என்று கடித்து வைத்து விடுவார்களோ என்று டெரராக இருக்கிறது. ஆளுங்கட்சியை ஒண்ணும் […]
ஒரு விசித்திரமான கனவு
அவள் கண்களால் அதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்து , மூச்சு வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , இரவு 10:00 மணியளவில் அந்த தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை படுத்திருந்தது. தூத்துக்குடி – பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்தத் தெரு பகுதி . அவள் […]
உயரம்
“என்னை எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன.கௌதம் ……..” இருவருக்கென போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துகொண்டிருந்த ஆவியைப் பார்த்தவாறு இருந்தான். “வீட்டுல வேண்டான்னு சொல்றாங்க …..அ.. அதுதான் …” “ஓ…….. அப்ப பிரேக் அப்.. அப்படித்தானே …. நல்லாயிருக்கு கெளதம் “ ” ப்ரீத்தி……. புரிஞ்சுக்கோ அதுக்காக நான் உன்ன கூப்பிடுல ……..நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன் ………..” ” நீ ஆம்பள தான …….என்ன பண்ணறதுனு […]






