Archive for October, 2014
சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

துர் நாற்றத்தைத் துரத்தியடிப்போம் மேல் நாடுகளில் வாழும் தமிழர் யாவரும் அறிந்த விடயம் சமையல் செய்து சாப்பிடுவதிலும், மற்றவர்களுக்குப் பகிர்வதிலும் நம்மில் பலர் மகிழ்ச்சியடைவர் என்பதே. ஆயினும் முந்தைய நாள் சமைத்தது முக்கால் மைல் வரை துர் நாற்றமாக மணப்பது பல்வித கலாச்சார அயலவர்களோடு அடுத்தடுத்து வாழும் போது தர்ம சங்கடமாகக் கூடிய ஒருவிடயமே. இந்த வாசனையைப் போக்குவதற்காக ஊதுபத்தி பாவிப்பதற்கு நம்மவர் பலர் முனைவர். ஊது பத்தியானது துர்நாற்றத்தை உடன் ஓரளவு குறைக்கலாம், எனினும் […]
உன்னி கிருஷ்ணன் – நேர்காணல்

தேனினும் இனிய பாவம். திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் ஊறிப்போய் பாரம்பர்ய சங்கீதத்தின் முழு அம்சங்களும் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரல். திரைத்துறையில் நுழைந்தாலேயே பெருமளவு மதிப்புத் தராத சபாக்கள் அனைத்தும் வரிசையில் நின்று தேதி கேட்கும் அளவு திறமையும் புகழும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சில பாடகர்களில் ஒருவர திரு. உன்னி கிருஷ்ணன். சமீபத்தில் திரு. உன்னிகிருஷ்ணன் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் முகமாக மினியாபோலீஸ் வந்திருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் […]
என் காவியம்

கையுயர்த்திப் பேசுகையில் மெய்வாய் மூடிக் கேட்டிருந்தேன் !! கண்விழித்துப் பார்க்கையிலோ கடைவிழிப்பார்வை விழக் காத்திருந்தேன் !! காலெடுத்து நடக்கையிலே என்வாசல் வந்திடத் துடித்திருந்தேன் !! களைமுகம் சிரிக்கையில் எனைப்பார்த்ததால் என மகிழ்ந்திருந்தேன் !! கவனமாய் அழகுதீட்ட காளையெனக்காக என்ற கனவிலிருந்தேன் !! கண்மூடித் தூங்குகையில் கனவினில் நானென எண்ணியிருந்தேன் !! கைகழுவிப் போனதனால் காவியம் பல தீட்டியவாறுள்ளேன் !!! வெ. மதுசூதனன்.
தோல்பாவைக் கூத்து

தமிழகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று. சிறிய அளவில், குறைந்த அளவு பார்வையாளர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வந்த கூத்துக் கலையே பின்னர் நாடகம் , திரைப்படம் எனும் கிளைகள் தோன்றக் காரணமாக அமைந்தது. கிளைகளாகத் தோன்றிய நாடகக் கலையும், திரைக் கலையும் மிகப் பிரம்மாண்ட அளவில் வளர்ச்சியைக் கண்டாலும், அதன் ஆணி வேரான கூத்துக் கலை மட்டும் பெரிய அளவில் பாராட்டப்படாமல், கவனிக்கப் படாமல் எதோ கிராமத்து மக்களுக்காக, விழாக் காலங்களில் என்றேனும் […]