Archive for November, 2017
அடிப் பெண்ணே…!!

மழைத் தூரலில் வானம் இலைகளின் உரசலில் மரம் உறைபனியிலும் மலரின் மணம் அடை மழையிலும் உறை பனியிலும் என்னவளின் ஆலய தரிசனம் ….!! எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!! இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில் தென்றலும் சங்கீதம் இசைக்க ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க … மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …! அருகினில் நீ … குளிர்காய்கிறேனே நான் …!! உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….! மின்னல் இடையசைவில் […]
கவித்துளிகள்

நீ எனக்குத் தேவையில்லை…!! தனிமையின் சொற்களை விழுங்கி செரித்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… நடுங்கும் விரல் கொண்டும் தழல் மூட்டத் தெரிந்து கொண்டேன். நீ எனக்குத் தேவையில்லை… அட்சய பாத்திரம் அதை நான்கு வாங்கி வைத்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… சகாய விலை பேசி உடல் புகுந்து பழகிவிட்டேன் .. நீ எனக்குத் தேவையில்லை… எரியும் பகலொன்றில் உன் எச்சில் தேடும் நிமிடம் வரை நீ எனக்குத் தேவையே இல்லை .. எரியாத பகலென்று ஏதும் உண்டா […]
அரவணைப்பு

அரவணைத்து உறவு சொல்லும் அன்பான பரிமாற்றம் அரண் அமைத்துத் தடுக்காத அன் பாற்றுப் பிரவாகம் !! கன்றொன்று பசுவதனைக் களித்தணைத்தல் வாத்சல்யம் ! கதிரொன்று தலை கவிழ்ந்து நிலமணைத்தல் பெரும்போகம் ! உயிரோடு உடல் தந்த அவர் அணைத்தல் அது நேசம் ! உடன் பிறந்து உடன் வளர்ந்த அவர் அணைத்தல் பாசம் ! நிலவோடு நிதம் பேசி அணைத்தல் ஒரு பருவம் நிழலான நட்பதனையே நிதம் அணைக்கும் இளம் பருவம் இதழோடு இதழ் சேரும் அவர் […]
சிங்கறால் பொரித்த சோறு

வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]
போர்வை

மினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது..? இந்த மழை பற்றியா? வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா ..? அட, புதுசா இருக்கே..!! எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா..? வேற என்ன பண்றது ? அதையும் சொல்லுங்க .. கேட்டுத் […]
காசேதான் கடவுளடா நாடகம்

அக்டோபர் ௮, 2017 , மினியாபொலிஸ் நகரைச் சிரிப்பு புயல் தாக்கியது. 1970 ல் வெளிவந்த காசேதான் கடவுளடா தமிழ்ப் படத்தை நாடகமாக்கியுள்ளார் Y Gee மகேந்திரன். அவர் நடத்தும் யுனைடெட் அமெசூர் ஆர்ட்டிஸ்ட் (United Amateur Artists) நிறுவனத்தினர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) என்னும் மினியாபொலிஸ் அமைப்பு இவர்களை அழைத்து வந்தது. திரு Y Gee மகேந்திரன் இந்த நாடகத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (நவம்பர் 2017)

வருட இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். வருட இறுதியில் இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த பாடல்களைக் காணப் போகும் முன்பு, சென்ற இரு மாதங்களில் வந்த பாடல்களில் மனதைக் கவர்ந்த சிலவற்றைப் பார்த்து விடலாம். மகளிர் மட்டும் – அடி வாடி திமிரா பெண்களை மையமாகக் கொண்டு இயக்குனர் பிரம்மா இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்த இப்படத்தின் இப்பாடல் வெகுக்காலத்திற்கு முன்பே வெளியாகி ஹிட்டாகி இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் அவ்வப்போது எங்கோ போய்விடுகிறார். வரும்போது, கவனிக்கத்தக்க பாடல்களைத் தந்துவிடுகிறார். ஜோதிகா […]