\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for April, 2018

சித்திரைத் தமிழிசை விழா

சித்திரைத் தமிழிசை விழா

முனைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் பங்கேற்ற சித்திரை தமிழ் இசை விழா ஏப்ரல் 29 ஆம் தேதியன்று ப்ளுமிங்டன் கென்னடி ஹைஸ்கூலில் நடைபெற்றது. இந்த ஆண்டு சித்திரையில் கோடையை வரவேற்பதா அல்லது வசந்தத்தை வரவேற்பதா என்ற குழப்பத்தில்  இருக்கும் மினசோட்டாவாசிகளுக்கு இந்த இசை தம்பதியினரை ஆரவாரத்துடன் வரவேற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. அனிதா குப்புசாமி ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய “மலரும் மொட்டும்“ நிகழ்ச்சியை, பல ஆண்டுகள் கழித்து […]

Continue Reading »

விடியும் நல்ல நாளை

விடியும் நல்ல நாளை

விளம்பி  வருடம் வரும் நேரம் விளிம்பில் வெதும்பி நிற்கிறது தமிழகம்! விரும்பியோ விரும்பாமலோ தமிழ் எனது விலாசம் விருந்தினரை வந்தாரை வாழவைப்பது எம் கலாச்சாரம்!   விளம்பரத்திற்காக இந்தியனை வேற்றுமைபடுத்தி வீண் கலகம் செய்து  விஷத்தை கக்கும் விஷமிகளின் வஞ்சனை வலையில் வீழ்ந்து விந்தைகாரர்களின்  வசீகரத்தில் கட்டுண்டுக் கெட்டது!   வினோதமாய் அன்னியமானது என் தமிழகம் இன்று! வீறுகொண்ட தன்னலமற்ற தலைவனைத் தேடுகிறது விவேகமான விவேகானந்தரின் இளைஞனுக்கு ஏங்குகிறது! வித்திட்டவரல்லவா நாம்? நாகரீகத்துக்கு வித்திட்டவரல்லவா நாம்   […]

Continue Reading »

முதுமைக் காதல்

முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள் மருவற்ற முகத்திற்கு அழகு சேர்க்க!!   மொழிபேசும் உன் இதழை மெய்மறந்து நான் பார்த்திருக்க வளையோசை கேட்டுக்கொண்டே மடிமீது தலை சாய்க்க!!   அசைந்தாடும் கூந்தல்; அதில் அலைபாயும் காற்று இசையாவும் உந்தன் கால்கொலுசில் விளையாடும் அழகே!!   கதைபேசும் கவிதையே கைகோர்க்கும் தாரகையே விலைபேசும் உன் கண்ணோடு உரையாடல் நான் தொடங்க!   வார்த்தைகள் தடுமாறி குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின! எதைச் சொல்லி மறைப்பேன் – நான் உன் சிரிப்பொலியில் […]

Continue Reading »

நி(தி)றம்படப் பழகு

Filed in கதை, வார வெளியீடு by on April 29, 2018 0 Comments
நி(தி)றம்படப் பழகு

ஏனோ இந்தக் கேள்வி இப்போதெல்லாம் சுஜாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் அவளிடம் “ சுஜா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள […]

Continue Reading »

இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?

இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?

நாளாந்த நடத்தைகள் பற்றி இணையத்தில் துச்சமான, துக்கமானச் செய்திகள், அறிக்கைகள் வருகினும் அவற்றை முற்றிலும் உண்மையென நம்பி நாம் எடுத்துக் கொள்ளலாகாது. மனிதாபிமானம் என்பது இலத்திரனியல் நூற்றாண்டிலும் தொன்மையானது . இது நாம் நாளாந்தம் மற்றவருடன் பேணக் கூடியது, பேணவேண்டியது. இதே மனிதாபிமானத்தை நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையத்திலும் கடைபிடிக்கவேண்டும், இணையத்தில் தொடர்பு நன்னெறிகளைப் பேணல் மற்றவர்கள் நுகர்வுக்கு ஒரு கருத்தை எழுதும் போதும் சற்றுச் சிந்தித்து எழுதுவதும் , சித்தரிப்புக்களைப் பகிர்வதும்  நலம். நாம் பரிமாறும் […]

Continue Reading »

அமெரிக்கத் தியேட்டர்கள் எப்படி?

அமெரிக்கத் தியேட்டர்கள் எப்படி?

தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் மற்றும் டிஜிட்டல் விநியோகிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான முட்டல் மோதலினால் 47 நாட்களாக நீடித்து வந்த தமிழ் திரையுலகின் போராட்டம் ஒருவழியாகக் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. திரையிடலுக்கான கட்டணத்தைக் குறைக்கச் சொன்னது தயாரிப்பாளர்கள் சங்கம். திரையிடல் கட்டணத்தைக் குறைப்பதைவிட, நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கட்டும் என்பது திரையரங்குகள் வாதம். முதலில் கட்டணத்தைக் குறைக்க மறுத்து, அதற்குரியக் காரணத்தைக் கூறிய க்யூப் நிறுவனம், தற்போது கட்டணத்தைச் சில காலத்திற்கு ஒரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளது. திரையரங்கு […]

Continue Reading »

புன்னகை

புன்னகை

வரிகள்  இல்லாத பொது மொழி வார்த்தைகள் சேராத வாய்மொழி உதடுகளின் விரிப்பில் மனதை மயக்கிய மாய மருந்து…   சில காலடித் தூர நடை ஒரு சிறு சுவர் தாண்டல் உதிர்த்த சிறு புன்னகை பகை மறந்த கை குலுக்கல்   ஒற்றை மரம் நடுதல் சுயம் இழக்காத உறவாடல் அத்தனையும் சேர்ந்து அறுத்ததெறிந்தது ஆறாப் பகையை     தியா –    

Continue Reading »

13 வித்தியாசங்கள் காண்க

13 வித்தியாசங்கள் காண்க

Continue Reading »

கவித்துளிகள் சில…

கவித்துளிகள் சில…

  அம்மாவின் ஓயாத இருமல் கண்ணீராய் வெளிவரும் ஆண்டுகள் கடந்த தாய்ப்பால்   ***** கோடை வெயில் நிழலை அழித்தது திடீர் மழை ***** தப்பித்த சிறு பூச்சி பேருருவாய் மேல் விழுந்தது மின்விளக்கின் மேல் தஞ்சம் ***** தென்றலின் இனிமைப் பேச்சு விழுந்து சிரிக்கும் சருகுகள் அச்சத்தோடு மனிதன் ***** அகன்ற கருப்புத்தாள் கண்மூடி எழுதுகிறேன் இரவுக் கவிதை   சா. கா. பாரதி ராஜா        

Continue Reading »

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?

ஸ்டெர்லைட் நிறுவனம் 1993 இல் தாமிர உற்பத்தி தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்த சமயத்திலிருந்தே, தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அச்சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் தொடர் பேரணி போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டோம். உள்ளூர் பொதுமக்களின் சம்மதம் இல்லாமல், மாநில அரசின் ஆதரவைப் பெற்று 1996இல், மக்களின் பாதுகாப்பை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தனது உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. இன்று இந்தியாவின் முன்னணி தாமிரத்தொழிற்சாலை என்ற நிலையில், ராட்சத உற்பத்தியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதன் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad