Archive for April, 2018
அம்மா

தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]
சிலுவையின் காதல் கடிதம்

அன்புள்ள நித்ரா, என்றும் உன் நலன் விரும்பும் சிலுவை எழுதுவது. நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்தக் காலத்தில் கடிதம் எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். இப்போது கூட நீ இதை ஒரு சின்ன சிரிப்போடு தான் படித்துக்கொண்டிருப்பாய். இதை படித்து முடிக்கும் போது உன் கருத்து மாற வாய்ப்பிருக்கிறது புகைப்படம் போல கடிதமும் காலத்தின் ஆவணம். அன்பின் வார்த்தைகளை, பிரியங்களை, அக்கறை கலந்த கண்டிப்புகளைத் தாங்கி வரும் கடிதங்கள் எந்தக் காலத்திலும் தொலையப்போவதில்லை இல்லையா? நமக்கு மிகப் […]
விடியல் ..

ஒவ்வொரு காலையும் இதழோடு முட்டிக் கொண்டதன் ஈரம் காணாத சூடான கதகதப்பில் குடுவையில் அடைத்த தேன் துளிகள் போல பருகப் பருக இன்பமாய் முகரும் மூக்கின் நுனியில் வாசம் படர்ந்திடும் இயற்கையின் விடியலாய் ஒவ்வொரு முறையும் பருகுகையில் விழிகள் அழகாய் விழித்திடும் தூக்கத்திலிருந்து! நானருந்தும் தேநீர்! – ந. ஜெகதீஸ்வரன்