Archive for January, 2019
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

கிராமியச் சூழலை, மண்மணம் மாறாது வெளிக் கொணர்பவை நாட்டுப் புறப்பாடல்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, ஆசாபாசங்களை எளிமையான சொற்களால் விளக்கிடும் பாடல் வரிகள் இவை. எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான நாட்டுப்புற வகைப் பாடல்கள் எதுகை, மோனை, இயைபு கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம். தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றாகும். தென்னகத்தின் பாங்கு , தென் + பாங்கு, தெம்மாங்கு ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்பாடல்கள் வேலைப் பளு தெரியாமலிருக்க வயல்களிலும், […]
ஸ்மார்ட் ஹோம்!! ஈஸி ஹோம்!!

அறிவியலின் வளர்ச்சி எல்லா இடங்களிலும் பரவ, வீடு பராமரிப்பில் மட்டும் அது தலையிடாமல் இருக்குமா? ஒரு மனிதனின் அத்தியாவசியத் தேவையில் ஒன்றான தங்குமிடத்தில், மனிதன் தனது வசதிக்காக உருவாக்கிய விஞ்ஞான உபகரணங்கள் பல உள்ளன. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் துவங்கிய இப்பயணம், பல பரிமாணங்கள் கடந்து, இன்று மனித தலையீடு இல்லாமல் தானாகச் செயல்படும் நிலையில் வந்து நிற்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில் வீட்டு பயன்பாட்டுக்காக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ட்ரையர், வேக்யூம் க்ளீனர் போன்ற […]