\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for January, 2019

பேட்ட

பேட்ட

எண்பது, தொண்ணூறுகளில் ரஜினி படங்களுக்கு அச்சிறுவனை அழைத்துச் செல்வார் அந்த ரஜினி ரசிகர். அப்படி ஒரு படம் பார்க்கச் சென்றிருந்த சமயம், தியேட்டருக்குள் ஓடும் போது, அச்சிறுவன் கீழே விழுகிறான். “அடி பட்டதா” எனத் தந்தை கேட்க, இல்லையென்கிறான். “அப்ப, எந்திரி… ஓடலாம். படம் போட்டுட்டான்” என்று அழைத்துக் கொண்டு ஓடுகிறார் அந்தத் தந்தை. இது போன்ற அனுபவத்தை அன்றைய சிறுவர்கள் பலர் அடைந்திருப்பார்கள். அச்சிறுவர்கள் ரஜினி ரசிகர்களாக வளர்ந்து, இன்றும் ரஜினி ரசிகர்களாக இருக்கலாம். முதல் […]

Continue Reading »

அமெரிக்க படிப்புக் கடன் ஒரு மாயக் குமிழ்?

அமெரிக்க படிப்புக் கடன் ஒரு மாயக் குமிழ்?

மாணவர் படிப்புக் கடன் மீளச் செலுத்துதல் அமெரிக்காவில் மிகவும் கவலைக்குரிய பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று வரை அமெரிக்கத் தற்போதைய மாணவர் ,பழைய மாணவர்கள் படிப்பிற்காக $1.5 டிரில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளனர். இந்த மேல் படிப்பு நல்வாழ்வு என்ற அவாவினால் அவஸ்தைப் படுபவர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. __ இன்று அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல விடயங்கள் பட்டப்பகலில் பலகாரக் கொறிப்புப் போன்று பேசியவாறு அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். கடன் வழங்குவர்களுக்குச் சாதகமாக […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 12

அழகிய ஐரோப்பா – 12

(அழகிய ஐரோப்பா – 11/நடுச் சாமம்) அறை எண் 316 பல வழிகளில் முயன்று பார்த்து விட்டோம் ஆனால் என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. “இனி என்ன செய்யலாம்… விடியும் வரை வேனுக்குள்ளேயே படுப்போம்” என்றபடி களைப்பு ஒரு பக்கம் நித்திரை ஒருபக்கம் என விரட்ட… சித்தப்பா அப்படியே சீட்டில் சாய்ந்தார்… “அப்ப இண்டைக்கு நாங்கள் ஹோட்டலுக்கு போக முடியாது…” என்றான் மகன் இடியுடன் மின்னல் வெட்டியது. சிறிது நேரத்தில் மழை சற்று தணிந்தது […]

Continue Reading »

அரசுத் துறைகளின் பணி முடக்கம்

Filed in தலையங்கம் by on January 20, 2019 0 Comments
அரசுத் துறைகளின் பணி முடக்கம்

அமெரிக்க அரசாங்கத் துறைகளில் சில, கடந்த 29 நாட்களாக, பணி முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ எட்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது இரண்டாவது சம்பளத்தைத் தவறவிட்டுள்ளார்கள். இவர்களில் மிக அத்தியாவசியமில்லாத துறைகளில் பணி புரியும் நான்கு லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, கல்வி, சட்ட ஒழுங்கு போன்ற அத்தியாவசியத் துறைகளிலும் பணிகள் மந்தமடைந்துள்ளன. பொதுவாக, வரப்போகும் ஆண்டுக்கான வரவு செலவுகள் கணக்கிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செப்டம்பர் இறுதியில், இரு அவைகளின் ஒப்புதலுடன் […]

Continue Reading »

எல்லைப் பாதுகாப்புச் சுவரும் மக்களின் எதிர்பார்ப்பும்

எல்லைப் பாதுகாப்புச் சுவரும் மக்களின் எதிர்பார்ப்பும்

உலக வரலாற்றில், பல நாடுகள் எதிரி நாடுகளிடமிருந்து காத்துக் கொள்ள எல்லைச் சுவர்களை எழுப்பியிருக்கின்றன . சுமேரிய நாகரீகம் தொடங்கி, ஏதென்ஸ் சுவர், சீனப் பெருஞ்சுவர், பெர்லின் சுவர், இந்திய வங்கதேச எல்லைச் சுவர் எனப் பட்டியல் நீள்கிறது. காலச் சுழற்சியில் இவற்றில் சில சுவர்கள் பலமிழந்து விழுந்து அழிந்தன. நாடுகளிடையே அரசியல்  நல்லிணக்கம் ஏற்பட்டதால் சில சுவர்கள் தகர்க்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக புதிய எல்லைச் சுவர் பற்றிய தர்க்கமொன்று முளைத்து, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது. […]

Continue Reading »

ஆண்டாள் கல்யாணம்

ஆண்டாள் கல்யாணம்

ஏதோ  ஒரு காரணத்தினால் பரம்பொருளை பிரிந்த ஜீவாத்மா, லோக வியாபாரம் என்னும் சுழற்சியில் பிறப்பு, இறப்பு என்னும் மாய வலைக்குள் சிக்கி உழல்கிறது. “அந் நாள்  நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்” என்ற வாக்கிற்கிணங்க ஜீவாத்மா மீண்டும் மீண்டும் சுழன்றபடியே இருக்கிறது.அந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை அடைவதற்கு ஒரு  மார்க்கமே பக்தி மார்க்கம். “பவ்யதே இதி பக்தி: ” என பக்தி தோன்றுவதற்கு முதலில் மனதில் பவ்யம் மிக அவசியம். பக்தி மார்க்கத்தில் இறைவனை உணர்ந்து […]

Continue Reading »

பக்தர்களும் பதர்களும்

பக்தர்களும் பதர்களும்

பகுத்தறிவுச் சுடரென்று பகட்டு வார்த்தைபேசி பணங்காசு ஈட்டுதற்குப் பழிபாவம் நினைத்தறியாப் பரிவில்லா ஒருகூட்டம் பகர்ந்த சொல்லதனால் பயிரான கவிதையிது! பலர்முன்னே அவருரைத்த பண்பில்லாச் சொல்தானென்ன? பதினெட்டாம் படியினைப் பலவிரதமிருந்து கடப்பவர் பலகாதம் நடந்துசெல்வது படியரிசி கடத்திடவாம், பல்லிளித்து உதிர்த்திட்டார் பழியான இச்சொல்லை! பயனில்லாச் சொல்லாராய்வோம்!! விரதம் பலவிருந்து விஸ்வசுகம் அதுமறந்து வில்லாளன் தரிசனத்திற்கு விரைந்தே சென்றிடுபவரை விளைநெல்லைக் கடத்தும் வித்தையிது என்றே விரோதமாய்ப் பேசுகின்றார் வித்தகராய்க் கருதிக்கொண்டு!! வாகனங்கள் வழியாக விளைநெல்லைக் கொண்டுசெலல் வாகாகத் தடுத்ததனால் வழிப்போக்கர் […]

Continue Reading »

காவியக் காதல் – பகுதி 1

காவியக் காதல் – பகுதி 1

திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் சித்தார்த். அவனால் விவரிக்க முடியாத கனவு அது. ஏ.சி. யின்  முழுவதுமான குளிர்ச்சியிலும், அவன் முகம் முழுவதும் வியர்த்திருந்தது. அது கனவுதான் என்று உறுதிப் படுத்திக் கொள்வதற்கே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. அந்தக் கும்மிருட்டில், தனது வலதுபுறம் இருந்த சிறிய அலார்ம் க்ளாக் மூன்று மணி, பதினேழு நிமிடம் எனக் காட்டி, சிறிதளவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. கண்களை இடுக்கி, இருட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு இடதுபுறம் திரும்பிப் பார்க்க, மனைவி […]

Continue Reading »

தலைமுறை Z இன் எழுச்சி (The rise of Generation Z)

தலைமுறை Z இன் எழுச்சி (The rise of Generation Z)

அரசு, கல்வி, வர்த்தக தாபனங்கள் அடுத்த சனப்பெருக்கத்தில் பெருந்தலைமுறை ஆகிய மிலேனியல் (Millennials) 90 மில்லியன் ஆட்களை எவ்வாறு வேலைகளுக்கு உள்ளெடுக்கலாம் என்று ஆராய்ந்தவாறு உள்ளனர். மிலேனியல் தலைமுறை என்பது 1980ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர்களைக் குறிப்பிடுவது.  இதே சமயம் இவ்வருடம் 2019 இல், 2001 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் – தலைமுறை ஜென் Z – பெரும் அலையாக அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் தாபன உலகளாவிய கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. உலகளாவில் பார்க்கும் போதும், […]

Continue Reading »

துணுக்குத் தொகுப்பு – பறவைகள் பலவிதம்

துணுக்குத் தொகுப்பு – பறவைகள் பலவிதம்

  பறவைகள் பலவிதம் பொதுவாகத் தோல்விகளில் மனந்துவளாது, புத்துயிர் பெற்று மீண்டு வரும் மனோபாவத்தை ஃபீனிக்ஸ் பறவையோடு ஒப்பிடுவது வழக்கம். எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டு எழும் இந்த அக்கினிப் பறவைக்கு இறப்பே கிடையாது எனும் கருத்தும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர்  மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை   ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைத்திடத் திட்டங்களும் உருவாயின. சென்ற ஆண்டின் இறுதியில், ‘தோல்விகளைப் புறந்தள்ளி புத்தாண்டில் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுவோம்’ என்ற […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad