\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for January, 2020

அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்

அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்

அட்லாண்டா உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு சார்பில், திருவள்ளுவர் தினமான தை இரண்டாம் நாள், உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாளாகச்  சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. சனவரி 19, 2020, ஞாயிறன்று அட்லாண்டாவில்  உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் தொடக்க நிகழ்வும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் நாளும் ஒருசேர நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் ராஜி ராமச்சந்திரனின் வரவேற்புரைக்குப் பிறகு உறுப்பினர் பிரதீபா பிரேம் வரவேற்புக் கவிதை வாசிக்க, நிகழ்வு களைகட்டியது. மூத்த தமிழ் அறிஞரும், கவிஞருமான ந. குமரேசன் தமது சிறப்புரையில் […]

Continue Reading »

மினசோட்டாவில் பனிக்கால சிலை

மினசோட்டாவில் பனிக்கால சிலை

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்த  பிரதேசமாகும். பனிப்பொழிவு மிக அதிகமிருக்கும். குளிர்காலத்தில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியே நின்றால் உறைந்து போய் விடக்கூடிய அளவுக்கு வெப்பநிலை பூஜ்யத்துக்கும் 50 டிகிரி குறைவாய் இருக்கும் தினங்களும் இங்குண்டு. குளிர்காலங்களில் சிறுவர்களும், பெரியவர்களும் விளையாட அவர்களுக்குத் தகுந்த வகையில் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும்,  அதில் ஒன்று தான் இன்று நாம் பார்க்கக்கூடிய பனி திமிங்கலம்.  இந்தப் பனி திமிங்கலத்தை ஆஸ்டின் (Austin),  ட்ரெவர் (Trevor), […]

Continue Reading »

சங்கமம் 2020

சங்கமம் 2020

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் கொண்டாட்ட விழாவான சங்கமம், இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 18ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை 11:30 ஆரம்பித்த இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை ஆடல், பாடல், இசை, நாடகம் எனத் தொடர் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழிந்தது. மதிய சிறப்புப் பொங்கல் உணவு மற்றும் உபசரிப்புடன் விழா தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த […]

Continue Reading »

குமார்ஸ் தென்னிந்திய உணவகம்

குமார்ஸ் தென்னிந்திய உணவகம்

வட அமெரிக்காவில் பல இந்திய உணவகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு உணவுகளுக்கெனப் பிரத்யேக உணவகமாக, முதலில் டெக்ஸாஸில் தொடங்கப்பட்டு, இன்று அமெரிக்காவில் பல நகரங்களில் கிளை பரப்பி வருகிறது, குமார்’ஸ் தென்னிந்திய கிராமத்து சமையல் முறை உணவகம் (Kumar’s South Indian Village Cuisine). மினியாபொலிஸ் ஆப்பிள் வேலி பகுதியில் சமீபத்தில் உதயமாகியிருக்கும் குமார்’ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு. ராமையும், குமார்’ஸ் உணவகத்தின் முதல் கிளையை டெக்ஸாஸில் தொடங்கி, பிறகு பல இடங்களிலும் அமைக்க உதவி வரும் திரு. […]

Continue Reading »

தர்பார் – ஒரு பார்வை

தர்பார் – ஒரு பார்வை

தீபாவளி, பொங்கல் உட்பட  எல்லா பண்டிகை நாட்களிலும்  நயன்தாரா படம் நிச்சயமாக வந்துவிடுகிறது. நயன்தாராவுக்கு ஜோடியாக அஜித், விஜய் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்கள் நடித்து விடுவதால் அவர்களுக்கும் ஒரு ஹிட் படம் அமைந்துவிடுகிறது. இந்த நடிகர்களின் வரிசையில் கமல்ஹாசன் இன்னும் சேரவில்லை. தலைவி பெரிய மனது வைத்து அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமும்கூட. கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புவோம்.  இப்படியாக, இந்த பொங்கலுக்கு லைக்கா நிறுவனம் தயாரிப்பில், எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் […]

Continue Reading »

புத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம்

புத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம்

சென்பாலனின் முன்னைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களம்; ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில் தமிழகத்திற்குக் கடத்தப்படும் 40 கிலோ தங்கம் அங்கு விற்கப்பட்டு அந்தப்  பணம் அன்று வெளிநாட்டிலிருந்த இயக்கப் பொறுப்பாளருக்கு மாற்றப்படுகிறது. அவர் அந்தப் பணத்தினை “பிட் கொயினாக” மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினைத் திறப்பதற்கான குறிச்சொல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் தெரியும்; அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன். அவரை நம்ப வைத்து […]

Continue Reading »

புத்தகத் திறனாய்வு – பெர்முடா

புத்தகத் திறனாய்வு – பெர்முடா

பெர்முடா முக்கோணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பக்கத்தில போனவன் எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்திடும்; காரணமே புரியாமல் காணாமல் போனவர்கள் அதிகம் பேர். அப்படிப்பட்ட ஒரு கதைக்களம் தான் இது. “பெர்முடா” – இதுதான் கதைத்  தலைப்பு. களம் என்று பார்த்தால் பொருந்தாக் காமம்; மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமம் இதுதான் கதையின் கரு.  சில புத்தகங்களைப் படிக்கும் போது, ஏன்தான் இதைப் படித்தோம் என்று தோன்றும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அப்படித் தான் தோன்றியது. […]

Continue Reading »

இதுவா வாழ்க்கை?

இதுவா  வாழ்க்கை?

தொலைக்காட்சிப்   பெட்டிநம்மின் வீட்டிற்   குள்ளே தொகைகொடுக்க   வந்தபின்னே புத்த  கங்கள் விலைகொடுத்து   வாங்குவதை நிறுத்தி   விட்டோம் வீற்றிருந்து   படிப்பதையும் விட்டு  விட்டோம் ! அலைபேசி   நம்கைக்கு   வந்த பின்போ அழகான   கையெழுத்தில்   நலங்கள் கேட்டுக் கலையாக   எழுதிவந்த   கடித மெல்லாம் காணாமல்  போனதுவே கையை   விட்டே !   பொன்னாக   மேசையின்மேல்   கணினி வந்தே பொலிவாக  […]

Continue Reading »

பனிகாலப் பரவசம் 2020

பனிகாலப் பரவசம் 2020

  January/தை மாதம் எது எங்கு  எப்போது நிகழ்வு பனிச்சறுக்கப் பார்ட்டி   Lutsen, Minnesota Jan 10 – 11 மினசோட்டா வடக்கிழக்குப் பகுதியில் Lutsen மலைச்சாரல்கள் கோலாகலமாக பனிச்சறுக்குதல் கொண்டாட்டங்களை வருடாந்தம் கொண்டாடும். இவ்விடம் பனிக்குடிசைகள் Charlet  அனுபவமும் போகுபவர்க்குக் கிடைக்கும் I.C.E Fest Little Falls, Minnesota Jan 11-12 இது மூன்றாவது வருட பனிக் கொண்டாட்டம். உறைந்த ஏரியின் மேல் பெரும் Carousel (merry-go-round சுழற்றி) மற்றும் பனிச் சைக்கிள், பனிச்சப்பாத்து […]

Continue Reading »

ஓய்வுக்காலத்திற்கு ரெடியா? 401(K) ஒரு பார்வை

ஓய்வுக்காலத்திற்கு ரெடியா? 401(K) ஒரு பார்வை

அமெரிக்காவுக்குப் புதிதாக வேலைக்கு வந்தவர் என்றால், இந்த 401(K) என்கிற பதத்தைக் கேள்விப்பட்டு, அது என்ன, ஏது என்று ஒரு குழப்பம் ஏற்பட்டு, குழப்பத்தைத் தவிர்க்க அதைப் பற்றிக் கொள்ளாமலே சிலர் விட்டிருப்பர். அறிந்துக்கொள்ள ஆர்வம் கொண்டோருக்கும், அது குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 401(K) குறித்த தகவல்களைத் தமிழில் அளிக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். வேலை பார்ப்பவரோ, தொழில் புரிபவரோ, ஒரு வயது வரை மட்டுமே உழைப்பதற்கு உடலில் பலமோ, மனதில் திடமோ இருக்கும். […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad