Archive for January, 2020
நீர்த் திவலைகள் – சிறுகதைத் தொகுப்பு

தமிழ் இலக்கியங்களில், சிறுகதைகளுக்குச் சிறப்பான, பிரத்யேகமான இடமுண்டு. கவிதை நடையிலிருந்து வேறுபட்டு உரை வடிவில், புனைவுகள் சுருக்கமாக இருப்பதால், வாசகர்களால் சிறுகதைகள் பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகமாக உருவாக்கப்படாத காலத்தில், வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை வாசிப்பதற்காகக் காத்திருந்த பெண்கள், இளைஞர் கூட்டங்கள் ஏராளம். தொழில்நுட்பக் கலாச்சார மாற்றங்களினால் புத்தக வாசிப்பு ஓரளவு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும், அண்மைக்காலப் புத்தகக் கண்காட்சி விற்பனைப் புள்ளி விவரங்கள், சிறுகதைத் தொகுப்புகளுக்கான வரவேற்பு அதிகரிப்பதாகச் சொல்வது மகிழ்ச்சி தருகிறது. சிறுகதை […]
வட்டிக்காரி

வட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள் நன்றாகத்தானே இருந்தாள். நேற்று மாலை மூன்று மணிக்கு வந்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பணம் பத்தாயிரம் வாங்கி சென்றாளே ! குப்பக்கா கதவை திறந்த உடன் இந்த செய்தியை சொல்லுகிறாளே, உண்மையாய் இருக்குமா? அப்படி பொசுக்கென்று போகிற உடம்பா அது ? ஆள் நல்ல திட்காத்திரமாகத்தானே இருந்தாள். பணம் வேறு பத்தாயிரம் வாங்கிட்டு […]
மினசோட்டாவின் தமிழ் மொழி மற்றும் மரபு மாத பிரகடனம்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாண ஆளுனர் திரு. டிம் வால்ஸ் (Tim Walz) அவர்கள் இந்தாண்டு 2020 ஜனவரி மாதத்தை மினசோட்டாவில் “தமிழ் மொழி மற்றும் மரபு” மாதமாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இதற்கான பிரகடனத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திட்டு, மினசோட்டா மாகாண முத்திரை பதித்த ஆவணத்தை மினசோட்டா தமிழ் சங்கத்திடம் பகிர்ந்திருக்கிறார். இது போன்ற பிரகடனங்கள் முக்கிய நிகழ்வை ஒட்டி, அதன் முக்கியத்துவத்தை மாநில மக்கள் அறிந்துக்கொள்ளும்பொருட்டு அரசால் வெளியிடப்படுகிறது. இந்தப் பிரகடனத்தில் தமிழ் […]
இம்பீச்மென்ட் – இன்றைய நிலை

2019 ஆகஸ்ட் 12ஆம் நாள், அமெரிக்க அதிபரான டானல்ட் ட்ரம்ப், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சில தனிப்பட்ட காரணங்களுக்காக உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த ராணுவ உதவியை நிறுத்தினார் என்று புகார் எழுப்பினார் அடையாளம் காட்டிக்கொள்ளாத நபர் ஒருவர். விசில் ப்ளோயர் (whistle blower) எனும் இடித்துரைப்பாளரான இவர் திருவாளர் ட்ரம்ப் அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உக்ரைன் அதிபர் வோளோடிமரிடம், அந்நாட்டுக்கு அளிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தந்திருந்த $250 மில்லியன் ராணுவ உதவிக்கு மாறாக, அவரிடமிருந்து […]
மால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

ப்ளூமிங்டனில் மால் ஆஃப் அமெரிக்காவில், டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு, புத்தாண்டுக் கொண்டாட்டமாக, மூன்லைட் சர்க்கஸ் (Moonlight Circus) என்ற நிகழ்ச்சியும், ஃபேமிலி கவுண்ட் டவுன் டான்ஸ் பார்ட்டி (Family Countdown Dance Party) என்ற நிகழ்ச்சியும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. செலியஸ் ஏரியல் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ (Xelias Aerial Arts Studio) என்ற குழு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். வந்திருந்த பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மகிழ்வுடன் […]