\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for May, 2022

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மே 2022)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மே 2022)

கடந்த பகுதியில் (நவம்பர் இதழ்) சென்ற வருடம் முழுமைக்கும் வந்திருந்த படங்களில் இருந்த நல்ல பாடல்களைப் பார்த்தோம். வருடத்தின் கடைசி இரு மாதங்களில் வந்திருந்த படங்கள் மட்டும், அதில் இடம் பெறவில்லை. இவ்வருடம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதால், கடந்த நான்கு மாதங்களில் வெளியாகிய படங்களில் இருக்கும் குறிப்பிடத்தகுந்த பாடல்களை, இந்தப் பகுதியில் பார்ப்போம்.   முதல் நீ முடிவும் நீ நடிகர், இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்குனர் அவதாரம் எடுத்த படம். 96 படம் போல் […]

Continue Reading »

ஏப்ரல் மேயிலே…

ஏப்ரல் மேயிலே…

“ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை காஞ்சு போச்சுடா” பாடலை மினசோட்டாவில் இருக்கும் நாம் பாடினாலும் பொருத்தமாகத் தான் இருக்கும் போல!! ஊசியாய் குத்தும் குளிர் இல்லை அவ்வளவு தான், ஆனால் இன்னும் ஜாக்கெட் இல்லாமல் வெளியே போக முடியவில்லை. “ஜாக்கெட் ஜாக்கெட் ஜாக்கெட், ஐ டோண்ட் லைக் ஜாக்கெட், பட் ஜாக்கெட் லைக்ஸ் மீ” என்று கேஜிஎப்-2 டயலாக் பேச பொருத்தமானவர்கள் மினசோட்டாவாசிகள். பொதுவாக, மார்ச் மாதம் வந்தால் குளிர் போய்க் கொஞ்சம் கதகதப்பு வரும் என்பது ஐதீகம். […]

Continue Reading »

Donut Dashன் 5 மைல் (Mile) ஓட்டப்பந்தயம்

Donut Dashன் 5 மைல் (Mile) ஓட்டப்பந்தயம்

மினசோட்டா மாநிலத்தில் மினடோங்கா(Minnetonka) என்ற நகரில் கடந்த சனிக்கிழமை, மே 7ஆம் தேதி Eagle Ridge Academy பள்ளி சார்பாக எட்டாவது ஆண்டு ‘Donut Dash’ன் 5 மைல் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்காக காலை 7 மணி முதல் அனைத்து ஏற்பாடுகளும்  சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தன. சிறுவர்கள் விளையாடி மகிழ பொழுதுபோக்கு அம்சங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வோர் தயாராவதற்கு ஜூம்பா நடனம் மூலம் (Zumba Warm-Ups) ஆயத்தப் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராகினர். போட்டி குறித்த மேலதிக […]

Continue Reading »

பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

Filed in கதை, வார வெளியீடு by on May 20, 2022 1 Comment
பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

“என்ன குழந்தை?” என்று ‘துவாசை’ நோக்கிப் போய்க்கொண்டிருந்த பெருவிரைவு ரயிலிலில் ஒரு குரல் தெறித்தது. மொழிப் பாகுபாடின்றி பல தலைகள் குரல் வந்த திக்கில் திரும்பின. தன்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என அதுவரை மனத்தில் ஆக்கிரமித்திருந்த தவிப்பு அகிலனைவிட்டுத் தற்காலிகமாக விலக, குரலுக்கு உரியவனின் மேல் பார்வையை அனுப்பினான். அகிலனுக்கும் அவனுக்குமிடையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தனர். அவனுக்கும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சீனர் ஒருவர் முணுமுணுத்தார். உறக்கம் கலைக்கப்பட்ட கோபம் அவரது வெளுத்த […]

Continue Reading »

அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்

அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்

பணி நிமித்தம் புதிதாக அமெரிக்கா வருபவர்கள், வந்தவுடன் முதல் வாரத்தில் செய்ய வேண்டிய 10 முக்கிய வேலைகள் இவை. அமெரிக்கப் பயணத் திட்டத்தில் உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இருந்தால், தவறாமல் இதைப் பகிரவும். I-9 வேலைக்குச் சேர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டியது – I-9 பாரம் (Form I-9). ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவருடைய வேலை செய்வதற்குரிய தகுதியுடன் இருக்கிறாரா என்று அந்த நிறுவனம் சரிபார்க்கும் நடைமுறை இது. முதலில் […]

Continue Reading »

மனநல விழிப்புணர்வு மாதம்

மனநல விழிப்புணர்வு மாதம்

மன ஆரோக்கியம் அல்லது மனநலன் என்பது ஒருவரின் உளவியல், மனவெழுச்சி, சமூகப் பார்வை ஆகியவற்றைப் பொறுத்து அமைவதாகும். ஆரோக்கியமான மனம் ஒருவரைத் தெளிவாகச் சிந்திக்கவும், ஆக்கப்பூர்வமாகச் செயல்படவும் தூண்டி அவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. உடல் நலமும், மன நலமும் ஒன்றையொன்று சார்ந்தவை. தங்கள் உடல் நலனைப் பேணிப் பாதுகாத்து, அக்கறை காட்டும் 90% மக்கள், மன நலத்தைப் பற்றிக் கவலைபடுவதில்லை என்பதே உண்மை.  நாமெல்லோரும் அவ்வப்போது உடல் ரீதியான உபாதைகளுக்கு உள்ளாவதைப் போல மன ரீதியான […]

Continue Reading »

பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்

பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்

​​ சென்ற ஜனவரி மாதம், பனிப்பூக்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியினை  அறிவித்திருந்தோம். ‘மனித உறவுகள்’ என்ற கருவின் அடிப்படையில் ஏராளமான கதைகள் எமக்கு வந்து சேர்ந்தன. உலகெங்கிலுமிருந்து அருமையான படைப்பாற்றலுடன்,  சிரத்தையெடுத்து போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பனிப்பூக்களின் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்து படைப்புகளை அளித்திடவும் வேண்டுகிறோம். போட்டிக்கு வந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் உறவுகளின் பரிமாணத்தை வெவ்வேறு கோணங்களில், யதார்த்தத்துடன், மிக நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருந்தன. கதைகளை வாசித்த எமது நடுவர் குழுவினர், வார்த்தைகளால் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad