admin
admin's Latest Posts
ஆண்டாள் கல்யாணம்
ஏதோ ஒரு காரணத்தினால் பரம்பொருளை பிரிந்த ஜீவாத்மா, லோக வியாபாரம் என்னும் சுழற்சியில் பிறப்பு, இறப்பு என்னும் மாய வலைக்குள் சிக்கி உழல்கிறது. “அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்” என்ற வாக்கிற்கிணங்க ஜீவாத்மா மீண்டும் மீண்டும் சுழன்றபடியே இருக்கிறது.அந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை அடைவதற்கு ஒரு மார்க்கமே பக்தி மார்க்கம். “பவ்யதே இதி பக்தி: ” என பக்தி தோன்றுவதற்கு முதலில் மனதில் பவ்யம் மிக அவசியம். பக்தி மார்க்கத்தில் இறைவனை உணர்ந்து […]
காவியக் காதல் – பகுதி 1
திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் சித்தார்த். அவனால் விவரிக்க முடியாத கனவு அது. ஏ.சி. யின் முழுவதுமான குளிர்ச்சியிலும், அவன் முகம் முழுவதும் வியர்த்திருந்தது. அது கனவுதான் என்று உறுதிப் படுத்திக் கொள்வதற்கே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. அந்தக் கும்மிருட்டில், தனது வலதுபுறம் இருந்த சிறிய அலார்ம் க்ளாக் மூன்று மணி, பதினேழு நிமிடம் எனக் காட்டி, சிறிதளவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. கண்களை இடுக்கி, இருட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு இடதுபுறம் திரும்பிப் பார்க்க, மனைவி […]
தலைமுறை Z இன் எழுச்சி (The rise of Generation Z)
அரசு, கல்வி, வர்த்தக தாபனங்கள் அடுத்த சனப்பெருக்கத்தில் பெருந்தலைமுறை ஆகிய மிலேனியல் (Millennials) 90 மில்லியன் ஆட்களை எவ்வாறு வேலைகளுக்கு உள்ளெடுக்கலாம் என்று ஆராய்ந்தவாறு உள்ளனர். மிலேனியல் தலைமுறை என்பது 1980ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர்களைக் குறிப்பிடுவது. இதே சமயம் இவ்வருடம் 2019 இல், 2001 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் – தலைமுறை ஜென் Z – பெரும் அலையாக அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் தாபன உலகளாவிய கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. உலகளாவில் பார்க்கும் போதும், […]
துணுக்குத் தொகுப்பு – பறவைகள் பலவிதம்
பறவைகள் பலவிதம் பொதுவாகத் தோல்விகளில் மனந்துவளாது, புத்துயிர் பெற்று மீண்டு வரும் மனோபாவத்தை ஃபீனிக்ஸ் பறவையோடு ஒப்பிடுவது வழக்கம். எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டு எழும் இந்த அக்கினிப் பறவைக்கு இறப்பே கிடையாது எனும் கருத்தும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைத்திடத் திட்டங்களும் உருவாயின. சென்ற ஆண்டின் இறுதியில், ‘தோல்விகளைப் புறந்தள்ளி புத்தாண்டில் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுவோம்’ என்ற […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
கிராமியச் சூழலை, மண்மணம் மாறாது வெளிக் கொணர்பவை நாட்டுப் புறப்பாடல்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, ஆசாபாசங்களை எளிமையான சொற்களால் விளக்கிடும் பாடல் வரிகள் இவை. எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான நாட்டுப்புற வகைப் பாடல்கள் எதுகை, மோனை, இயைபு கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம். தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றாகும். தென்னகத்தின் பாங்கு , தென் + பாங்கு, தெம்மாங்கு ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்பாடல்கள் வேலைப் பளு தெரியாமலிருக்க வயல்களிலும், […]
ஸ்மார்ட் ஹோம்!! ஈஸி ஹோம்!!
அறிவியலின் வளர்ச்சி எல்லா இடங்களிலும் பரவ, வீடு பராமரிப்பில் மட்டும் அது தலையிடாமல் இருக்குமா? ஒரு மனிதனின் அத்தியாவசியத் தேவையில் ஒன்றான தங்குமிடத்தில், மனிதன் தனது வசதிக்காக உருவாக்கிய விஞ்ஞான உபகரணங்கள் பல உள்ளன. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் துவங்கிய இப்பயணம், பல பரிமாணங்கள் கடந்து, இன்று மனித தலையீடு இல்லாமல் தானாகச் செயல்படும் நிலையில் வந்து நிற்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில் வீட்டு பயன்பாட்டுக்காக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ட்ரையர், வேக்யூம் க்ளீனர் போன்ற […]
அழகிய ஐரோப்பா – 11
(அழகிய ஐரோப்பா – 6/ஃபெரி) நடுச் சாமம் நாங்கள் மறு கரையை வந்தடைந்த போது ஃபிரான்சில் மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. இரவு நேரம் என்பதால் பெரியளவில் கூட்டம் இருக்கவில்லை. ஃபெரி நிற்பதற்கு முன்னராக எல்லோரும் கீழ் தளத்துக்குப் போய் எங்கள் வேனில் ஏறி வெளியில் போவதற்குத் தயாராக இருந்தோம். இங்கிருந்து பாரிஸ் போவதற்கு மூன்று தொடக்கம் நான்கு மணித்தியாலங்கள் ஆகும் என்கிறார் சித்தப்பா. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நின்று வெளியில் வந்தோம். இருட்டில் எனக்கு […]
பிரபஞ்சன்
ஏறத்தாழ 57 வருடங்களாக தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களின் மனதில் தனித்தன்மையான இடம் பிடித்திருக்கும் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் காலமானார். “மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். அதற்கு அவன் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கலையும், இலக்கியமும் ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல சிநேகிதனாய் அமையும்” என்று சொல்லி வந்தவர் பிரபஞ்சன். சொன்னதோடு […]
2018 டாப் 10 பாடல்கள்
2018ஐ பொறுத்தவரை பெரிய ‘மியூசிக்கல் ஹிட்’ என்று சொல்லும் வகை படங்கள் நிறைய வெளிவரவில்லை. இவ்வருடமும் இளம் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணமுள்ளது. வழக்கம் போல், இளையராஜா என்ன படங்களில் இசையமைத்தார் என்று தெரியாத வகையிலான படங்களுக்கு இசையமைத்தார். ஆனால், செய்திகளில் ராயல்டி தொடர்பாக அதிகம் அடிபட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லிக்கொள்ளும்படி செக்கச் சிவந்த வானம், சர்கார், 2.0 என பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது இருப்பைக் காட்டினார். கடந்த வருடங்களுக்கு ஒப்பிட்டால், இந்த வருடம் யுவன் ஷங்கர் […]







