admin
admin's Latest Posts
அழகிய ஐரோப்பா – 6
(அழகிய ஐரோப்பா – 5/படகுச் சவாரி) பயணங்கள் முடிவதில்லை லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். … நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் […]
பட்டாசில்லா தீபாவளி!!
பஞ்சணையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே! பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே! பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்! – வெ. மதுசூதனன்
அழகிய ஐரோப்பா – 5
(அழகிய ஐரோப்பா – 4/முதலிரவு) படகுச் சவாரி இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன். மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் […]
ஒரு நாள் இரவு ..
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை. சுழன்று, சுழன்று அடித்த காற்று ஜன்னல் கண்ணாடியைச் சடசடவென அதிரச் செய்தது. தெருவோர மஞ்சள் விளக்கில் நாலாபுறமும் பறந்த பனித்துகள்களுடன், ஏற்கனவே தரையில் விழுந்திருந்த பனியும் கிளம்பி பெரிய பனிப்படலத்தை உருவாக்கியிருந்தது தெரிந்தது. இதுவரையில் ஏழெட்டு அங்குல பனி விழுந்திருக்கலாம். நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும், மேலும் சுமார் ஒண்ணரை அடிக்கான பனிப்பொழிவு தொடருமெனவும் ரேடியோவில் சொன்னார்கள். டேபிளிலிருந்த […]
மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம். 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். […]
ஆமென்!
”ஏண்டி லக்ஷ்மி…. நியூஸ் கேட்டியா?”, மூச்சிறைக்க பேஸ்மெண்டிலிருந்து மேலேயிருக்கும் சமையலறைக்கு ஓடி வந்தான் கணேஷ். அப்பொழுதுதான் ஃபோன் பேசி முடித்து, அந்த ஃபோனையும் கையிலேயே எடுத்துக் கொண்டு வந்திருந்தான்… “என்னன்னா, என்ன நியூஸ், யாரு ஃபோன்ல?”. வழக்கமாக அவ்வளவாகப் பதற்றமடையாத கணவன் பதறுகிறானே என்று அவளுக்குப் பதற்றம். இந்தியாவிலிருந்த வயது முதிர்ந்தவர்களெல்லாம் ஒரு முறை அவளது மனக்கண் முன்னே வந்து சென்றனர். ”யாருக்கும் எதுவும் ஆகியிருக்கக்கூடாது ராகவேந்திரா” என்று தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். ”ஜோஸஃப் ஃபோன் […]
முயன்றிடு …
செயலைச் செய்யும் முன் முயன்று தான் பார்ப்போமோ என்று முனைப்பதல்ல முயற்சி எண்ணங்கள் கூட செயல்களும் செம்மையாய்ச் செய்தல் வேண்டும் விளைவுகள் எண்ணாது விடியலைப் படைத்திட வேண்டும் பலவித முயற்சிகள் வரையற்ற தோல்விகள் காயங்களில் படர்ந்த அனுபவங்கள் இவையெல்லாம் ஒரு நாள் மலரும் வெற்றி என்ற கனியாய் … ச.கிருத்திகா
அமெரிக்க இடைத்தேர்தல் 2018
ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும். (Special elections) இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான (House Representative)பிர தேர்தல் அதிபர் […]
அழகிய ஐரோப்பா – 4
(அழகிய ஐரோப்பா – 3/அந்த ஏழு நாட்கள்) முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் […]
ரோஜா
பலர் உன்னைப் பார்த்து புகழ்ந்தார்கள் அவர்களுக்கு உன் அழகு மட்டுமே தெரிந்தது! உன்னை உன் தாயிடமிருத்து பிரித்தவர்களென அவர்களை நீ வெறுக்கவில்லை! இப்போது உணர்ந்தேன் உனது அழகு – உன் தியாகம் மட்டுமே! ச.கிருத்திகா பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி கோபி.







