Archive for October, 2016
தரவுத் திருட்டுகள்

பழங்காலங்களில் ஒரு பொருளுக்கு ஈடாக இன்னொரு பொருளைப் பரிமாறிக் கொள்ளும் ‘பண்டம் மாற்றும்’ முறை வழக்கத்தில் இருந்தது. தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் தேவையான அனைத்தையும் தானே தயாரிக்க முடியாமல் போன பொழுது, மனிதனுக்கு அடுத்தவரிடமிருந்து பொருளை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது தான் தயாரிக்கக் கூடிய அல்லது தனக்குக் கிடைக்கக் கூடிய பொருளை அடுத்தவரிடம் கொடுத்து, அவரிடமிருந்து தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டான். பிற்காலங்களில் பரிமாறப்படும் பொருட்களின் தேவை மற்றும் உற்பத்தி இப்பரிமாற்ற முறைக்கு ஒரு […]
வேர்வையின்றி வெற்றியில்லை….. பைபிள் கதை

மனிதனாகப் பிறந்த நமக்கு, கடவுள் பல்வேறு வரங்களைக் கொடையாகத் தந்திருக்கிறார். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதிலேதான் நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது. இதை அழகாக கிறிஸ்துவ மறையின் புனித நூலான திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதர் மக்களுக்கு ஒரு உவமையின் மூலமாக எடுத்துரைப்பதை இங்கு காணலாம். ஒருநாள் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு […]
நவராத்திரி

பாட்டி கொடுத்த முப்பெரும் தேவி செட், போன முறை திருச்சி போனபோது வாங்கின கிருஷ்ணர் உறியடி செட், மைசூர் சாலையில் அத்தை வாங்கித் தந்த அஷ்டலக்ஷ்மி செட். இப்படி ஒவ்வொண்ணும் பரணிலிருந்து இறங்க ,இறங்க நவராத்திரி களை கட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் காலிறுதித் தேர்வுக்கு இறுதியில் வரும் அந்தப் பத்து நாட்கள் நவராத்திரி விடுமுறை மறக்க முடியாத ஒன்று. ஒரு ஓரமாக டப்பாக்கள் எல்லாம் அடுக்கி, இந்த முறை வித்தியாசமான முறையில் படி செய்ய முயற்சி […]
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?

தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]
பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்

பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் […]
அழகே உன்னை ஆராதிக்கிறேன்

சோழர் கல்வெட்டில்
உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்…..
பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
சங்கம் வளர்த்த மதுரையை
தீக்கிரையாகாமல் காத்திருக்கலாம் ….