Archive for June, 2020
என்னால் சுவாசிக்க முடியவில்லை

“அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ” அமெரிக்க நாட்டுப் போர் வீரர் நினைவு நாளான மே மாதம் 25 ஆம் நாள், மினியாபொலிஸ் நகரின், நிழற் சாலையில் ஒலித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் ஓலக் குரல் பலரது மனங்களில் ஆழப் பதிந்து அமெரிக்கா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. செய்தித் தாள், சமூக ஊடகங்கள் முழுதும் இந்த மனிதரின் முகம் வியாபித்து உலக மக்கள் பலருக்கும் இந்த மனிதரின் முகம் பரிச்சயமாகிப் போனது. இந்தளவுக்குப் பிரபலமடைய ஜார்ஜ் […]
கம்பனடிப்பொடி

கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க………. கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க…… கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க……… தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என […]
தண்டனை

இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!! நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்! சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !! யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க! கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ? அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!! எடுக்கட்டும் கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!! கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]
இசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல்

ஜூன் 2 அன்று 77வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா அவர்களின் சிறப்பைப் பற்றி, மினசோட்டாவைச் சேர்ந்த இசை கலைஞர்கள் திருமதி. லக்ஷ்மி, திரு. செந்தில், திரு. சதீஷ், திரு. சரவணன் மோகன் அவர்களுடன் ஒரு இசை சார்ந்த உரையாடல். நல்ல கேட்பனுபவத்திற்கு ஹெட்போனில் கேட்கவும். உரையாடியவர் – சரவணகுமரன்.