Archive for August, 2020
கனடாவில் சுருதி பாலமுரளி இசை

Sruthi Balamurali will be doing an online live performance on Sunday, August 16th from 11am to 12.30pm EST in support of the establishment of a Chair in Tamil Studies at the University of Toronto. This is a very historical and noble initiative for Tamils around the world and requires everyone’s involvement and support. It would […]
கல்லூரிச் செலவிற்குத் தயாரா?

அமெரிக்காவில் அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் மூலம் பள்ளிக்கல்வி இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வரிப்பணத்தில் 8% கல்விக்காகச் செலவிட, மீதி செலவை மாநில அரசின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்கல்வி இலவசமாக அளிக்கப்படும் அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான கட்டணம் மிக அதிகம். அதையும் இலவசமாக அளிக்கலாமே என்று கேட்டால், அதற்கேற்ப மக்களால் வரி அதிகமாகக் கட்ட முடியுமா […]
அமெரிக்காவில் ஆடி மாதத்தில் அம்மனுக்குத் திருவிளக்குப்பூஜை

தமிழ்நாட்டில் பொதுவாகக் கோவில்களில்தான் விளக்குப்பூஜை செய்வார்கள். 2002-ஆம் ஆண்டில், இங்கு அமெரிக்காவில், செயிண்ட்லூயிஸில், ஒரே அடுக்கு மாடி இல்லங்களில் (apartment homes) இருந்த தோழிகள் நாங்கள் சேர்ந்து வீட்டில் விளக்குப்பூஜை செய்யலாம் என்று பேசினோம். அதன்படி, விநாயகர் துதியில் ஆரம்பித்து, ஹனுமான் சாலீசா, கந்தசஷ்டி கவசம், அஷ்டலஷ்மி ஸ்லோகம், மஹிஸாசுர மர்த்தினி (தமிழில் ‘உலகினைப் படைத்து’ என ஆரம்பிக்கும்), அதன் பிறகு 108 அம்மன் போற்றி, பிறகு மங்களம் என ஸ்லோகம் பட்டியல் தயார் செய்தோம். ஆரம்பத்தில் […]
மாஸ்க் மகோன்னதங்கள்

ஒரு கடைக்குள் நுழைந்தோமானால், நாம் காணும் அனைவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். முகத்தில் கண்கள் மட்டும் தெரிகிறது. அதிலும் சந்தேகப் பார்வை. இல்லை, அப்படியும் சொல்ல முடியாது. என்ன நினைக்கிறார்கள், நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்களா, முறைக்கிறார்களா என ஒன்றும் புரியவில்லை. சினேகமாக எப்போதும் போல் மற்றவர்களைக் காணும் போது புன்னகைக்கிறோம். நாம் புன்னகைப்பது அவர்களுக்குத் தெரியாது என்று புரிந்தும் சிரித்து வைக்கிறோம். அந்த நட்பான புன்னகை நமது மாஸ்கினுள் அடக்கமாகி விடுகிறது. கர்ம சிரத்தையாக, பெரும்பாலோர் மாஸ்க்குடன் […]
எது தான் சரி?

மதிய வெய்யில் சுட்டெரித்தது. வீட்டின் வாசலில், அந்த மர நாற்காலி இன்னும் சுட்டெரித்தது. ராமசாமி தாத்தாவிற்கு தொண்டை வறண்டது. சின்ன கமறல் எழுப்பினார். கையில் இருந்த செய்தித்தாளை மடித்து வைத்து யோசித்தார். உள்ளே இருந்து பாக்யம் லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்தார். “நான் கேட்கவே இல்லை ஆனால் எனக்கு தண்ணீர் வேணும்னு உனக்கு எப்படி தான் தெரியுதோ ?”. அ கேட்டு தான் கொடுக்க வேண்டுமா ? சின்ன புன்னகை மட்டும் பூத்து விட்டு உள்ளே செல்ல […]
ஊர்க்குருவி

ஊரின் பெரும் புள்ளிகள் ஆண்களும் பெண்களுமாய் சுமார் இருபது நபர்கள் ஆவேசமாய்த் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டார்கள். தலைமை ஆசிரியர் பெருமாள் பயந்து போய் வெளியே வந்து, “அய்யா என்ன விஷயம்யா….?” என்று விசாரித்தார் நடுங்கியபடி. “ப்ளஸ் ஒன் ப்ளஸ்டூ வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நடத்துற வாத்திச்சிய வரச் சொல்லுய்யா…..?” என்றார் ஊர்த் தலைவர் கருப்பையா பெருங் கோபத்துடன். இப்படி அவரின் பெயரை மட்டும் மொட்டையாகச் சொல்வதற்காக அவர் கோபித்துக் கொள்ளக்கூடும். அவர் மட்டுமல்லாமல் அவரின் ஊரே […]
இனி ஒரு விதி செய்வோம்

“ஊழல்லில்லாத அரசாங்கம், பஞ்சத்தில் வாடாத மக்கள், பாரங்கள் வாட்டாத கல்வி, இருள் கவ்வாத சீரான மின்சாரம் என்று எத்தனையோ அடுக்கடுக்கான சாதனைகள் உங்களோட நான்குமுறை ஆட்சி காலத்திலேயும் நடந்திருக்கிறது. டூ தௌஸண்ட் டுவென்டியில் நிறைய முரண்பாடான சிக்கல்களையும் கசக்கி பிழிய பட்ட மக்களுக்கு கிடைச்ச விடிவெள்ளியாக உங்க ஆட்சி அமைந்திருக்கிறது. எப்படி சார்? தெளிந்த நீரோடை போல வாழ்க்கையை மக்களுக்கு வழங்க சர்த்தியமாக்க முடிந்தது?” “எங்களை பாதித்த வாழ்க்கையை, தப்பான வழிகள்ல யோசித்து, திருப்பி சம்பந்தப்பட்டவங்களுக்கு […]
சுமை தாங்கி

“வாங்க,வாங்க”என்று பாசத்துடன் வரவேற்ற பெற்றோரைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் ராதிகா .தன் இரு பிள்ளைகளையும் காரிலிருந்து இறக்கி வாடகையைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.”எல்லோரும் சௌக்யமா? மாப்பிள்ளை வரவில்லையா? எப்படி இருக்கிறார்?”என்று கேட்ட அப்பாவின் அன்பான கேள்விகளின் பதிலுக்கு ‘எல்லோரும் நலமே’ என்று தலையசைத்தாள் நந்திதா. “வா! காபிகுடி, டிபன் சாப்பிடு, களைத்து போய் வந்திருப்பே, வெந்நீரில் குளிச்சுட்டு வாங்க’ என்று இரு பேரன்களையும் கட்டியணைத்தபடி கூறினாள் அம்மா. இந்த வீட்டில்தான் எத்தனை மகிழ்ச்சி அலைகள்,.இதிலிருந்து ஒரு துளியாவது […]