Archive for June, 2021
பசைமனிதன்

“நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்” அப்படி’ன்னு சொன்னா அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. இப்படித் தான் 1968 ஆம் ஆண்டு மினசோட்டாவின் 3M நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்பென்சர் சில்வர் (Spencer Silver) என்ற ஆராய்ச்சியாளர், விமானப் பாகங்களில் பயன்படுத்துவதற்கான, நன்றாக வலிமையாக ஒட்டும் தன்மையில் ஒரு பசையைக் கண்டுபிடிக்க முயற்சிக்க, அந்த நோக்கத்தை அடைய முடியாமல், மிகவும் இலேசாக ஒட்டும் பசையைத் தான் அவரால் உருவாக்க முடிந்தது. இந்த மிதமான பசையை ‘தேவையில்லாத ஆணி’ என்று […]
நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….

2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது. எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு ஆசைபட்டாலோ […]
ஓடிடியின் ஓட்டம்

பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன் என்பது பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கியப் பொழுதுபோக்கு துறையான திரையரங்கு வணிகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதே சமயம், ஓடிடி என்ற பொழுதுபோக்கு துறைக்கு இது வசந்த காலமாகிவிட்டது. பல ஆண்டுகளாக இத்துறை இயங்கி வந்தாலும், கோவிட்-19 இத்துறையின் முன்னேற்றத்தைத் தூண்டி விட்டுக் கேம் சேஞ்சராக உதவியது. தெருக்கூத்து, நாடகம், திரைப்படம், தொலைகாட்சி, சிடி, டிவிடி என்று கலை படைப்புகள் நம்மை வந்து சேரும் முறைகள் காலத்துடன் மாறிக் கொண்டே தான் […]
வெங்காயம் வெட்டும் விதம்

கோடை காலம் வருகிறது உள்வீட்டு சமையல் அறையிலும் விசாலமாக வெளியிடங்களிலும் ஒன்று கூடி சமைத்து மகிழ்வது வடஅமெரிக்க வழக்கம். வெங்காயங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பலவகைப்படும். ‘ஏலியம் சீப்பா’ (Allium Cepa) என்பது வெங்காயத்தின் தாவரவியல் பெயர். வெங்காயமானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஆசியாவிலும் அதன் அருகாமை நாடுகளிலும் பயிராக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்கிறது சரித்திரம். தமிழர்கள், வெங்காயம் இல்லாமல் சாப்பிடுவது மிகக் குறைவே. இன்று வெங்காயம் வெட்டுவது பற்றியான கைமுறையைப் பார்ப்போம். இதே […]