admin
admin's Latest Posts
மனித வக்ரங்கள்
”கணேஷ், நான் கேள்விப்பட்டது உண்மையா?”.. பாரதியின் குரலிலிருந்த கோபத்தை உடனடியாக உணர்ந்தான் கணேஷ். எதைப்பற்றிக் கேட்கிறாள் என்று உள் மனது சொல்ல, வயிற்றிற்கடியில் ஒரு தீப்பந்து உருண்டு தொண்டைவரை வந்ததுபோல் உணர்ந்தான். அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா என்று மனது பயமுறுத்த, அதுதான் என்று முழுதாகத் தெரியும்வரை, தானாக எதுவும் வாய்விடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் இருந்தான். “எதப்பத்தி கேக்ற, பாரதி” … குரலில் வழக்கத்திற்கதிகமான குழைவை ஏற்படுத்திக் கொண்டு கேட்டான் கணேஷ். “நோக்கு நன்னாத் தெரியும் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)
ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக் முடிய, காத்திருந்த படங்கள் எல்லாம் கடந்த இரு மாதங்களாக வர தொடங்கியது. அதனால், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகி இருந்த பாடல்களை, திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இரும்புத்திரை – முதல் முறை விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்த ஹிட் திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசிய திரைப்படம். யுவன் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருந்தார். இந்த ‘முதல் முறை’ அவருடைய டிபிக்கல் சாங் […]
உங்களுக்குத் தெரியுமா?
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய சில தெரிவுகள் வண்ணத்துப்பூச்சிகள் பூவில் இருந்து அமிழ்தத்தை (nectar) தமது நீண்ட தும்பிக்கை வாய்மூலம் உறிஞ்சிக் குடித்துக் கொள்ளும். சில வகை வண்ணத்துப்பூச்சிகள் பழங்களில் இருந்து இரசத்தையும், நீர் போன்றவற்றையும் உட்கொள்கின்றன. பல வண்ணத்துப் பூச்சிகள் உணவருந்த ஈரமான இடத்திற்கு வருகை தருவது சேற்றுக்கும்மாளம் (puddle party) என்றழைக்கப்படும். பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்க்கை 2 வாரங்களே. ஆயினும் வட அமெரிக்க இராச வண்ணத்துப் பூச்சிகள்( Monarch Butterflies) அவற்றின் கால நிலைப் பெயர்ச்சி சந்ததிகள் […]
அமெரிக்கக் கெய்ஜின் உணவு
கடல் உணவு ரசிகரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் […]
வாசகர்களுக்கு வணக்கம்!
நீண்ட நாட்களாக வாசகர்களைத் தலையங்கத்தின் மூலம் சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். மினசோட்டா வாசகர்கள் கோடையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பர் என நம்புகிறோம். இந்தியா, இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் வெயிலின் உக்கிரம் அதிகமான காலமிது என்று நினைக்கிறோம். மனிதன் பொதுவாகவே எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் ஏதோ ஒன்றைக் குறையாக நினைத்து வாழ்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளான் என்று தோன்றுகிறது. எந்தத் தட்ப வெப்பமாயினும் அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் எவரும், தட்ப வெட்பம் குறித்துக் கவலையுற மாட்டார்கள் […]
பட்டமளிப்பு விழா 2018
மினசோட்டாவில் உள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 20 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தைத் தெரிவித்தனர். அவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் பள்ளிக் […]
காலா!!
வாரணம் பொருத மார்பு.. வரையினை எடுத்த தோள்கள் … நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா… தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் …. இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் […]
காலா சொல்லும் பத்துப் பாடங்கள்
இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள், தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம். சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் […]
முடிவில்லாப் பயணம்!!
மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்…! கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …? காதல் நெஞ்சில் கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …! மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன் மனதாலே ..! இன்னிசை மழையில் நனைந்து […]







