admin
admin's Latest Posts
பட்டமளிப்பு விழா 2018

மினசோட்டாவில் உள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 20 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தைத் தெரிவித்தனர். அவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் பள்ளிக் […]
காலா!!

வாரணம் பொருத மார்பு.. வரையினை எடுத்த தோள்கள் … நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா… தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் …. இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் […]
காலா சொல்லும் பத்துப் பாடங்கள்

இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள், தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம். சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் […]
முடிவில்லாப் பயணம்!!

மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்…! கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …? காதல் நெஞ்சில் கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …! மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன் மனதாலே ..! இன்னிசை மழையில் நனைந்து […]
தூத்துக்குடித் துயரம்

மயானமாகக் காட்சியளிக்கிறது தூத்துக்குடி! ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம் நூறாவது நாளை எட்டிய நிலையில், தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்கப் பேரணியாகச் சென்ற பொது மக்கள் போலீஸாரால் சுடப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, இன்னும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 13 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக இணையம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வரும் […]
ஒரு நாள் விரதம்

“அப்பா“ பத்து வயது விக்னேஷ் குரல் கொடுத்தான். “ம்” என்ற ஒற்றை எழுத்தாக பதில் அளித்தான் அரவிந்த். “அப்பா” மீண்டும் கவனம் ஈர்க்கும் விதமாக ஒரு ஏற்றத்துடன் அழைத்தான் விக்னேஷ். “சொல்லு “.. ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாறி பதில் வந்தது. சமையல் அறையில் இருந்து கௌசி, “அரவிந்த் , விக்னேஷ் ஏதோ உங்க கிட்ட சொல்ல வரான் . தயவு செய்து கொஞ்சம் என்னன்னு கேளுங்க “ கணிப்பொறி திரையில் ஒரு கண் வைத்தபடியே, […]
எனைப் பெத்தவளே …!!

இருட்டு அறையின் இதயத் துடிப்பில் இன்பமாய் உறங்கினேன் இனி வேண்டினாலும் கிடைக்குமோ ..! கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே குலசாமியா காத்தவளே ..! அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே ..! உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே ..! எனைப் பெத்தவளே ..!! நீ ஆண்டு நூறு வாழவேணும் …!! எனைப் பெத்த மகராசி ..!! […]
காதல்

அந்தி சாயும் வேளையிது மல்லியின் வாசம் வருடுகிறது தென்றல் என்னை இழுக்கிறது காதலன் வரவிற்காக ஏங்குகிறது …! சோலைக்குயில் கூவும் நேரமிது உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது..! காதலில் இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில் சாய்ந்திடத் துடிக்கிறது …! மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம் இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது இரவின் நீலத்தை வேண்டுகிறது காதலனின் வரவை […]
வித்தகன் பாலகுமாரன்!

என்னெழுத்தின் வித்தவன் எழுதுவதில் வித்தகன் எத்துறையிலும் வித்துவான் எத்தலைப்பையும் விளக்குவான்! மாதவப் பெரியோரையும் மாதவிடாய்த் துயர்களையும் மானுடனின் வாழ்க்கையையும் மாண்புடனே படைத்திட்டவன்!! இறையருளை ஏத்தியவன் இரைந்துநீதி பேசியவன் இகவாழ்வு நீத்துச்சென்று இறையடியில் அமைதிகாண்க!! -மதுசூதனன் (Picture Courtesy: https://www.writerbalakumaran.com)