\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for October, 2018

ஒரு நாள் இரவு ..

Filed in கதை, வார வெளியீடு by on October 28, 2018 0 Comments
ஒரு நாள் இரவு ..

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை. சுழன்று, சுழன்று அடித்த காற்று ஜன்னல் கண்ணாடியைச் சடசடவென அதிரச் செய்தது. தெருவோர மஞ்சள் விளக்கில் நாலாபுறமும் பறந்த பனித்துகள்களுடன், ஏற்கனவே தரையில் விழுந்திருந்த பனியும் கிளம்பி பெரிய பனிப்படலத்தை உருவாக்கியிருந்தது தெரிந்தது. இதுவரையில் ஏழெட்டு அங்குல பனி விழுந்திருக்கலாம். நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும், மேலும் சுமார் ஒண்ணரை அடிக்கான  பனிப்பொழிவு தொடருமெனவும் ரேடியோவில் சொன்னார்கள். டேபிளிலிருந்த […]

Continue Reading »

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம். 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். […]

Continue Reading »

ஆமென்!

Filed in கதை, வார வெளியீடு by on October 28, 2018 0 Comments
ஆமென்!

”ஏண்டி லக்‌ஷ்மி…. நியூஸ் கேட்டியா?”, மூச்சிறைக்க பேஸ்மெண்டிலிருந்து மேலேயிருக்கும் சமையலறைக்கு ஓடி வந்தான் கணேஷ். அப்பொழுதுதான் ஃபோன் பேசி முடித்து, அந்த ஃபோனையும் கையிலேயே எடுத்துக் கொண்டு வந்திருந்தான்… “என்னன்னா, என்ன நியூஸ், யாரு ஃபோன்ல?”. வழக்கமாக அவ்வளவாகப் பதற்றமடையாத கணவன் பதறுகிறானே என்று அவளுக்குப் பதற்றம். இந்தியாவிலிருந்த வயது முதிர்ந்தவர்களெல்லாம் ஒரு முறை அவளது மனக்கண் முன்னே வந்து சென்றனர். ”யாருக்கும் எதுவும் ஆகியிருக்கக்கூடாது ராகவேந்திரா” என்று தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். ”ஜோஸஃப் ஃபோன் […]

Continue Reading »

முயன்றிடு …

முயன்றிடு …

செயலைச் செய்யும் முன் முயன்று தான் பார்ப்போமோ  என்று முனைப்பதல்ல முயற்சி எண்ணங்கள் கூட செயல்களும் செம்மையாய்ச் செய்தல் வேண்டும் விளைவுகள் எண்ணாது விடியலைப் படைத்திட வேண்டும் பலவித முயற்சிகள் வரையற்ற தோல்விகள் காயங்களில் படர்ந்த அனுபவங்கள் இவையெல்லாம் ஒரு நாள் மலரும் வெற்றி என்ற கனியாய் … ச.கிருத்திகா

Continue Reading »

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும்.  (Special elections) இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான  (House Representative)பிர தேர்தல் அதிபர் […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 4

அழகிய ஐரோப்பா – 4

(அழகிய ஐரோப்பா – 3/அந்த ஏழு நாட்கள்) முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் […]

Continue Reading »

ரோஜா

ரோஜா

பலர் உன்னைப் பார்த்து புகழ்ந்தார்கள் அவர்களுக்கு உன் அழகு மட்டுமே தெரிந்தது!   உன்னை உன் தாயிடமிருத்து பிரித்தவர்களென அவர்களை நீ வெறுக்கவில்லை!   இப்போது உணர்ந்தேன் உனது  அழகு – உன் தியாகம் மட்டுமே!     ச.கிருத்திகா பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி கோபி.

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 3

அழகிய ஐரோப்பா – 3

அந்த ஏழு நாட்கள் (அழகிய ஐரோப்பா – 2/அவளும் நானும்) “ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள் “சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன். வளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள். “குழந்தைகளின் வரிசை” என்று அவள் சொன்னதும் என்னிடம் […]

Continue Reading »

96 – திரைப்பட விமர்சனம்

96 – திரைப்பட விமர்சனம்

ஒரு மாமாங்கத்திற்கு ஒருமுறை மெச்சிக் கொள்ளும்படி ஒரு காதல் திரைப்படம் தமிழில் வெளியாகும். அப்படி ஒரு படம் இம்மாதம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்துள்ள 96 தான் அப்படம். பிரிந்த காதலர்கள் சந்தித்தால் என்னவாகும் எனும்போது அதற்குப் பல பதில்கள் உருவாகலாம். அறிமுக இயக்குனர் பிரேம்குமார் பார்ப்போரை நெகிழச்செய்யும் வண்ணம் ஒரு பதிலை இப்படத்தில் கூறியிருக்கிறார். இயற்கை புகைப்படக் கலைஞராகவும், புகைப்படக் கலை ஆசிரியராகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு சமயம் தனது […]

Continue Reading »

மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)

மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)

இசை என்னும் தங்கச் சங்கலியால் உலக மக்கள் எல்லோரையும் இணைக்க முடியும் என்பது வெறும் கூற்றல்ல. அது  நிஜமாவதை நேரில் காண மினசோட்டா மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. நம் மினசோட்டா வாழ் தமிழ் மக்களின் பெருமை வீணை விதூஷி நிர்மலா ராஜசேகர் என்றால் அது மிகை ஆகாது . அவரின் மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)  “இசைத் தட்டு” வெளியீட்டு விழா அக்டோபர் 28 ஆம் தினம் தி […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad