Archive for October, 2020
அவலங்கள்

உள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் […]
தாதுண் பறவை

அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார். பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு ‘இம்’ போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து […]
துறவு

“என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?” நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், ‘இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை’ மனதுக்குள் ஏதோ பாரமாய் […]
காந்தி ஜெயந்தி நினைவூட்டல்

பன்முறை படித்துக்கூறினாய் வன்முறை வழி ஆகாதென்று உன்னுயிர் போனது வன்முறை பேயதானால் முதன்முறை மானுடம் மறைந்தது உன்னுயிரை பறித்தெடுத்து பல்லுயிர் பறித்துக்கொண்டு இன்னுமேன் ரத்தவெறி இந்த இனவெறி ஜாதிவெறி மதவெறி கொண்ட நெறியர்கள் போர்வையில் வெறியர்களுக்கு மற்றவெறிகளை பின்னுக்குத்தள்ளி மதவெறிதனை முன்னிறுத்தும் ரத்தவெறி காட்டேரிகள் உன்வழி உன் பாதை பயணிக்கும் நாள்தனை எதிர்பார்த்து ஏங்குகிறோம் காந்தி எனும் சரித்திரசகாப்தம் என்றும் எம் நினைவில் ஏந்தி காந்தி கண்ட சாம்ராஜ்யம் என்று வருமென மனம் ஏங்கி காந்தி ஜெயந்தி […]