\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

நல்வாழ்வின் ஆதாரம்

நல்வாழ்வின் ஆதாரம்

நன்றியுணர்வுடன் வாழ்வை அணுகுவது, நமது அன்றாட அனுபவத்தை அழகானதாக மாற்றுகிறது. மகிழ்சியான சிறிய தருணங்கள் முதல் மிகப்பெரிய பொக்கிஷங்கள் வரை, எதுவாகயிருந்தாலும், நம்மிடம் இருப்பதை நாம் பாராட்டும்போது, ​​கடினமான காலங்களிலும் கூட மகிழ்ச்சியைக் காண உதவும் வளமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறோம். தேவைப்படுபவர்களுக்கு உதவுவது என்பது பொருளுதவியாக கொடுப்பது மட்டுமல்ல. மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதாக இருந்தாலும், மற்றவர்களின் துயரங்கள், சங்கடங்களைக் கரிசனத்துடன் காது கொடுத்து கேட்பதாக இருந்தாலும், மற்றவர்களை ஆதரிப்பது அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குகிறது. இவ்வித அனுசரனைகள் […]

Continue Reading »

விடாமுயற்சி – திரை விமர்சனம்

விடாமுயற்சி – திரை விமர்சனம்

1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ப்ரேக்டௌன்’ எனும் திரைப்படத்தைத் தழுவி வந்த தமிழ்த் திரைப்படம் “விடாமுயற்சி”. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த கர்ட் ரஸ்ஸல் முழுவதுமாக மறந்து விட்டிருக்க, நம்ம ‘தல’யின் அளவான நடிப்பு அந்தத் திரைப்படத்தை ஒப்பீடலாக மனதிற்குள் கொண்டு வரவேயில்லை என்பதுதான் உண்மை. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜித்தும், த்ரிஷாவும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான அஜர்பெய்ஜானின் தலைநகரான ‘பாகு’வில் வசித்து வருகின்றனர். சில பல காரணங்களுக்காக விவாகரத்து செய்வது […]

Continue Reading »

பனிப்பூக்கள் அகவை 13

பனிப்பூக்கள் அகவை 13

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.

Continue Reading »

நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல்

நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல்

சமீபத்தில் மினசோட்டா வந்திருந்த நவீனத் தமிழ் மேடை நாடக உலகின் மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் அவரது நீண்ட நெடிய மேடை நாடக அனுபவம் மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள முடிந்தது. நேர்காணலின் முதல் பகுதி பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்

Continue Reading »

கேட்பரீஸ்…

கேட்பரீஸ்…

“ஏன்னா … கேட்டேளா இந்தக் கதைய?” – வழக்கமான ராகத்துடன் லக்‌ஷ்மியின் கேள்வி வந்து விழ, அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருந்த கணேஷ் தலையை நிமிர்த்தி, கண்ணாடியை மூக்கின் மத்தியப் பகுதிக்குச் சற்று இறக்கி, அதற்கு மேலே கண்களை ஊடுருவி, அவளிருக்கும் திசை பார்த்து, “என்னடி, என்ன ஆச்சு?” என்றான். “வேலண்டைன்ஸ் வீக் பத்தித் தெரியுமான்னா?” – தனது மொபைல் ஃபோனில் வந்து குதித்த லிங்க்கின் மூலம் படித்துத் தெரிந்து கொண்டு அவனிடம் கேட்டாள். “என்னா, வீக்கா?” […]

Continue Reading »

குவளைப்பாட்டி

Filed in கதை, வார வெளியீடு by on February 2, 2025 5 Comments
குவளைப்பாட்டி

காலை நேர பதட்டம். வேகமாக கல்லூரி போக தயாராகிக் கொண்டு இருந்தாள் அதிதி.  வெளியில் அம்மாவின் கால்கள் தையல் இயந்திரத்தில் ஒட்டிய சத்தம் காதை கிழித்தது. அந்த சத்தம் பழகி போன எரிச்சலை கொடுத்தது அதிதிக்கு.  சமையல் அறையின் உள்ளே சென்று மதிய உணவை நோட்டம் விட்டாள். அம்மா கொடுத்த மதிய உணவை எடுக்காமல் திருட்டுத் தனமாக கிளம்பினாள். “அதிதி. மத்தியானம் தயிர் சாதம் வெச்சுருக்கேன். எடுத்துட்டு போ. உடம்பு சூடு ஆகுது. வெளில சாப்பிட வேண்டாம்”. […]

Continue Reading »

வர்த்தகப் போர் – இறக்குமதி வரி

வர்த்தகப் போர் – இறக்குமதி வரி

“என்னைப் பொறுத்தவரை, இறக்குமதி தீர்வை (Tariff), அகராதியில் உள்ள மிக அழகானதொரு சொல்லாகும். எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை”.  தனது தேர்தல் பிரச்சாரங்களில் ‘இறக்குமதி தீர்வையை’ முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து வென்று, இரண்டாம் முறை அதிபராகப் பதவியேற்கவுள்ள திரு. டிரம்ப்பின் வார்த்தைகள் இவை. வெற்றிக்குப் பிறகு, அவர் தனது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் முதற்கட்டமாக, சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒட்டுமொத்தமாக  […]

Continue Reading »

‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்

‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்

“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு இஷ்யூ நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த பார்ட்டிலேர்ந்து ஒரு கண்டன கூட்டம் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க.. அதுல பெர்பார்ம் பண்றதுக்காக சில ஆர்டிஸ்டையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் டிராவல் பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் டல் அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க கேஷுவலா பேசலாம், மக்களை கவர் பண்ணி அட்ராக்ட் பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க ஷாக் ஆகி மைக்கை […]

Continue Reading »

நெருக்கடியில் வீட்டுக் காப்பீடு

நெருக்கடியில் வீட்டுக் காப்பீடு

‘யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்’ என்ற பழமொழியைப் பலர் அறிந்திருக்கக் கூடும். வெவ்வேறு பொருள் தரக்கூடிய இப்பழமொழி, வீடு கட்டுவது பெரும்பாடென்றால், அதனைப் பழுதில்லாமல் பராமரிப்பது அதனினும் சிரமம் எனுமொரு கருத்தையும் தெரிவிக்கிறது. தலைக்குமேல் ஒரு நிரந்தரக் கூரை என்பது சாத்தியப்படும்பொழுது, கனவு வசப்பட்ட சந்தோஷம் வழிந்தாலும்,  அரும்பாடுபட்டு கட்டிய அல்லது வாங்கிய வீடு பல ஆண்டுகள் பாதுகாப்பாக நிலைத்திருக்க வேண்டுமென உள்ளுக்குள் அச்சமும் தொற்றிக் கொள்ளும். ஒரு காலக்கட்டம் வரையில், வீட்டுக் காப்பீட்டுத் […]

Continue Reading »

இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

அது ஒரு அழகான நட்பாகத் தொடங்கியது. நானும் என் மனைவியும்,பல வருடங்களாக ஒரே கட்டடத்தில் வசித்து வந்தோம். அதே கட்டடத்தில் ஆதவன், யாழினி என்ற கணவன் மனைவி வசித்து வந்தனர். அவ்வப்போது சின்ன சின்ன புன்சிரிப்புகள், விசாரிப்புகள் என்ற அளவில் தான் எங்கள் நட்பு இருந்தது. பின்னர் தொற்றுநோய் தாக்கியது. இரு குடும்பங்களுக்கும் அதிக நேரம் கிடைத்து, நெருக்கம் ஏற்பட்டது. உணவு, பானங்கள், புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் உண்மையான நண்பர்கள், கடவுளுக்கு […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad