\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for May, 2020

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை

நான்மணிக்கடிகை  காட்டும்  நீர்  மேலாண்மை

உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]

Continue Reading »

இலட்சியப்பெண்

இலட்சியப்பெண்

மனிதஇனம்பிறந்தது அதில்பெண்ணினமும்கலந்தது! தாயின்கருவில்இருந்தபோது அடைந்திராததுன்பமுண்டோ? அதையும்வென்றுஜனித்துவிட்டாள் பூமிதனில்இலட்சியப்பெண்!!   வறுமைஎன்னும்காரிருள்  தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து  வீறுநடைகொண்டாள்தன்இலக்கில்!!   எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண்!!   காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது! உறவுஎன்னும்ஓடம்கரைசேர  துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை!!                    –       சிவராசாஓசாநிதி

Continue Reading »

ஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்

ஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்

1962 டிசம்பர்2ம் தியதி. புது டில்லி ரயில்வே ஸ்டேஷன். ஃப்ளாட்ஃபாம் நம்பர்1. மதியம் பகல்11 மணி. புது டில்லியிலிருந்து  இடார்சி நாகபூர், காஜீபேட் விஜயவாடா வழியாக மதராஸ் செல்லும் “கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்” இன்னும் சில நிமிடங்களில்  புறப்பட இருக்கிறது என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறைகுறை தமிழிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. சுந்தர் ராமன் தன்னுடய மனைவி ராதையுடன் போர்ட்டரை விரட்டிக்கொண்டு அவசர அவசரமாக4 வது பெட்டியில் ஏறினார்கள். ஒரு சீட் கூட காலியில்லை. போர்ட்டர் உள்ளே சென்று […]

Continue Reading »

போதை

போதை

போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்தப் பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான்‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு.அநியாயம் முத்திப் போச்சுன்னா அவதாரம் எடுப்பேன்னு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்தப் பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டுச் சிரிப்போடு செவி மடுத்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்தச் சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படிச் சிரிக்ரீங்க??’ ‘ஒண்ணுமில்ல’ ‘சரி விடுங்க. இந்த40 வருஷமா உங்களோட குடித்தனம் […]

Continue Reading »

விண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை

விண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை

வருகிற புதன்கிழமை மே 27 ஆம் தேதியன்று, சாதனை புரிவதற்கு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் (NASA), தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் (SpaceX) தயாராகி வருகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் க்ரு ட்ராகன் (Crew Dragon) சீறிக்கொண்டு கிளம்ப இருக்கிறது. வரும் புதன் மாலை 4:33 மணிக்கு இரு விண்வெளி வீரர்கள், ராபர்ட் மற்றும் டக்ளஸ் இருவரையும் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து சர்வதேச […]

Continue Reading »

நாவிதம்

நாவிதம்

“ஏண்டி… அதான் லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சு, ஒண்ணொண்ணா தொறக்க ஆரம்பிச்சுட்டாளே… போய்ட்டு வரேனேடி…. ” சொன்ன கணேஷை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் லக்‌ஷ்மி. “என்ன நெனச்சுண்டு இருக்கேள்? ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா?” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா? நேக்கு வந்தாப் பரவாயில்லயா?” என்றான். “என்ன,அசடாட்டமா பேத்திண்டு, யாருக்கும் வரப்படாதுதான்.. அதுக்குத்தான் எங்கயும் போக வேண்டாம்னு சொல்றது…” என்றாள். “சரிடி,ரெண்டு மாசத்துக்கு […]

Continue Reading »

வல்லவன் வாழ்வான்

Filed in தலையங்கம் by on May 26, 2020 0 Comments
வல்லவன் வாழ்வான்

“முதலில் அமெரிக்கா”! (America First) – அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் கோஷங்களில் மிகப் பிரபலமான சொற்றொடர் இது. உலக நாடுகளின் வளர்ச்சிப் பரிமாணங்களில் அமெரிக்கா முதலில் நிற்கும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லி வந்த சொற்றொடர் இன்று மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் பெருங்கொள்ளை நோயின் பாதிப்பைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி பலித்துள்ளது. திருவாளர் ட்ரம்பின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். உண்மையில் பல நாடுகள் வெளிப்படைத்தன்மையும், […]

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் இந்த பகுதியில் விளக்குகிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

கார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்

கார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்

சமீபத்தில் கௌதம் மேனன் யூ-ட்யூபில் வெளியிட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம், 2010இல் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் சிறு தொடர்ச்சியாக வந்துள்ளது. அப்படம் குறித்த குறு சிறு பார்வைகள் கொண்ட உரையாடல். பங்கு கொண்டோர் – மனோ அழகன், வினித்ரா & சரவணகுமரன். படத்தைக் காண,

Continue Reading »

banner ad
Bottom Sml Ad