கதை
துறவு

“என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?” நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், ‘இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை’ மனதுக்குள் ஏதோ பாரமாய் […]
பாலு ஒரு நிலா

“ஏன்னா…. என்ன பண்ணிண்ட்ருக்கேள்? டி.வி.மாட்டுக்கு ஓடிண்டு இருக்கு” புடவையின் முந்தானையால் நெற்றியில் மெலிதாய்த் தோன்றியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கணவனைக் கேட்டுக் கொண்டு, அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. “ஏண்டி… ஏன்… என்ன கேக்குற?“… ஒன்றும் புரியாதவனாய்த் தலையை உயர்த்தி, சற்றே சாய்த்து, ரீடிங்க் க்ளாஸ் மேல் கண்களை ஓட்டி, மனைவியைப் பார்த்தபடி கேட்டான் கணேஷ் ..டி.வி.யில் அன்றைய தினத் தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, அவனோ சோஃபாவில் அமர்ந்து லேப் டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான். தலையை […]
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

சேலத்திலிருந்து வந்த தனியார் பேருந்து பழனி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கிய பிறகு, இராஜமாணிக்கமும் கதிர்வேலனும் இறங்கினர். இருவர் தோள்களிலும் முதுகு பை மற்றும் கைகளில் ஒரு பயணப்பை. இருவருக்கும் ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். “என்னடா கதிர், நம்ப சேலம் பஸ் ஸ்டாண்ட் பரவாயில்ல போல! ஓரே குப்பையா இருக்கு பழனி பஸ் ஸ்டாண்டு!” “இறங்கி இன்னும் இரண்டு அடிக்கூட எடுத்து வைக்கல! அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சுட்டாயா? ஒரு நாளைக்கு பல ஆயிரம் […]
சூடு

புகழினி கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். அடுத்து அவளுக்கு ஒரு நல்ல வரனைத் தேடி கல்யாணத்தை முடித்து, தனது கடமையை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாய் இறங்கி இருந்தார் அவளது தந்தை சாமிநாதன். தினமும் தரகர்கள் தன் பையில் சில ஜாதகக் கட்டுகளைச் சுமந்து கொண்டு அவள் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்தனர். மறுபக்கம் மகளுக்கு வாழ்க்கை துணையாக நல்ல குணம் படைத்த ஒருவன் அமைந்து விட வேண்டுமென்ற ஆதங்கத்தில் அவள் […]
எரிந்த பனைகள்

‘அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது? வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு ‘இல்ல… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென […]
தெய்வமும் மனிதனாகலாம்

சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையைத் தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும், எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து […]
2020-இல் அந்த ஏழு நாட்கள்

ஞாயிறு காலை: சென்னையில் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பெரிய புள்ளிகளில் ஒருவர். சக்ஸஸ்ஃபுல்லாக பல தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளி கண்ணன் மற்றும் அவர் மனைவி இருவரும் மருத்துவமனையில் மிகுந்த கவலையுடன் ICU கதவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். காரணம், அவர்களின் மகள் சந்தியா நேற்றுக் காலைதான் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் கொரோனா என்ற கொடிய நோயினால் பாதிக்கபட்டு, மூச்சுவிடக் கூடக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்குச் சிறு வயதிலிருந்து ஆஸ்த்மா இருந்தது. இருபத்தி ஏழு வயது ஆகியும் […]
எது தான் சரி?

மதிய வெய்யில் சுட்டெரித்தது. வீட்டின் வாசலில், அந்த மர நாற்காலி இன்னும் சுட்டெரித்தது. ராமசாமி தாத்தாவிற்கு தொண்டை வறண்டது. சின்ன கமறல் எழுப்பினார். கையில் இருந்த செய்தித்தாளை மடித்து வைத்து யோசித்தார். உள்ளே இருந்து பாக்யம் லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்தார். “நான் கேட்கவே இல்லை ஆனால் எனக்கு தண்ணீர் வேணும்னு உனக்கு எப்படி தான் தெரியுதோ ?”. அ கேட்டு தான் கொடுக்க வேண்டுமா ? சின்ன புன்னகை மட்டும் பூத்து விட்டு உள்ளே செல்ல […]
ஊர்க்குருவி

ஊரின் பெரும் புள்ளிகள் ஆண்களும் பெண்களுமாய் சுமார் இருபது நபர்கள் ஆவேசமாய்த் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டார்கள். தலைமை ஆசிரியர் பெருமாள் பயந்து போய் வெளியே வந்து, “அய்யா என்ன விஷயம்யா….?” என்று விசாரித்தார் நடுங்கியபடி. “ப்ளஸ் ஒன் ப்ளஸ்டூ வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நடத்துற வாத்திச்சிய வரச் சொல்லுய்யா…..?” என்றார் ஊர்த் தலைவர் கருப்பையா பெருங் கோபத்துடன். இப்படி அவரின் பெயரை மட்டும் மொட்டையாகச் சொல்வதற்காக அவர் கோபித்துக் கொள்ளக்கூடும். அவர் மட்டுமல்லாமல் அவரின் ஊரே […]
இனி ஒரு விதி செய்வோம்

“ஊழல்லில்லாத அரசாங்கம், பஞ்சத்தில் வாடாத மக்கள், பாரங்கள் வாட்டாத கல்வி, இருள் கவ்வாத சீரான மின்சாரம் என்று எத்தனையோ அடுக்கடுக்கான சாதனைகள் உங்களோட நான்குமுறை ஆட்சி காலத்திலேயும் நடந்திருக்கிறது. டூ தௌஸண்ட் டுவென்டியில் நிறைய முரண்பாடான சிக்கல்களையும் கசக்கி பிழிய பட்ட மக்களுக்கு கிடைச்ச விடிவெள்ளியாக உங்க ஆட்சி அமைந்திருக்கிறது. எப்படி சார்? தெளிந்த நீரோடை போல வாழ்க்கையை மக்களுக்கு வழங்க சர்த்தியமாக்க முடிந்தது?” “எங்களை பாதித்த வாழ்க்கையை, தப்பான வழிகள்ல யோசித்து, திருப்பி சம்பந்தப்பட்டவங்களுக்கு […]